நான் ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி, “பிடித்த விஷயங்கள்” என்ற கருப்பொருளை அடிப்படையாய் வைத்து, அலங்காரம், பரிசுகள் மற்றும் உணவுகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். பிறந்தநாள் கொண்டாடும் பெண்ணிற்கு பன்னீர், பழங்கள், மற்றும் சிவப்பு வெல்வெட் கேக் ஆகியவைகள் பிடிக்கும் என்பதால், தொகுப்பாளினி பன்னீரை வறுத்து, பழங்களை வெட்டி, பிடித்த கேக்கை ஆர்டர் செய்தார். நமக்கு பிடித்த உணவுகள் நம்மைப் பார்த்து “ஐ லவ் யூ” என்று கூறுகின்றன.

விருந்துகள் மற்றும் பண்டிகைகள் பற்றிய பல குறிப்புகள் வேதாகமத்தில் உள்ளன. சரீரத்தின் செயலான உண்ணுதலையும் தேவனின் உண்மைத்தன்மையை கொண்டாடுவதையும் அது இணைக்கிறது. ஒவ்வொரு மாதமும் பஸ்கா, வாரங்களின் பண்டிகை மற்றும் பௌர்ணமி விருந்துகளுடன் இஸ்ரவேலர்கள் கடைப்பிடித்த பலி வழிபாட்டு முறையின் ஒரு பகுதியாக விருந்து இருந்தது (எண்ணாகமம் 28:11-31ஐப் பார்க்கவும்). மேலும் சங்கீதம் 23:5 இல், தேவன் ஏராளமான உணவுடன் ஒரு பந்தியை ஆயத்தம் செய்து, பாத்திரம் கருணையாலும் அன்பாலும் நிரம்பி வழிகின்றன. நம்முடைய இரட்சிப்புக்காக இயேசு சிலுவையில் மரித்த பரிசை விளக்கி, ஒரு அப்பத்தை உடைத்து ஒரு கோப்பை திராட்சை ரசத்தை எடுத்துக் கொண்டபோது, இதுவரை வெளிப்படுத்தப்பட்ட உணவு மற்றும் திராட்சை ரசத்தின் மிக ஆடம்பரமான தொடர்பாக அது இருக்கலாம். பின்னர் அவர் “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்று சவால் விடுத்தார் (லூக்கா 22:19).

இன்று நீங்கள் சாப்பிடும் போது, நமக்கு வாயையும் வயிற்றையும் உண்டாக்கி, உணவளிக்கும் தேவனுடைய உண்மைத்துவத்தைக் கொண்டாடும் வகையில் அவருடைய அன்பின் மொழியாகக் கருதுவோம். நம்முடைய தேவன் “நான் உன்னை நேசிக்கிறேன்” என்று சொல்லி, நம்மோடு விருந்தை ஆசரிக்கிறார்.