நம் சௌகரியத்திற்கல்ல
அபிஷ்வாஸ் தனது மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, அவனது பாதையில் திசைதிரும்பிய ஒரு கார், அவனை எதிர்வரும் வாகனத்தின் மீது மோதச் செய்தது. இரு வாரங்கள் கழித்து ஒரு சிகிச்சை மையத்தில் கண்விழித்த போதுதான், அவனுடைய மோசமான நிலை புரிந்தது. அதிலும் மோசமாக, தண்டுவடம் காயப்பட்டதால் அவன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தான். அபிஷ்வாஸ், தான் குணமாக ஜெபித்தான், ஆனால் அது அவனுக்கு கிடைக்கவில்லை. மாறாக, "இந்த வாழ்வின் நோக்கமே நாம் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாவதுதான். துரதிருஷ்டவசமாக அது நமக்கு எல்லாமே நன்மையும், இன்பமுமாய் இருக்கும்பட்சத்தில் சாத்தியமாகாமல் , நம் வாழ்க்கை கடினமாகும்போதும், ஒவ்வொரு நாளையும் கடக்கவே ஜெபத்தின் மூலமாக தேவனை சார்ந்துகொள்வது கட்டாயமாகும்போதும் தான் அது சாத்தியமாகும்" என்பதை தேவன் தனக்கு உருக்கமாக கற்றுக்கொடுத்ததாக விசுவாசிக்கிறான்.
தேவனோடுகூட சரியான உறவிலிருப்பதால் உண்டாகும் இரு நன்மைகளை குறித்து அப்போஸ்தலன் பவுல் விளக்குகிறார் அவை: உபத்திரவத்தில் பொறுமை மற்றும் உபத்திரவத்தை குறித்து மேன்மைபாராட்டுவது (ரோமர் 5:3-4) இவ்விரு நன்மைகளும் ஏதோ மனவலிமை பெற்று துன்பத்தை சகிக்கவோ அல்லது துன்பத்தில் இன்பம் காணவோ நம்மை அழைக்கவில்லை. மாறாக, தேவன் மீது கொண்ட அசையாத நம்பிக்கைக்கு நம்மை அழைக்கிறது. கிறிஸ்துவுடன் கூடிய உபத்திரவம், "பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறது" (வ.3). இவை அனைத்துமே நம் தகப்பன் நம்மை கைவிடமாட்டார் மாறாக நம்மோடு அக்கினியிலும் கூட நடப்பார், நமது எதிர்காலத்திலும் நடத்துவார் என்ற விசுவாசத்திலிருந்து வழிகின்றன.
தேவன் நமது உபத்திரவங்களில் நம்மை சந்தித்து அவருக்குள் நாம் வளர உதவுகிறார். துன்பங்களை அவருடைய தண்டனைகளாக பார்ப்பதை விடுத்து அவைகளை கொண்டு நம்மை அவர் மெருகேற்றும் வழிமுறைகளை கண்டுகொண்டு நமது குணாதிசயங்களை வளர்த்து "தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறதை" (வ.5) அனுபவிப்போமாக.
படைப்பின் வியப்பு
அலாஸ்க்காவில் நடைபயணம் மேற்கொண்டிருந்த டிம், இதுவரை பார்த்திராத ஒன்றை அன்று சந்தித்தான். டிம், தொழில்ரீதியாகவும் கூட பனிப்பாறைகளை குறித்து படித்திருந்தாலும், அவைகளின் மேல் அதிகளவிலான பாசி உருண்டைகள் (ஒருவித செடி) படர்ந்திருப்பது அவனுக்கு முற்றிலும் புதியது. பல ஆண்டுகள் இந்த பிரகாசிக்கும் பச்சை நிற உருண்டைகளை கவனமாக ஆராய்ந்த பின், டிம்மும் அவன் சகாக்களும், இவ்வகையான பனிப்பாறை பாசியானது, மரங்களில் காணப்படும் பாசி உருண்டைகளை போல ஒன்றோடொன்று இணைக்கப்படாமல் இருப்பதையும், இன்னும் ஆச்சரியமாக இவை ஒரு மந்தையைப்போலவும், கூட்டமாகவும் ஒற்றுமையாக நகர்வதை கண்டுபிடித்தனர். முதலில், டிம்மும் அவன் சகாக்களும் இவைகள் காற்றினால் நகர்கின்றனவோ அல்லது மலையில் கீழ்நோக்கி சறுக்கி விழுகின்றனவோ என்று சந்தேகித்தனர் ஆனால் அவர்களின் ஆராய்ச்சி அத்தகைய யூகங்களை பொய்யாக்கியது.
அந்த பாசி உருளைகள் எவ்வாறு நகர்கின்றன என்று இன்னும் அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. இத்தகைய மர்மங்கள் தேவனுடைய படைப்பாற்றலின் மகுடங்கள். அவருடைய சிருஷ்டிப்பின் பணியில், தேவன் நிலத்தை மரங்களும், செடிகளும் முளைக்கும் "தாவரங்களின் விளைச்சலுக்காக" நியமித்தார் (ஆதியாகமம் 1:11). "பனிப்பாறை எலிகள்" என்ற இவ்வகை பாசிகளையும் அவரே வடிமைத்தார். அவைகளுக்கு ஏற்ற சூழலை அளிக்கும் பனிப்பாறைகளை நாம் நேரில் பார்க்கும்வரை, நம்மில் அநேகர் இதை பார்த்திருக்க முடியாது.
1950களில் கன்டுபிடிக்கப்பட்ட முதற்கொண்டு இந்த "பனிப்பாறை எலிகள்", தங்கள் தெளிவற்ற பச்சை படிவத்தினால் விஞ்ஞானிகளுக்கு களிப்பூட்டி வருகின்றன. தேவன், தான் படைத்த தாவரங்களை பார்த்து "அது நல்லது என்று கண்டார்." (வ.12), நாம் தேவனின் தாவரவியல் வடிவமைப்புகளால் சூழப்பட்டுள்ளோம் அவை ஒவ்வொன்றும் அவரின் படிப்பின் வல்லமைகளை நிரூபித்து, அவரை தொழுதுகொள்ள நம்மை அழைக்கிறது. அவர் படைத்த ஒவ்வொரு மரத்தின்பேரிலும், செடியின்பேரிலும் நாம் மகிழலாம் ஏனெனில் அவைகள் நல்லது.
ஒரு புதிய துவக்கம்
எங்குமுள்ள தமிழ் குடும்பங்களால் கொண்டாடப்படும் தமிழ் புத்தாண்டு, பருவங்களின் மாற்றத்தோடு தொடர்புடையது. பொதுவாக ஜனவரி மாதத்தின் மத்தியில் வரும் இந்த காலம், குடும்பங்களை ஒன்றிணைக்கும் பல பாரம்பரியங்களை உடையது - அவற்றில் சில மிகவும் குறிப்பிடத்தக்கவை. புத்தாடைகளை வாங்கி அணிதல், நம்முடைய வீடுகளை தூய்மைப்படுத்துதல், மேலும் வீட்டில் தயாரித்த உணவு பண்டங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுதல் என்று இவ்வாறு உறவுகள் பின்னப்படுகின்றன. துடைக்கப்பட்ட எழுத்துப் பலகை போல கடந்தகாலத்தை நமக்கு பின்பாக எறிந்துவிட்டு, வருடத்தை புதிதாக ஆரம்பிக்க இது நமக்கு நினைவூட்டுகிறது.
இந்தப் பாரம்பரியங்கள் கிறிஸ்துவுக்குள்ளான நமது புதிய வாழ்வையும் எனக்கு நினைப்பூட்டுகின்றன. நாம் எப்படிப்பட்டவர்களாக இருந்தோம் அல்லது என்னவெல்லாம் செய்தோம் என்பதை பொருட்படுத்தாமல் அனைத்தையும் நமக்கு பின்பாக எறிந்திட முடியும். இயேசுவின் சிலுவை மரணத்தினால் நாம் முற்றிலும் மன்னிக்கப்பட்டுள்ளோம் என்பதை அறிந்தவர்களாக நம்முடைய கடந்தகாலத்தை நினைத்து வருந்துவதை நாம் நிறுத்தி, குற்ற உணர்வு நீங்கினவர்களாக நம்மால் இருக்க முடியும். மேலும் இயேசுவைப் போல மறுரூபமாக, பரிசுத்த ஆவியானவரை நாம் அனுதினமும் சார்ந்துகொண்டு புதிதாக துவங்கலாம்.
எனவேதான் பவுல், விசுவாசிகளுக்கு "பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின." (2 கொரிந்தியர் 5:17)
என நினைப்பூட்டுகிறார். நாமும் கூட இதை சொல்லலாம், ஏனெனில் எளிமையான ஆனால் வல்லமையான சத்தியமானது: "தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி" (வ.19) என்பதே.
நம்மை சுற்றியுள்ள மற்றவர்கள், நம் கடந்தகால தவறுகளை மறக்க மனமில்லாதிருக்கலாம், ஆனால் தேவனுடைய பார்வையில் நமக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை (ரோமர் ) என்பதால் தைரியம் கொள்வோம். இயேசுவின் மூலமாக தேவன் நமக்களித்த புதிய துவக்கத்தை நாம் சுகமாய் அனுபவிப்போம்.
திரித்துவம் ஏன் முக்கியமானது?
கிறிஸ்தவர்கள் ஒரே தெய்வத்தை நம்புவதாக கூறுகிறார்கள்; ஒரே தேவன். ஆனால் அவ ர்மூன்று நபர்களாய்வெளிப்படுகிறார்: பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர். இது இனனும் நம்மை குழப்பத்திற்குள்ளாக்குகிறது.
திரித்துவத்தைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது மிகவும் குழப்பமாக இருக்கிறது. அது அந்த அளவிற்கு உகந்த ஒன்றா என்று நம்மை ஆச்சரியப்படவைக்கிறது. தேவனுடனான நம் உறவை திரித்துவம் எந்தவிதத்தில் பாதிக்கிறது? உபதேசத்தின் இந்த கடினமான காரியத்தைக் குறித்து…
தாழ்மையான தோரணை
"உன் கைகளை பின்பாக கட்டிக் கொள். அது உனக்கு சௌகரியமாக இருக்கும்" ஜேன் ஒரு குழுவிற்கு முன்பாக பேசுவதற்கு முன், அவ ளுடைய கணவன் எப்போதும் கொடுக்கும் அன்பான அறிவுரை இதுதான். எப்போதெல்லாம் அவள் மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்கவோ அல்லது ஒரு சூழ்நிலையை கட்டுப்படுத்தவோ நினைக்கும் போதெல்லாம் அவள் இந்த தோரணையில் தான் இருப்பாள். ஏனெனில் அது அவளுடைய மனதை கற்றுக்கொள்ள அல்லது கற்றுக்கொடுக்க பக்குவப்படுத்திகிறது. தனக்கு முன்பாக இருப்பவர்களை நேசிக்கவும், தாழ்மையாக இருக்கவும், பரிசுத்த ஆவியானவருக்கு தன்னை ஒப்புவிக்கவும் இந்த தோரணையை பயன்படுத்தினாள்.
தாழ்மையை குறித்ததான ஜேனின் இந்த புரிந்து கொள்ளுதல், தேவனிடமிருந்தே அனைத்தும் வருகிறது என்ற தாவீது ராஜாவின் அனுமானத்தில் வேரூன்றி உள்ளது. தாவீது தேவனை நோக்கி "தேவரீர் என் ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்கு வேண்டியதாயிராமல்" (சங்கீதம் 16:2) என்கிறார். அவர் தேவனை நம்பவும், அவருடைய ஆலோசனையை நாடவும் கற்றுக்கொண்டார்: "இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும்". (வ.7) “அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை” (வ.8) என்பதை அறிந்திருந்தார். அவர் தன்னை தானே உயர்த்த வேண்டியிருந்ததில்லை ஏனெனில் அவர் தன்னை நேசிக்கும் வல்ல தேவனை நம்பினார்.
நாம் அனுதினமும் தேவனை நோக்கிப் பார்த்து விரக்தி அடையும் போதெல்லாம் அவருடைய உதவியை கேட்கும்போதும் அல்லது நாவு கட்டப்பட்டாற்போல போல பேச வார்த்தைகளின்றி, வார்த்தைகளுக்காக கேட்கும்போதும் அவர் நம்முடைய வாழ்வில் கிரியை செய்வதை நம்மால் பார்க்க முடியும். ஜேன் சொல்வது போல நாமும் "தேவனோடு கூட கூட்டாளி" ஆகலாம். பின்னர் நாம் சிறப்பாக செய்து முடித்ததை, நாம் உணர்ந்து கொள்வோம் ஏனெனில் தேவனே நாம் செழிக்க உதவியுள்ளார்.
நம் கைகளை நமக்கு பின்பாக தாழ்மையின் தோரணையாக கட்டிக்கொண்டு, சகலமும் தேவனிடமிருந்து நமக்கு வருகிறது என்பதை நினைவுகூர்ந்தவர்களாக, மற்றவர்களை நாமும் அன்போடு பார்க்க முடியும்.