மிதுன் தன்னுடைய டெட்டி பொம்மையை எப்போதும் கட்டிப்பிடித்து தூங்கும் ஒரு சிறு பிள்ளை. அவன் போகுமிடமெல்லாம் அதைக் கொண்டு செல்வான். அவனுக்கு அது தேவையான ஆறுதலாயிருந்தது. அவனுடைய சகோதரி மேகாவிற்கு அது பிடிக்கவில்லை. ஆகையால் அவனுடைய அந்த பொம்மையை அவள் அடிக்கடி ஒளித்துவைத்துவிடுவாள். அந்த பொம்மையை சார்ந்து வாழுவது தவறு என்பது மிதுனுக்கு தெரிந்தாலும், அவன் அதை எப்போதும் தன்னோடே வைத்து பழகிவிட்டான். 

“கிறிஸ்மஸ் என்றால் என்ன?” என்ற தலைப்பில் திருச்சபையில் சிறுவர்களுக்கான கிறிஸ்மஸ் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் மிதுன் ஒரு காட்சியில் முன்வந்து, லூக்கா 2:8-14ஐ மனப்பாடமாய் சொல்லவேண்டும். அதிலும் “பயப்படாதிருங்கள்” என்ற வார்த்தையை சொல்லும்போது, அவன் பயப்படும்போதெல்லாம் தன்னோடு வைத்திருந்த அந்த டெட்டி பொம்மையை கீழே வைத்துவிட்டு வந்து சொன்னான். 

நாம் பயப்படத்தேவையில்லை என்பதை கிறிஸ்மஸின் எந்த நிகழ்வு நமக்கு நினைவுபடுத்துகிறது? மேய்ப்பர்களுக்கு தரிசனமான தூதன், “பயப்படாதிருங்கள்… இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” (லூக்கா 2:10-11) என்று கூறுகிறார். 

இயேசுவே நம்மோடிருக்கும் தேவன் (மத்தேயு 1:23). மெய்யான தேற்றரவாளனாகிய ஆவியானவர் மூலமாய் அவர் நமக்கு பிரசன்னமாகியிருக்கிறார் (யோவான் 14:16). ஆகையால் நாம் பயப்படத் தேவையில்லை. நம்முடைய பாதுகாப்பு கம்பளங்களை உதறிவிட்டு, அவர் மீது நம்பிக்கையாயிருப்போம்.