Archives: ஜூலை 2022

கனவு அணி

நண்பர்களான மெலனி மற்றும் ட்ரெவோர், இருவரும் சேர்ந்து மைல் கணக்கான மலைப் பாதைகளில் பயணம் செய்துள்ளனர். இருப்பினும், இருவராலும் தனித்தனியாக அவ்வாறு செய்ய முடியாது. ஸ்பைனா பிஃபிடா என்னும் குறைபாடுடன் பிறந்த மெலனி சக்கர நாற்காலியைப் பயன்படுத்துகிறார். ட்ரெவோர், கிளாகோமா என்னும் வியாதியினால் தனது கண் பார்வையை இழந்தார். கொலராடோ வனப்பகுதியை அனுபவிப்பதற்கு தாங்கள் ஒருவருக்கு ஒருவர் சரியான துணை என்பதை இருவரும் உணர்ந்தனர். அவர்கள் பாதைகளில் நடக்கும்போது, ட்ரெவர் மெலனியை முதுகில் சுமந்து செல்கிறார்;. அவளோ, அவளின் வார்த்தைகளின் மூலம் அவனுக்கு வழிகாட்டுகிறாள். அவர்கள் தங்களை ஒரு “கனவு அணி” என்று சொல்லிக்கொள்கிறார்கள். 

கிறிஸ்துவின் சரீரமான இயேசுவை விசுவாசிப்பவர்களை, இதே போன்ற “கனவு அணி” என்று பவுல் விவரிக்கிறார். பவுல், ரோம விசுவாசிகள் தங்களின் தனிப்பட்ட தாலந்துகள் எவ்வாறு அந்த குழுவிற்கு உபயோகமாய் இருக்கிறது என்று கண்டுபிடிக்க வலியுறுத்திகிறார். நமது உடல் பல உறுப்புகளால் ஆனது. வெவ்வேறு செயல்பாடுகளுடன் நாம் “ஒரு ஆவிக்குரிய சரீரத்தை உருவாக்குகிறோம்." நம்முடைய வரங்கள், சபையின் சேவைக்காய் பயன்படவேண்டும் (ரோமர் 12:5). கொடுப்பது, ஊக்குவித்தல், கற்பித்தல் அல்லது வேறு எந்த ஒரு ஆவிக்குரிய வரங்களாக இருந்தாலும், அவைகளை அனைவருக்கும் சொந்தமானதாகக் கருதுமாறு பவுல் அறிவுறுத்துகிறார் (வச. 5-8).

மெலனி மற்றும் ட்ரெவோர், ஆகிய இருவரும் தங்களின் இயலாமையில் கவனம் செலுத்துவதில்லை. மற்றவருடன் ஒப்பிட்டு, தங்களிடம் இருப்பதைக் குறித்து அவர்கள் மேன்மைப்பாராட்டவும் இல்லை. மாறாக, அவர்கள் மகிழ்ச்சியுடன் தங்களால் இயன்ற சேவையை ஒருவருக்கொருவர் கொடுத்து, இருவரின் ஒத்துழைப்பால் எவ்வளவு சிறப்பாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்கிறார்கள். நம்முடைய தாலந்துகளையும் மற்றவர்களுடன் இணைத்து, கிறிஸ்துவின் நாம மகிமைக்காய் பயன்படுத்துவோம். 

நம்மை விரும்பும் உணவுகள்

நான் ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி, “பிடித்த விஷயங்கள்" என்ற கருப்பொருளை அடிப்படையாய் வைத்து, அலங்காரம், பரிசுகள் மற்றும் உணவுகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். பிறந்தநாள் கொண்டாடும் பெண்ணிற்கு பன்னீர், பழங்கள், மற்றும் சிவப்பு வெல்வெட் கேக் ஆகியவைகள் பிடிக்கும் என்பதால், தொகுப்பாளினி பன்னீரை வறுத்து, பழங்களை வெட்டி, பிடித்த கேக்கை ஆர்டர் செய்தார். நமக்கு பிடித்த உணவுகள் நம்மைப் பார்த்து “ஐ லவ் யூ” என்று கூறுகின்றன.

விருந்துகள் மற்றும் பண்டிகைகள் பற்றிய பல குறிப்புகள் வேதாகமத்தில் உள்ளன. சரீரத்தின் செயலான உண்ணுதலையும் தேவனின் உண்மைத்தன்மையை கொண்டாடுவதையும் அது இணைக்கிறது. ஒவ்வொரு மாதமும் பஸ்கா, வாரங்களின் பண்டிகை மற்றும் பௌர்ணமி விருந்துகளுடன் இஸ்ரவேலர்கள் கடைப்பிடித்த பலி வழிபாட்டு முறையின் ஒரு பகுதியாக விருந்து இருந்தது (எண்ணாகமம் 28:11-31ஐப் பார்க்கவும்). மேலும் சங்கீதம் 23:5 இல், தேவன் ஏராளமான உணவுடன் ஒரு பந்தியை ஆயத்தம் செய்து, பாத்திரம் கருணையாலும் அன்பாலும் நிரம்பி வழிகின்றன. நம்முடைய இரட்சிப்புக்காக இயேசு சிலுவையில் மரித்த பரிசை விளக்கி, ஒரு அப்பத்தை உடைத்து ஒரு கோப்பை திராட்சை ரசத்தை எடுத்துக் கொண்டபோது, இதுவரை வெளிப்படுத்தப்பட்ட உணவு மற்றும் திராட்சை ரசத்தின் மிக ஆடம்பரமான தொடர்பாக அது இருக்கலாம். பின்னர் அவர் “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்று சவால் விடுத்தார் (லூக்கா 22:19).

இன்று நீங்கள் சாப்பிடும் போது, நமக்கு வாயையும் வயிற்றையும் உண்டாக்கி, உணவளிக்கும் தேவனுடைய உண்மைத்துவத்தைக் கொண்டாடும் வகையில் அவருடைய அன்பின் மொழியாகக் கருதுவோம். நம்முடைய தேவன் “நான் உன்னை நேசிக்கிறேன்” என்று சொல்லி, நம்மோடு விருந்தை ஆசரிக்கிறார். 

துரிதப்படு, காத்திரு!

“எங்கள் ஓய்வு நேரங்களிளெல்லாம் நாங்கள் என்ன செய்வோம்?” பொருளாதார நிபுணர் ஜான் மேனார்ட் கீன்ஸ், 1930 இல் வெளியிட்ட ஒரு கட்டுரையில் கலந்தாலோசிக்கிறார். அதில், கீன்ஸ் நூறு ஆண்டுகளுக்குள், தொழில்நுட்ப மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் மனிதர்களை ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் மற்றும் வாரத்திற்கு பதினைந்து மணிநேரம் மட்டுமே வேலை செய்யும் நிலைக்கு கொண்டு வரும் என்று முன்மொழிந்தார்.

கீன்ஸ் தனது புகழ்பெற்ற கட்டுரையை வெளியிட்டு, 90 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. ஆனால் தொழில்நுட்பம், அதிக ஓய்வு நேரத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, முன்பை விட நம்மை மும்முரமாய் ஆக்கியுள்ளது. நாள் முழுதும் நாம் மும்முரமாகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். பயணம் மற்றும் சமைத்தல் போன்ற அன்றாடப் பணிகளுக்கு குறைந்த நேரத்தை எடுத்துக் கொண்டாலும், நாம் அவசர உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 

தாவீதின் வாழ்க்கையில் நடந்த ஒரு குறிப்பிடத்தக்க சம்பவம், வாழ்க்கையின் அவசரத்தில் எப்படி நிலையாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. தாவீது ராஜா சவுலிடமிருந்து தப்பியோடியபோது, அவர் மோவாபின் ராஜாவிடம், “தேவன் என்னை எப்படி நடத்துவார் என்று நான் அறியுமட்டும், என் தகப்பனும் என் தாயும் உங்களிடத்திலே தங்கியிருக்கும்படி தயவு செய்யும்” (1 சாமுவேல் 22:3) என்று கேட்கிறார். தாவீது மிகவும் மும்முரமாய் செயல்பட்டுக்கொண்டிருந்தான். அவர் சவுலின் சதித்திட்டங்களில் இருந்து தப்பிக்க முயன்ற அதே வேளையில், அவரது குடும்பத்திற்கு உதவவும் முயன்றான். ஆனால் அவனுடைய அலுவல்களுக்கு மத்தியிலும் தேவனுக்காகக் காத்திருக்க நேரம் எடுத்தான்.

வாழ்க்கை நம்மை துரிதப்படுத்தும்போது, தன்னுடைய சமாதானத்தோடு நம்மைக் காக்கக்கூடியவரை நாம் விசுவாசிக்கலாம் (ஏசாயா 26:3). அதைத் தாவீது, “கர்த்தருக்காகக் காத்திருங்கள்; திடமனதாயிருந்து, கர்த்தருக்குக் காத்திரு” (சங்கீதம் 27:14) என்கிறார். 

 

உன்னால் முடியும்!

(பவுலும் பர்னபாவும்) லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பி வந்து, சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்தி (சொன்னார்கள்) அப்போஸ்தலர் 14:21-22.

ஊக்கம் என்பது ஆக்ஸிஜன் போன்றது - அது இல்லாமல் நாம் வாழ முடியாது. குற்றாலீஸ்வரன் என்று அழைக்கப்படும் பதிமூன்று வயது குற்றால் ரமேஷ{க்கு இது உண்மையாக இருந்தது. ஆங்கிலக் கால்வாயைத் தாண்டிய இளைய இந்திய நீச்சல் வீரர் என்ற சாதனையைப் படைத்த சிறுவன், உலக சாதனை படைத்தான். ஆனால் அவனது பயிற்சியாளர் கே.எஸ். இளங்கோவன் இல்லாமல் இது சாத்தியமில்லை. இளங்கோவன், கோடைக்கால நீச்சல் முகாமில் அவனது திறமையைக் கண்டறிந்தார். ஆங்கிலக் கால்வாயின் குளிர்ந்த நீரில் இந்த சாதனையைச் செய்ய அவன் பயிற்சி செய்தபோது, பலர் அவனை அதையரியப்படுத்தினர். மேலும் அவனை இந்தியாவுக்குத் திரும்பச் செல்லச் சொன்னார்கள். இருப்பினும், அவனது பயிற்சியாளரும் தந்தையும் கொடுத்த ஊக்கம், அவனது இலக்கை முடிக்க அவனுக்கு தேவையான ஊக்கத்தை அளித்தது.

கொந்தளிப்பான, குளிர்ச்சியான தண்ணீர் இயேசுவின் விசுவாசிகளை கைவிட விரும்பியபோது, பவுலும் பர்னபாவும் தங்கள் பயணத்தைத் தொடர அவர்களை ஊக்கப்படுத்தினர். அப்போஸ்தலர்கள் தெர்பை பட்டணத்தில் நற்செய்தியைப் பிரசங்கித்த பிறகு, அவர்கள் “லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பி வந்து, சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்தி (சொன்னார்கள்)” (அப்போஸ்தலர் 14:21-22). விசுவாசிகள் இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தில் உறுதியாக இருக்க அவர்கள் உதவினார்கள். பிரச்சனைகள் அவர்களை வலுவிழக்கச் செய்தன. ஆனால் ஊக்கமளிக்கும் வார்த்தைகள், கிறிஸ்துவுக்காக வாழ்வதற்கான அவர்களின் தீர்மானத்தை பலப்படுத்தியது. தேவனின் பலத்தில், அவர்கள் தொடர்ந்து முன்னேற முடியும் என்பதை உணர்ந்தனர். இறுதியாக, பவுலும் பர்னபாவும் அவர்கள் “தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கப் பல கஷ்டங்களைச் சந்திக்க நேரிடும்” (வச. 22) என்பதைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவினார்கள்.

இயேசுவுக்காக வாழ்வது ஒரு சவாலான, கடினமான எதிர்நீச்சல் போன்றது. நமக்கு சில நேரங்களில் விட்டுக்கொடுக்க தோன்றலாம். அதிர்ஷ்டவசமாக, இயேசுவும் அவரில் வாழும் விசுவாசிகளும் நாம் முன்னேறிச்செல்ல தேவையான ஊக்கத்தை அளிக்க முடியும். அவரோடு அதை நாம் மேற்கொள்ள முடியும். 

தாராளமனப்பான்மை

ன்றைய தனித்துவ உலகில், பெருந்தன்மை என்பது நாம் எப்போதாவது சிந்திக்கும் ஒரு வார்த்தையாகும். விசுவாசிகளாக இருந்தாலும் கூட, மற்றவர்களின் தேவைகளை நாம் புறக்கணிக்கிறோம். இதன் விளைவாக, தாராள மனப்பான்மை நம் இரட்சிப்பின் ஒருங்கிணைந்த அம்சம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளத் தவறிவிடுகிறோம்.

பழைய மற்றும் புதிய ஏற்பாடுகள் இரண்டிலும் இரக்கம் மற்றும் பெருந்தன்மை பற்றிய போதனைகள் உள்ளன. பழைய ஏற்பாட்டு சட்டங்கள் அடிப்படையில் கடவுளின் மக்கள் எப்படி அன்பைக் காட்ட வேண்டும் என்பதற்கான விளக்கமாக

இயேசு அவனை நோக்கி: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும்…