தெற்கு பாப்திஸ்து திருச்சபை பிரசங்கியாரின் முதல் மகனாக நான் வளர்ந்தேன். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் நான் திருச்சபையில் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டேன். அதிகமான ஜூரம் இருந்தால் மட்டும் விடுப்பு எடுக்க அனுமதிக்கப்பட்டேன். ஆனால் நான் சபைக்கு செல்வதை விரும்பினேன். சில வேளைகளில் ஜூரத்தோடு கூட நான் சபைக்கு சென்றிருக்கிறேன். ஆனால் தற்போது உலகம் மாறிவிட்டது. சபைக்கு வருவோரின் எண்ணிக்கை முன்புபோல் இருப்பதில்லை. உடனே தோன்றுகிற கேள்வி, “ஏன்?” ஆனால் அதற்கான பதில் வித்தியாசப்படுகிறது. கேத்லீன் நோரீஸ் என்னும் ஆசிரியர் இந்த கேள்விக்கு ஒரு போதகரிடத்திலிருந்து பதிலை பெறுகிறார். “நாம் ஏன் திருச்சபைக்கு செல்லுகிறோம்?” என்று கேட்டதற்கு, “நாம் திருச்சபைக்கு செல்வது மற்றவர்களுக்காக் அங்கே யாருக்காவது உங்களின் தேவை ஏற்படலாம்” என்று பதிலளிக்கிறார். 

நாம் ஆலயத்திற்கு செல்வதற்கு அது காரணமாயில்லாமல் இருக்கலாம், ஆனால் அவருடைய இந்த பதில் எபிரெயர் நிருப ஆசிரியரின் பதிலை ஒத்திருக்கிறது. அவர் விசுவாசிகளை தங்கள் விசுவாசத்தில் உறுதியாயிருக்கும்படிக்கு வலியுறுத்தி, “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல்” (எபிரெயர் 10:25) இருக்க உற்சாகப்படுத்துகிறார். ஏன்? நாம் சபைக்கு செல்லவில்லையென்றால் ஒருவருக்கொருவர் புத்திசொல்லும் முக்கியமான ஆசீர்வாதத்தை இழந்துவிடுகிறோம் (வச. 25). “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து” செயல்படவேண்டும் (வச. 24). 

சகோதர சகோதரிகளே, மற்றவர்களுக்கு உங்களின் தேவை இருப்பதால் சபை கூடி வருதலை விட்டுவிடாதிருங்கள். அதேபோன்று, அவர்களின் உதவியும் நமக்கு தேவைப்படுகிறது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.