இன்று மின்னணு உபயோகப்பொருட்களை மின்சாரத்துடன் இணைக்கும்போது நாம் பயனடைகிறோம். இது 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏறெடுக்கப்பட்ட கசப்பான முயற்சியின் விளைவு. தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் நிகோலா டெஸ்லா ஆகிய இருவரும் ஆண்டுகளாய் போராடி, மின்கலத்திலிருந்து புறப்பட்டு விளக்கை ஒளிரச்செய்யும் நேரடி மின்னோட்டம் மற்றும் மின்கம்பிகளிலிருந்து நாம் பெறும் மாறுதிசை மின்னோட்டம் -நல்ல வகையான மின்சாரத்தைக் கண்டுபிடித்தனர்:
டெஸ்லாவின் இந்த மாறுதிசை மின்னோட்ட கண்டுபிடிப்பு, வீடுகள், அலுவலகங்கள் என்று உலகத்திற்கே பயன்படும் வகையில் அமைந்தது. இந்த மாறுதிசை மின்னோட்டமே அதிக தூரத்தை எளிதில் கடந்து மின்சாரத்தை பாய்ச்சும் ஞானமான ஒரு கண்டுபிடிப்பு என்று நிரூபிக்கப்பட்டது.
சிலவேளைகளில் கிறிஸ்தவர்களாகிய நமக்குள் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண நமக்கு ஞானம் தேவைப்படுகிறது (ரோமர் 14:1-2). அதற்கு நாம் தேவனுடைய உதவியை நாடும்படிக்கு பவுல் அறிவுறுத்துகிறார். “எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்” (பிலிப்பியர் 3:15) என்று ஆலோசனை கூறுகிறார். அதற்கு பின்பு, பவுலை வேதனைப்படுத்திய பிரிவினையை உண்டுபண்ணிய இருதரப்பினரைக் குறித்து, “கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்திசொல்லுகிறேன்” (4:2) என்று தொடர்ந்து கூறுகிறார்.
நமக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் முரண்பாடான கருத்துக்கள் தோன்றும்போது, சத்தியம் போதிக்கும் தேவனுடைய கிருபையையும் ஞானத்தையும், மூப்பர்களின் ஆலோசனையையும், ஜெபத்தின் வல்லமையையும் சார்ந்துகொள்ள வேண்டும். அவருக்குள் “ஒரே சிந்தையாயிருக்கக்கடவோம்” (வச. 2).
உங்களுடைய கடினமான சூழ்நிலைகளில் தேவனுடைய கிருபையையும் ஞானத்தையும் எவ்வாறு செயல்படுத்தப் போகிறீர்கள்? இந்த பிரச்சனையை நீங்கள் மேற்கொள்ள ஜெபம் ஏன் முக்கியம்?
அன்பான தேவனே,என் கடினமான வாழ்க்கையின் பாதையில் எங்கு செல்வது என்று தெரியவில்லை. பரிசுத்த ஆவியின் துணையோடு அடுத்து நான் என்ன செய்யவேண்டும் என்று எனக்குக் கற்றுத்தாரும்.