சக் தே! இன்டியா! என்னும் பாலிவுட் (இந்தி) கற்பனைத் திரைப்படம் 2002ஆம் ஆண்டின் காமன்வெல்த் விளையாட்டில் பங்குபெற்ற பெண்கள் ஹாக்கி குழுவினரின் வெற்றியைக் குறித்து இயக்கப்பட்டுள்ளது. அதின் ஒரு காட்சியில் அக்குழுவின் பயிற்சியாளராகிய ஷாருக்கான், அக்குழுவில் நட்பு மற்றும் குழுவாய் செயல்படுவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவார். துவக்கத்தில் அக்குழுவைச் சேர்ந்த ஒவ்வொரு நபரும் தங்கள் பெயரையும் தங்களுடைய மாநிலத்தையும் அறிமுகப்படுத்திக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை மாற்றி, அவர்கள் அனைவரும் இந்தியா என்னும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்துவார். இந்த மனநிலை உலக அரங்கில் அவர்களை ஒரு வெற்றிக் குழுவாய் மாற்றும். 

தேவனும் தன்னுடைய ஜனங்கள் குழுவாய் செயல்பட்டு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று விரும்புகிறார். பவுல் அப்போஸ்தலர், “ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்” (1 தெசலோனிக்கேயர் 5:11) என்று தெசலோனிக்கேயர்களுக்கு அறிவுறுத்துகிறார். நம் வாழ்க்கைக்கு ஓர் ஆதரவைக் கொடுக்கும் பொருட்டே தேவன் நம்மை தேவ ஜனத்தின் குழுவில் இணைத்துள்ளார். நாம் ஒருவரையொருவர் ஆதரித்து, கிறிஸ்துவின் பாதையில் நம் ஜீவியத்தை நகர்த்தவேண்டும். அது சில வேளைகளில், கடினமான பாதையில் பயணிக்கும் நபர்களின் வேதனையை செவிகொடுத்து கேட்பதாக இருக்கலாம்; மற்றவர்களின் தேவையை சந்திப்பதாக இருக்கலாம், மற்றவர்களை உற்சாகப்படுத்துவதாகக் கூட இருக்கலாம். நாம் வெற்றியைக் கொண்டாடி, ஒருவருக்காக ஒருவர் வேண்டுதல் பண்ணி, ஒருவரையொருவர் விசுவாசத்தில் வளர உதவவேண்டும். எல்லாவற்றிலும் ஒருவருக்கொருவர் “எப்பொழுதும் நன்மை செய்ய” நாடவேண்டும் (வச.15).

தேவனைத் தொடர்ந்து விசுவாசிக்க, விசுவாசிகளாகிய நாம் எந்த நட்புறவை நடைமுறைப்படுத்துகிறோம்!