ஒரு கோழி தொடையினால் டெவ்பெர்ரி பாப்திஸ்து திருச்சபை 1800ல் இரண்டாய் பிளவுபட்டது. அதைக் குறித்து பல கதைகள் நிலவுகிறது. ஆனால் அத்திருச்சபையின் தற்போதைய அங்கத்தினர் ஒருவர் சொல்லும்போது, அத்திருச்சபையின் விருந்தின்போது, ஒரு கடைசி கோழி தொடைக் கறிக்காய் இருவர் சண்டையிட்டுக்கொண்டனர், அதில் ஒருவர் அந்த கோழித் தொடை தேவனுக்குரியது என்றார் ; மற்றவர் தேவன் அதை கேட்கமாட்டார், எனக்கு அது தேவை என்றார். அந்த மனிதன் மிகுந்த கோபப்பட்டு, இரண்டு கிலோமீட்டர் தள்ளி இரண்டாவது டெவ்பெர்ரி பாப்திஸ்து திருச்சபையை ஸ்தாபித்தார். அதிர்ஷ்டவசமாக அந்த திருச்சபைகள் பிரச்சனைகளை அமர்த்தி, சபை பிளவுபட்டதற்கான இந்த கீழ்த்தரமான காரணத்தைத் தங்களுக்குள்ளாகவே மறைத்துக்கொண்டனர்.

இயேசு ஏற்றுக்கொள்கிறார். அவருடைய மரணத்திற்கு முந்தினநாள் இரவில் அவரை பின்பற்றுகிறவர்களுக்காக அவர் ஜெபிக்கிறார். “அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்” (யோவான் 17:21-23). 

பவுல் ஏற்றுக்கொள்கிறார். “சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள். ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு” (எபேசியர் 4:3-4) என்று வலியுறுத்துகிறார். அவைகள் பிரிக்கப்படவும் முடியாது. 

நம்முடைய பாவங்களுக்காக கிறிஸ்துவின் சரீரம் உடைக்கப்பட்டது என்பதை நம்பும் நாம், அவருடைய சரீரமாகிய திருச்சபையை, கோபம், புறம்பேசுதல், பிரிவினைகள் என்று தகர்க்கக்கூடாது. சபை ஊழல்களில் சிக்குவதைக் காட்டிலும் நமக்கு நாமே தீங்கிழைத்துக்கொள்வது மேல். மற்றவர்களுக்கு கோழித் தொடையை தாருங்கள், அத்துடன் சுவையான தின்பண்டத்தையும் சேர்த்துத் தாருங்கள்.