கோவிட் 19 பெருந்தொற்றின்போது, பாதிக்கப்படாமல் இருப்பதற்காக சிங்கப்பூரைச் சேர்ந்த பலர் வீட்டினுள்ளேயே தங்கினர். ஆனால் நான், நீச்சல் அடிப்பது நல்லது என்பதினால் அதை மட்டும் விடாமல் செய்துவந்தேன். 

ஆனால் பொதுவான நீச்சல் குளத்திலிருந்து நான் தொற்றை,தன்னுடைய பெலீனமான தாயாருக்கு பரப்பிவிடுவேனோ என்று என் மனைவி அஞ்சினாள். “எனக்காக தயவுசெய்து உங்களுடைய நீச்சல் பயிற்சியை சில காலம் ஒதுக்கி வைக்க முடியுமா?” என்று என் மனைவி என்னிடத்தில் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டாள். 

அதில் பிரச்சனை ஒன்றுமில்லை என்று நானும் ஆரம்பத்தில் விவாதிக்கத் துவங்கினேன். ஆனால் பின்பாக, அது அவளுடைய உணர்வைக் காயப்படுத்தும் என்று எண்ணினேன். இது முக்கியமான ஒன்று என்று எனக்கு தோன்றினாலும், அது என் மனைவியை உணர்வு ரீதியாய் காயப்படுத்துமென்றால் அதை ஏன் நான் செய்யவேண்டும்? 

ரோமர் 14இல், கிறிஸ்துவுக்குள் இருக்கும் விசுவாசிகள், குறிப்பிட்ட சில ஆகாரங்களைப் புசிக்கலாமா, குறிப்பிட்ட சில பண்டிகைகளை ஆசரிக்கலாமா என்பது போன்ற சில காரியங்களை பவுல் விவாதிக்கிறார். சிலர் தங்களுடைய கருத்துக்களை மக்கள் மீது திணிக்கிறார்கள் என்று பவுல் வருந்துகிறார். 

சூழ்நிலையை வித்தியாசமாய் கையாளும்படிக்கு பவுல், ரோமத் திருச்சபைக்கும் நமக்கும் ஆலோசனைக் கொடுக்கிறார். நம்முடைய சிந்தனைகளையும் பழக்கவழக்கங்களையும் பாதிக்கும் பல்வேறு பின்னணியத்திலிருந்து நாம் வந்துள்ளோம். “இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள்” (வச.13) என்று பவுல் குறிப்பிடுகிறார். 

தேவனுடைய அன்பை சக விசுவாசிகளிடத்தில் பிரதிபலிக்கும் மேலான சுதந்திரத்தை தேவ கிருபையினால் நாம் பெற்றிருக்கிறோம். ஆயினும் அந்த சுதந்திரத்தை நாம் விரும்பியபடி பிரயோகிக்கிறவர்களாயிராமல், சுவிசேஷத்தின் சத்தியத்தில் மற்றவர்களுக்கு இடறல் ஏற்படாத வகையில் அவைகளை பிரயோகப்படுத்தவேண்டும் (வச. 20).