Archives: பிப்ரவரி 2022

தலைவனை பின்பற்று

வார்த்தைகளே இல்லை. வெறும் இசையும், அசைவும் தான். கோவிட் -19 பெருந்தொற்றின் மத்தியிலே 24 மணி நேர  ஜும்பா தொடர் பயிற்சியில் உலகமெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றாக இணைந்து உடற்பயிற்சி செய்தனர். அவர்கள் இந்தியா, சீனா, மெக்ஸிகோ, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பாவின் பகுதிகள், மற்றும் பல இடங்களில் இருந்து அவர்களை, நடத்தின பயிற்சியாளர்களை ஊடக வாயிலில் பின்பற்றினார்கள். இந்த வேறுபட்ட தனிநபர்கள் மொழிகளின் தடைகள் இல்லாமல் ஒன்றாக இசைந்து அசைய முடிந்தது ஏன்? காரணம், 1990களின் மத்தியில் கொலம்பியாவின் உடற்பயிற்சியாளரால் உருவாக்கப்பட்ட இந்த ஜும்பா என்கிற உடற்பயிற்சி  முறையின் பயிற்சியாளர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள வாய்மொழி குறிப்புகளை பயன்படுத்துவது கிடையாது. வகுப்பில் பயிற்சியாளர்கள் அசைய, மாணவர்கள் அவர்கள் அசைவை பின்பற்றுவார்கள். ஒரு வார்த்தையும் இன்றி, கூச்சலும் இன்றி அவர்கள் அதைப் பின்பற்றுவார்கள்.

வார்த்தைகள் சிலசமயம் நம்மை இடையமறித்து தடை உண்டு பண்ணக்கூடும். கொரிந்தியர்கள் அனுபவித்தாற்போல சில குழப்பங்களையும் ஏற்படுத்த கூடும், அவர்களுக்கான முதல் நிருபத்தில் பவுல் இதை குறிப்பிடுகிறார். குறி[பிட்ட உணவுகளை உட்கொள்வதை குறித்து உண்டான தர்க்கங்களை விவாதிக்கையில் எழும்பின குழப்பமே அது (1 கொரிந்தியர் 10:27-30). ஆனால் நமது செயல்கள், தடைகளையும், குழப்பங்களையும் கூட கடந்து நிற்கும். இன்றைய வேத வாசிப்பு பகுதியில் பவுல் குறிப்பிடுவது போல, இயேசுவை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்று ஜனங்களுக்கு நாம் நமது செயல்கள் மூலம் காண்பிக்க வேண்டும், “அநேகருடைய நன்மையை” விரும்பி தேட வேண்டும் (10:32-33) நாம் இயேசுவின் மாதிரியை பின்பற்றுகையில் (11 :1), அவரை விசுவாசிக்கும்படி நாம் உலகத்தாரை அழைக்கிறோம்.

யாரோ ஒருவர் சொன்னது போல,"சுவிசேஷத்தை எப்போதும் பிரசங்கியுங்கள், தேவைப்படும்போது மட்டும் வார்த்தைகளை உபயோகியுங்கள்". நாம் இயேசுவின் தலைமையை பின்பற்றும்போது, அவர் நமது செயல்களையே நமது விசுவாசத்தின் உண்மையான அடையாளங்களாக வழிநடத்தி மற்றவர்களுக்கு தருவாராக. மேலும் நமது வார்த்தைகளும், செயல்களும் "தேவனுடைய மகிமைக்கென்றே" (10:31) இருப்பதாக.

நட்சத்திரங்களின் சவால்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே, இத்தாலிய கவிஞர் எப்.டி. மறிநேட்டி  வருங்காலவியல் என்ற கலை இயக்கத்தை ஆரம்பித்தார். அவ்வியக்கம் கடந்த காலத்தை புறக்கணித்து, அழகை குறித்ததான பாரம்பரிய கருத்துக்களை ஏளனம் செய்தது, மாறாக இயந்திரங்களை அது உயர்வாக கருதியது. 1909ஆம் ஆண்டு மறிநேட்டி, வருங்காலவியலின்  கொள்கை விளக்கத்தை எழுதினார், அதில் அவர்: பெண்களை குறித்து இழிவாகவும், வன்முறையை உயர்வாகவும் அறிவித்திருந்தார். மேலும், "நாம் யுத்தங்களை மேன்மைப்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தி இருந்தார். அவருடைய கொள்கை விளக்க உரை இவ்வாறு நிறைவடைந்தது: "உலகத்தின் உச்சியில் நின்று கொண்டு நாங்கள் மீண்டுமாக நட்சத்திரங்களுக்கு விரோதமான கொடூரமான யுத்தத்தை துவங்குகிறோம்"

மறிநேட்டி கொள்கை விளக்கத்தை அறிவித்து, ஐந்து ஆண்டுகளில் நவீன போர் மிகவும் தீவிரமாக ஆரம்பமானது. முதலாம் உலகப் போர் யாருக்கும் எந்த புகழையும் கொண்டு வரவில்லை. மறிநேட்டியே 1944-ல் மரித்தார். ஆனால் இவைகளை எல்லாம் கண்டுகொள்ளாமல், நட்சத்திரங்கள் அதினதின் இடத்திலே நிலைத்திருந்தன.

 தாவீது ராஜா, இந்த நட்சத்திரங்களை குறைத்து கவித்துவமாக பாடியிருந்தார் ஆனால் வியப்பூட்டும் வகையில் வித்தியாசமான கண்ணோட்டத்தோடு. அவர் எழுதுகிறார்,"உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,

மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்."(சங்கீதம்) என்று. தாவீதின் இந்தக் கேள்வி அவிசுவாசத்தினால் வந்தது அல்ல ஆனால் வியப்பினால் தன்னை தாழ்த்தினார். இந்த அகண்ட அண்ட சராசரங்களை உண்டாக்கின தேவன், மெய்யாகவே நம் மீது சிந்தையாய் இருக்கிறார் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் நம்முடைய ஒவ்வொரு விபரத்தையும் கவனிக்கிறார், நம்முடைய நன்மை, தீமை, தாழ்மை, கொடூரம், ஏன் அபத்தத்தை கூட கவனிக்கிறார்.

நட்சத்திரங்களுக்கு சவால் விடுவது என்பது முட்டாள்தனமானது, மாறாக அவைகள் நம்முடைய சிருஷ்டிகரை துதிக்கும்படி நமக்கு சவால் விடுகின்றன.

உங்கள் அனுக்குரியவர்களை நேசியுங்கள்

ஆமோஸ், கர்வம் உள்ள ஒரு ஊதாரி, டேனி சுயசந்தேகத்தால் உடைக்கப்பட்ட தனிமையானவன். எப்படியோ இந்த விசித்திரமான அறிவாளிகள் நண்பர்களாயினர். சுமார் 10 ஆண்டுகள் இருவரும் ஒன்றாக சிரித்து, கற்று மகிழ்ந்தனர். ஒரு நாள் இவர்களின் வேலைக்கு நோபல் பரிசு கிடைத்தது. ஆனால் டேனி, ஆமோஸின் சுயநலமான போக்கை சகிக்க கூடாமல் தாங்கள் இதற்கு மேல் நண்பர்களாய் இருக்க முடியாது என்று கூறினார்.

மூன்று நாட்கள் கழித்து, ஆமோஸ் ஒரு கொடுமையான செய்தியோடு தொலைபேசியில் அழைத்தார்; மருத்துவர்கள் அவருக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறிந்தனர், மேலும் அவர் உயிர்வாழ ஆறு மாதங்கள் அவகாசம் கொடுத்திருந்தனர். டேனியின் உள்ளம் உடைந்தது,”நாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று நீங்கள் எண்ணினாலும் சரி, நாங்கள் நண்பர்கள்” என்று கூறினார்.

பவுல் சற்றே கடினமான தொலைநோக்குப் பார்வையாளர், மேலும் பர்னபா மென்மையான இருதயம் கொண்ட ஊக்குவிப்பாளர். ஆவியானவர் இவர்கள் இருவரையும் இணைத்து அருட்பணி பயணத்தில் ஒன்றாக அனுப்பினார் (அப்போஸ்தலர் 13:2-3) அவர்கள் பிரசங்கித்து சபைகளை நிறுவினார்கள். மார்க்குவின் பிரிவினால் உண்டான கருத்து வேறுபாடுமட்டில் ஒன்றாக இருந்தார்கள். பர்னபா, மார்க்குவிற்கு இரண்டாம் வாய்ப்பு அளிக்க மனதாய் இருந்தார். ஆனால் பவுல், அவர் இனி நம்பிக்கைக்குரியவர் அல்ல என்றார். ஆகவே இருவரும் பிரிந்தனர் (அப்போஸ்தலர் 15:36-41).

இறுதியில் பவுல் மார்க்குவை மன்னித்தார். மூன்று நிருபங்களை அவருடைய வாழ்த்துகளோடு ஆரம்பித்தோ அல்லது அவரை பாராட்டி நிறைவோ செய்துள்ளார் (கொலோசெயர் 4:10; 2தீமோத்தேயு 4:11; பிலேமோன் 1:24). ஆனால் பர்னபாவிற்கு என்ன ஆனது என்று நமக்கு தெரியவில்லை. பவுலோடு இந்த வாழ்வில் ஒப்புரவாகும் வரை அவர் வாழ்ந்தாரா? அப்படித்தான் என்று நான் நம்புகிறேன்.

உங்களின் இன்றைய சூழ்நிலை எப்படியோ, யாருடனாகிலும் உங்களுக்கு உறவில் பிரிவு இருந்தால் ஒப்புரவாக முயலுங்கள். அவர்களை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்று சொல்வதற்கும், காண்பிப்பதற்கும் இதுதான் நேரம்.

முடியாதென்று ஒருபோதும் சொல்லாதே

ஜென் பிறக்கும் போதே கால்கள் இல்லாமல் பிறந்ததால் மருத்துவமனையிலேயே கைவிடப்பட்டாள். ஆயினும், தான் தத்தெடுக்கப்பட்டது ஒரு ஆசீர்வாதம் என்றும், "எனக்குள் அன்பை பொழிந்த மக்களால் தான் நான் இங்கே இருக்கிறேன்" என்றும் கூறுகிறாள். 'தான் ஒரு காரணத்திற்காகத்தான் இவ்வாறு பிறந்திருக்கிறோம்' என்பதை அவள் புரிந்துகொள்ள அவளை தத்தெடுத்த குடும்பத்தினர் உதவினர். அவர்கள், அவளை 'ஒருபோதும் முடியாது' என்று சொல்லாதவளாகமும் தன்னுடைய விருப்பங்களையும் பின்தொடரவும் அவளை வளர்த்தி, உற்சாகப்படுத்தினர். அவள் அந்தரத்தில் சாகசம் செய்யும் சாதனையாளராகவும், தேர்ச்சி பெற்ற உடற்பயிற்சியாளராகவும் மாறினாள். 'நான் எப்படி இதை சமாளிப்பேன்?' என்கிற மனோபாவத்துடன் தனக்கு முன் இருக்கும் சவால்களை தான் சந்திப்பதாக சொல்லுகிற அவள்; மற்றவர்களும் அதையே பின்பற்ற அவர்களை உற்சாகப்படுத்துகிறாள்.

தங்கள் அழைப்பிற்கு இயலாதவர்காக, பொருந்தாதவர்களாக தங்களை கருதிய அநேகரை தேவன் பயன்படுத்திய சம்பவங்களை வேதம் கூறுகிறது. தேவன் அவர்களை எப்படியாயினும் பயன்படுத்தினார். ஒரு தரமான உதாரணம்தான் மோசே. இஸ்ரவேலர்களை தலைமைதாங்கி எகிப்திலிருந்து வெளியே கொண்டுவர தேவன் அவரை அழைத்தபோது, மோசே தடைசொன்னார் (யாத்திராகமம் 3:11; 4:1) மேலும், "நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன்" என்று எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும் தேவன், "மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும்...உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?ஆதலால், நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன்" என்றார்.(4:10–12). மோசே மேலும் எதிர்ப்பு தெரிவித்தபோது, அவர் சார்பில் பேசும்படி ஆரோனை அளித்து தாம் இருவருக்கும் உதவுவதாக தேவன் வாக்களித்தார் (வ.13–15).

ஜென்னை போல, மோசேயை போல நாம் அனைவருமே உலகத்தில் ஒரு காரணத்துக்காக பிறந்திருக்கிறோம் மேலும் தேவனும் நமக்கு கிருபையாக அனைத்திலும் உதவுகிறார். அவர் நமக்கு ஏற்ற நபர்களை தருகிறார் மேலும் அவருக்காக நாம் வாழ நமக்கு தேவையான அனைத்தையும் தருகிறார்.

 

தேவன் பட்சமாய் சாய்தல்

ஹாரியட் டப்மேனால்  எழுத, படிக்க முடியாது. ஒரு இளம்பெண்ணாக, தன்னுடைய கொடூரமான எஜமானால் அவள் தலையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் அவளை வாழ்நாள் முழுதும் வலிப்பினாலும், ஞாபக மறதியினாலும் பாதித்தது. ஆனால் அவளுடைய அடிமைத்தனத்திலிருந்து தப்பியவுடனே, தேவன் அவளைக்கொண்டு அவளைப் போன்ற சுமார் முன்னூறு பேரை மீட்டார்.

தான் மீட்டவர்களால் "மோசே" என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஹாரியட், வீரமாக பத்தொன்பது முறை உள்நாட்டுப் போருக்கு முன்பாக தெற்கு பக்கம் போய், அங்குள்ள தன்னைப் போன்ற மற்றவர்களை மீட்டார். அவளை உயிருடன் பிடித்தாலோ அல்லது கொன்றாலோ தக்க சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டும், அவளுடைய உயிருக்கு எப்பொழுதுமே ஆபத்து இருந்தும், அவள் இதை தொடர்ந்து செய்தாள். இயேசுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட விசுவாசியாக இருந்த அவள், எப்பொழுதும் தன்னுடைய பிரயாணங்களில் ஒரு பாட்டு புத்தகத்தையும், வேதாகமத்தையும் எடுத்துக்கொண்டு போய் மற்றவர்கள் அவளுக்கு வசனங்களை படிக்க கேட்பாள். அவைகளை அற்பணத்தோடு மனப்பாடம் செய்து அடிக்கடி மேற்கோள் காட்டுவாள் "நான் எப்பொழுதும் ஜெபம் செய்வேன்; என்னுடைய வேலையை குறித்து, எங்கேயும் நான் எப்பொழுதும் தேவனோடு பேசிக் கொண்டிருப்பேன்" என்று அவள் கூறுகிறாள். மேலும் அவளுடைய சிறிய வெற்றிகளுக்கு கூட தேவனையே காரணராக கூறினாள். ஆதி கிறிஸ்தவர்களுக்கு, அப்போஸ்தலன் பவுலின் அறிவுரைகள் இவளுடைய வாழ்வில் வல்லமையாக வெளிப்பட்டது "எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது." (1 தெசலோனிக்கேயர் 5:16-18).

நாம் எப்போதும் தேவன் பட்சம் சாய்ந்து, ஜெபத்தை நம்பியே வாழ்ந்து, அவரை நம்முடைய கடினமான சூழ்நிலைகளிலும் கூட துதிக்கும் போது, அவர் நம்முடைய மிக சவாலான பணிகளையும் செய்து முடிப்பதற்கு ஏற்ற  பெலன் அளிப்பார். நம்முடைய இரட்சகர் நாம் எதிர்கொள்ளும் எதையும் விட மிகவும் பெரியவர், நாம் அவரை நோக்கி பார்க்கும்போது அவர் நம்மை நடத்துவார்.