கதாநாயகர்கள், கொடுங்கோலர்கள் மற்றும் இயேசு
பிரபலமான இசைக்கலைஞர் பீத்தோவன் கோபத்திலிருந்தார். அவருடைய மூன்றாம் இசைப் படைப்பிற்கு “த போனபார்ட்டே” என்ற நெப்போலியனின் பெயரை வைக்கலாம் என்று அவர் எண்ணியிருந்தார். மதம் மற்றும் அரசியல் ஓங்கியிருந்த அந்த காலக்கட்டத்தில், மக்களின் விடுதலைக்கு காரணமான நெப்போலியனை அவர் ஒரு கதாநாயகனாய் பார்த்தார். ஆனால் அந்த பிரெஞ்சு ஜெனரல் தன்னை பேரரசர் என்று அறிவித்தபோது, அவர் தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டார். தன்னுடைய முன்னாள் கதாநாயகன் ஒரு கொடுங்கோலன் என்பதை அறிந்த அவர், அவனுடைய பெயரை அழிக்கும் முயற்சியில் அந்த தாளில் துளை ஏற்படும் அளவிற்கு அதை தன் கைகளால் அழித்தார்.
ஆதிக் கிறிஸ்தவர்களின் அரசியல் மறுமலர்ச்சியைக் குறித்த நம்பிக்கை தகர்க்கப்பட்டபோது அவர்கள் ஏமாற்றமடைந்திருக்கவேண்டும். ராயனுடைய அதிகப்படியான வரிவிதிப்பும், இராணுவ ஆதிக்கமும், வாழ்க்கையின் மீது அவர்களுக்கிருந்த நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கியது. ஆனாலும் பல ஆண்டுகளாக ரோமர்களே உலகத்தை ஆட்சிசெய்தனர். இயேசுவின் தூதுவர்கள் பயத்தோடும் பலவீனத்தோடும் இருந்தனர். அவருடைய சீஷர்கள் முதிர்ச்சியற்றும் சண்டையிட்டுக்கொண்டும் இருந்தனர் (1 கொரி. 1:11-12; 3:1-3).
ஆனால் ஒரு மாற்றம் தோன்றியது. மாறாத அந்த நிலைமைக்கு அப்பாற்பட்டு பவுல் அதை பார்த்தார். அவருடைய நிருபங்கள், துவக்கத்திலும் இறுதியிலும் இயேசுவின் நாமத்தினால் நிரம்பி வழிந்தது. இயேசு உயிர்த்தெழுந்தார். அவர் வல்லமையோடு திரும்பி வருவதாக வாக்குப்பண்ணியிருக்கிறார். எல்லாரையும் எல்லாவற்றையும் அவர் நியாயந்தீர்க்கிறார். எனவே பவுல் முதலில் கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் அர்த்தத்தையும் அதின் விளைவுகளையும் விசுவாசிகள் புரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்பினார் (2:2; 13:1-3).
இயேசுவின் சிலுவை மரணத்தில் வெளிப்பட்ட அன்பானது, அவரை வித்தியாசமான ஒரு தலைவராக மாற்றியது. கர்த்தரும் உலக இரட்சகருமான இயேசுவின் சிலுவை அனைத்தையும் மாற்றியது. இயேசுவின் நாமம் என்றென்றும் இருக்கிற, எல்லா நாமங்களுக்கும் மேலாக உயர்ந்த நாமம்.
தேவையில் உள்ளவர்களை சந்தித்தல்
ஒவ்வொரு நாளும் என்னுடைய சிநேகிதனுடைய வீட்டின் கதவைத் தட்டி, வெறுமையான பிளாஸ்டிக் பாட்டில்கள் இருக்குமா என்று கேட்கும் ஒரு பலவீனமான பெண்ணை அவர் பார்த்தார். அந்த பாட்டில்களை விற்று அதில் வரும் வருமானமே அவளுடைய வாழ்வாதாரம். என்னுடைய சிநேகிதனுக்கு ஒரு எண்ணம் உதித்தது. “நீங்கள் எங்கு தங்கியிருக்கிறீர்கள் என்று சொல்லமுடியுமா?” என்று அவளிடம் கேட்டார். அந்த பெண் அவரை ஒரு குறுகிய பாதையின் வழியாய் குப்பையான இடத்திற்கு அழைத்துச்சென்றாள். அவள் தங்குமிடத்தைக் கண்டு இரக்கப்பட்ட அவர், அவள் உறங்குவதற்கு ஏதுவான ஒரு சிறிய கூடாரத்தை அமைத்துக்கொடுத்தார். அப்போது தான் அவருக்கு இன்னொரு எண்ணம் உதித்தது. அவர் ஆன்லைனில் பிரச்சாரம் செய்து, ஸ்தல திருச்சபைகளோடு இணைந்து, ஆதரவற்றவர்களுக்கு வீடு கட்டுவதற்கான இடத்தை ஒழுங்குசெய்தார்.
ஆதரவற்றவர்களுக்கு உதவும்படி வேதாகமம் முழுமையும் தேவ ஜனத்திற்கு நினைவுபடுத்துகிறது. இஸ்ரவேலர்களை கானான் தேசத்திற்கு போவதற்கு ஆயத்தம்பண்ணும்படிக்கு தேவன் மோசேயிடம் பேசும்போது, “அவனுக்கு (ஏழைக்கு) உன் கையைத் தாராளமாய்த் திறந்து, அவனுடைய அவசரத்தினிமித்தம் அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக” என்று உற்சாகப்படுத்துகிறார் (உபாகமம் 15:8). “தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை” (வச. 11) என்றும் அவ்வேதப்பகுதி அறிவிக்கிறது. இது உண்மை என்பதை அறிவதற்கு வெகுதூரம் போகவேண்டியதில்லை. “உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும்” என்று தேவன் இஸ்ரவேலுக்கு அழைக்கிறார் என்றால் நாமும் தேவையிலுள்ளவர்களுக்கு உதவவேண்டும்.
ஒவ்வொருவருக்கும் உணவு, தங்குமிடம் மற்றும் தண்ணீர் அவசியம். நம்மிடத்தில் அதிகம் இல்லையென்றாலும், மற்றவர்களுக்கு உதவும் வகையில் தேவன் நம்மை பயன்படுத்துவாராக. உணவை பகிர்ந்துகொள்வதாயிருக்கட்டும், அல்லது உடையை கொடுத்து உதவுதாயிருக்கட்டும், நம்மால் முடிந்த சிறிய உதவிகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
பலத்த சத்துருக்களின் கைக்கு தப்பியது
ஜார்ஜ் உஜ்னோவிச், 2010ல் தன் 94ஆம் வயதில், “இரண்டாம் உலகப்போரின் சிறந்த மீட்புப்பணியாளர்” என்று நியூயார்க் டைம்ஸ் என்னும் பத்திரிக்கையினால் வெண்கல பதக்கத்தைப் பெற்றார். செர்பியாவிலிருந்து ஊடுருவியர்களின் மகனாய் பிறந்த இந்த உஜ்னோவிச் அமெரிக்க இராணுவத்தில் இணைந்தார். அமெரிக்காவின் விமானிகளில் சிலர் யுகோஸ்லோவேகியாவிலுள்ள கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறார்கள் என்ற செய்தியை கேள்விப்பட்டவுடன், இவர் தன்னுடைய சொந்த தேசத்திற்கு திரும்பினார். விமானிகளை கண்டுபிடிப்பதற்காக காட்டில் பாராசூட்டின் மூலம் பயணம் செய்தார். அவர்களைக் கண்டுபிடித்து, அவர்களை சிறுசிறு குழுக்களாய் பிரித்து, செர்பியர்களைப்போலவே உடை உடுத்தவும் உணவு உண்ணவும் அவர்களுக்கு பயிற்சி கொடுத்தார். அதற்கு பின்பு மாதக்கணக்கில், ஒவ்வொரு குழுவினரையும் காடுகளில் மரம் வெட்டும் இடத்தில் வரவழைத்து அங்கிருந்த சி-47 விமானத்தின் மூலம் தங்கள் சொந்த தேசத்திற்கு திரும்பச்செய்தார். உஜ்னோவிச் 512 மகிழ்ச்சியான மனிதர்களை மீட்டிருக்கிறார்.
தப்பவே முடியாது என்னும் தருணத்தில் தேவன் தன் சத்துருக்களின் கைக்கு தன்னை நீங்கலாக்கி விடுவித்ததைக் குறித்து தாவீது விவரிக்கிறார். தேவன் “உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்” (2 சாமுவேல் 22:17), என்கிறார். சவுல் ராஜா பொறாமையினால் கோபங்கொண்டு தாவீதை கொலைசெய்ய வகைதேடினான். ஆனால் தேவனுடைய திட்டம் வேறு. “என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என் பகைஞருக்கும் என்னை விடுவித்தார்” (வச. 18).
தேவன் தாவீதை சவுலின் கைக்கு தப்புவித்தார். அவர் இஸ்ரவேலை எகிப்தியர்களின் கைக்கு தப்புவித்தார். கிறிஸ்துவில், தேவன் நம் அனைவரையும் தப்புவித்தார். இயேசு நம்மை பாவம், தீமை, மரணம் ஆகியவற்றிலிருந்து தப்புவித்தார். எல்லா பலத்த சத்துருக்களைக் காட்டிலும் தேவன் பெரியவர்.
திரளான ஜனங்கள்
ஞாயிறு காலை ஆராதனைக்கு நாங்கள் மகிழ்ச்சியோடும் எதிர்பார்போடும் ஒன்றுதிரண்டோம். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நாங்கள் இடைவெளியோடு அமர்ந்திருந்தாலும், ஒரு இளம் ஜோடியின் திருமண நிகழ்வை பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. தொழில்நுட்ப அறிவில் தேறிய எனது திருச்சபை நண்பர்கள் அந்த ஆராதனையை, ஸ்பெயின், போலந்து மற்றும் செர்பியா ஆகிய நாடுகளிலிருந்து தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் நேரடியாய் ஒளிபரப்பினர். இந்த ஆக்கப்பூர்வமான அணுகுமுறை திருமண உடன்படிக்கையில் மகிழ்ச்சியடைய உதவியது. தேவனுடைய ஆவி எங்களை ஒன்றிணைத்து எங்களை மகிழ்ச்சியடையச் செய்தது.
“சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து” (வெளி. 7:9) வந்தவர் பரலோகத்தில் தேவனுக்கு முன்பாக நின்றிருந்த அதே மகிமையை, எங்களுடைய அந்த ஞாயிறு ஆராதனையில் பலதரப்பட்ட மக்கள் மத்தியில் நின்று நாங்களும் சிறிதளவு ருசிக்க நேர்ந்தது. அன்பான சீஷனாகிய யோவான் தன் தரிசனத்தில் கண்ட இந்த திரளான ஜனக்கூட்டத்தை வெளிப்படுத்தல் புத்தகத்தில் நினைவுகூருகிறார். அதில் கூடியிருக்கிறவர்கள் தூதர்களோடும் மூப்பர்களோடும் இணைந்து தேவனை துதிக்கின்றனர்: “ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக. ஆமென்” (வச. 12).
இயேசுவின் இந்த கலியாணத்தில் சர்வதேச மனையாட்டி இணையும் இந்த ஆட்டுக்குட்டியானவரின் கலியாணவிருந்தில் (19:9) ஆராதனையும் கொண்டாட்டமும் இடம்பெறும். பலதேசங்களைச் சேர்ந்த மக்கள் கூடி ஆராதித்த அந்த ஞாயிறு ஆராதனையானது, ஒரு நாள் நாம் பரலோகத்தில் இப்படியாய் கூடி ஆராதிப்போம் என்பதைப் பிரதிபலித்தது.
அந்த மகிழ்ச்சியான அனுபவத்திற்காக காத்திருக்கிற இந்த நாட்களில், நாம் தேவ ஜனத்தோடு கூடி விருந்தை ஆசரித்து மகிழ்ந்திருப்போம்.
ஒன்றாய் தரித்திருங்கள்
ஒரு கோழி தொடையினால் டெவ்பெர்ரி பாப்திஸ்து திருச்சபை 1800ல் இரண்டாய் பிளவுபட்டது. அதைக் குறித்து பல கதைகள் நிலவுகிறது. ஆனால் அத்திருச்சபையின் தற்போதைய அங்கத்தினர் ஒருவர் சொல்லும்போது, அத்திருச்சபையின் விருந்தின்போது, ஒரு கடைசி கோழி தொடைக் கறிக்காய் இருவர் சண்டையிட்டுக்கொண்டனர், அதில் ஒருவர் அந்த கோழித் தொடை தேவனுக்குரியது என்றார் ; மற்றவர் தேவன் அதை கேட்கமாட்டார், எனக்கு அது தேவை என்றார். அந்த மனிதன் மிகுந்த கோபப்பட்டு, இரண்டு கிலோமீட்டர் தள்ளி இரண்டாவது டெவ்பெர்ரி பாப்திஸ்து திருச்சபையை ஸ்தாபித்தார். அதிர்ஷ்டவசமாக அந்த திருச்சபைகள் பிரச்சனைகளை அமர்த்தி, சபை பிளவுபட்டதற்கான இந்த கீழ்த்தரமான காரணத்தைத் தங்களுக்குள்ளாகவே மறைத்துக்கொண்டனர்.
இயேசு ஏற்றுக்கொள்கிறார். அவருடைய மரணத்திற்கு முந்தினநாள் இரவில் அவரை பின்பற்றுகிறவர்களுக்காக அவர் ஜெபிக்கிறார். “அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்” (யோவான் 17:21-23).
பவுல் ஏற்றுக்கொள்கிறார். “சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள். ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு” (எபேசியர் 4:3-4) என்று வலியுறுத்துகிறார். அவைகள் பிரிக்கப்படவும் முடியாது.
நம்முடைய பாவங்களுக்காக கிறிஸ்துவின் சரீரம் உடைக்கப்பட்டது என்பதை நம்பும் நாம், அவருடைய சரீரமாகிய திருச்சபையை, கோபம், புறம்பேசுதல், பிரிவினைகள் என்று தகர்க்கக்கூடாது. சபை ஊழல்களில் சிக்குவதைக் காட்டிலும் நமக்கு நாமே தீங்கிழைத்துக்கொள்வது மேல். மற்றவர்களுக்கு கோழித் தொடையை தாருங்கள், அத்துடன் சுவையான தின்பண்டத்தையும் சேர்த்துத் தாருங்கள்.