தன் 90ஆம் அகவையில் அனிதாவின் உயிர் தூங்கிக்கொண்டிருக்கும்போதே பிரிந்தது. அமைதியான இந்த உயிர் பிரிவு அவர்களின் அமைதியான வாழ்க்கையை பிரதிபலித்தது. ஒரு விதவையாய் தன் பிள்ளைகளையும் பேரன் பேத்திகளையும் பராமரித்த அவர்களுக்கு திருச்சபையில் ஒரு வாலிப சிநேகிதியும் இருந்தாள். 

அனிதா நினைவுகூறும் வகையில் திறமையானவரோ அல்லது சாதனையாளரோ அல்ல. ஆனால் அவருடைய ஆழமான விசுவாசத்தை அவரை அறிந்த யாவரும் அறிவர். என்னுடைய சிநேகிதி ஒருவர் சொல்லும்போது, “ஒரு பிரச்சனையில் நின்று என்ன செய்வதென்று தெரியாமல் நான் திகைக்கும்போது, எந்த ஒரு பிரபல பிரசங்கியாரின் வார்த்தைகளும் எனக்கு நினைவுக்கு வருவதில்லை; அனிதா சொன்ன வார்த்தைகள் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது” என்று சொன்னாள்.

நம்மில் அநேகர் அனிதாவைப் போன்றே சாதாரணமான மனிதர்களாய் சாதாரணமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கலாம். நம்முடைய பெயர் செய்திகளில் இடம்பெறாமலிருக்கலாம். நம்மை கனப்படுத்தும் வகையில் நினைவு மண்டபம் கட்டப்படாமல் இருக்கலாம். ஆனால் கிறிஸ்துவுக்குள் வாழும் விசுவாச வாழ்க்கை என்பது சாதாரணமான ஒன்று கிடையாது. எபிரெயர் 11ஆம் அதிகாரத்தின் விசவாசப்பட்டியலில் இடம்பெற்றுள்ள சில நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை (வச.35-38). அவர்கள் குழப்பத்தின் பாதையில் கடந்துபோய், இவ்வுலகத்தில் வாக்குப்பண்ணப்பட்ட வெகுமதிகளை இவ்வாழ்க்கையில் பெறவில்லை (வச.39). ஆயினும் அவர்கள் கீழ்ப்படிந்ததினால், அவர்களின் விசுவாசம் வீணாய்ப் போகவில்லை. தேவன் அவர்களின் மதிப்பு குறையாமல் அவர்களின் வாழ்க்கையை அபரிவிதமாய் பயன்படுத்தினார் (வச.40).

உங்களுடைய வாழ்க்கை மிகச் சாதாரணமாய் கடந்து போகிறதே என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் விசுவாசத்தில் வருகிற வாழ்க்கைக்கு நித்திய மேன்மை இருக்கிறது என்பதை நினைவில் கொள்வோம். நாம் சாதாரணமானவர்களாய் இருந்தாலும், அசாதாரணமான விசுவாசத்தின் பிரதிநிதிகளாய் நம்மால் மாறமுடியும்.