முப்பது ஆண்டுகளாய், ஒரு பெரிய உலகளாவிய ஊழிய நிறுவனத்தில் உண்மையாய் பணியாற்றினார். ஆனால் தன்னுடைய உடன் ஊழியர்களிடம் சமுதாய அநீதிகளைக் குறித்து அவர் விவாதிக்கும்போது, மௌனத்தையே பதிலாய் பெற்றார். கடைசியாக 2020ல் இனவெறியைக் குறித்த விவாதங்கள் உலகம் முழுமையும் பற்றியெரியத்தொடங்கும்போது, அவருடைய உடன் ஊழியர்கள் அதைக்குறித்து வெளிப்படையாய் பேசத்துவங்கினர். வலி கலந்த உணர்வுகளுடன், அந்த விவாதத்தை துவக்கினார். ஆனால் தன் உடன் ஊழியர்கள் தைரியமாய் பேசுவதற்கு இவ்வளவு காலங்களானதா என்று ஆச்சரியப்பட்டார்.

மௌனம் என்பது சிலவேளைகளில் நற்குணாதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பிரசங்கி புத்தகத்தில் சாலமோன் ராஜா எழுதும்போது, “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு… மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு” (பிரசங்கி 3:1,7). 

மதம் மற்றும் இனப்பாகுபாடுகள் நிகழும்போது மௌனமாயிருப்பது மனதில் காயங்களை ஏற்படுத்தும். பேசியதற்காக லூத்தரன் திருச்சபை போதகர் மார்டின் நீமோயெல்லர்ஜெர்மானிய நாட்டில் உள்ள நாசி சிறையில் அடைக்கப்பட்டார்.யுத்தத்திற்கு பின்பு தன் பாடல் ஒன்றில் தன் எண்ணத்தைப் பிரதிபலித்தார். “முதலில் அவர்கள் கம்யூனிஸ்டை தேடி வந்தனர், நான் பேசவில்லை; ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் இல்லை. பின்பு அவர்கள் யூதர்களுக்காய், கத்தோலிக்கர்களுக்காய், மற்றவர்களுக்காய் ஒன்றன்பின் ஒன்றாய் வந்தனர், அப்போதும் நான் பேசவில்லை. கடைசியாய் அவர்கள் எனக்காய் வந்தனர், அப்போது எனக்காக பேச யாருமில்லை” என்று எழுதுகிறார். 

அநியாயத்திற்கு எதிராய் குரல்கொடுக்க நமக்கு தைரியமும் அன்பும் தேவைப்படுகிறது. இப்போதே பேச வேண்டிய நேரம் என்பதை உணர்ந்து தேவனுடைய உதவியை நாடுவோம்.