என் மனைவி அதிகமாய் பார்க்க விரும்பும் ஒரு கலைஞனின் இசை நிகழ்ச்சியைக் கேட்க, அதற்குரிய டிக்கெட்டுகளுடன் அவளை ஆச்சரியப்படுத்தினேன். திறமை மிக்க அந்தப் பாடகர் ஒரு இசைக்குழுவுடன் வந்திருந்தார். மேலும் அந்த அமைப்பு கடல் மட்டத்திலிருந்து 6000 அடிகளுக்கு மேல், 300 அடி பாறை அமைப்புகளுக்கிடையே கட்டப்பட்ட ஒரு அரைவட்ட அரங்கமாயிருந்தது. இசைக்குழுவினர், எல்லாராலும் அதிகமாய் நேசிக்கப்பட்ட அநேக இலக்கிய நயம் வாய்ந்த மற்றும் நாட்டுப்புற இசைகளை வாசித்தனர். “அமேஸிங் கிரேஸ்” என்ற உன்னதமான பாடலை அவர்கள் இறுதியாக வாசித்தனர். அந்த அழகான, உகந்ததான ஏற்பாடு எங்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. 

நல்லிணக்கத்தைப் பற்றி ஏதோ அழகான – தனித்தனியான கருவிகள் ஒன்றாக சேர்ந்து இசைக்கப்படும்போது பெரிய மற்றும் அடுக்கடுக்கான கவிஞர்களின் இயற்கை நிலக்காட்சி போல படைக்கப்பட்டது. அப்போஸ்தலனாகிய பவுல், பிலிப்பியருக்கு எழுதும்போது, அழகான நல்லிணக்கம் – “ஏக சிந்தையும்” “ஏக அன்பும்”, இசைந்த ஆத்துமாக்களாய்” “ஒன்றையே சிந்தித்து” கொண்டிருப்பது என்று சுட்டிக்காட்டினார் (பிலிப்பியர் 2:2). இயேசுவின் தாழ்மையான மனப்போக்கு மற்றும் அவரையே கொடுக்கும் அன்பைப் போலவே அல்ல. மாறாக, அதையே தழுவிக்கொள்ளவே அவர் நம்மிடம் கூறுகிறார். பவுல் நன்கு அறிந்த மற்றும் கற்றுக்கொடுத்த சுவிசேஷம், நம்முடைய வேறுபாடுகளை அழிக்காது. ஆனால் நம்மிடையே உள்ள பிரிவினைகளை அகற்றிவிடும். பல அறிஞர்கள், இங்குள்ள பவுலின் வார்த்தைகள் (வச. 6-11), ஒரு ஆரம்பக்கால பாடலுக்கு முகவுரையாய் இருக்கும் என்று நம்புவது சுவாரஸ்யமானது. 

நம்முடைய தனித்துவமான வாழ்க்கையிலும், சூழலிலும் நாம் பரிசுத்த ஆவியானவரை கிரியைசெய்ய அனுமதிக்கும்போது, இயேசுவைப் போல நம்மை மாற்றி, நாம் எல்லாரும் சேர்ந்து, கிறிஸ்துவின் தாழ்மையான அன்பை பிரதிபலிக்கும் இசைக்குழுவைப் போலாகிறோம்.