நம்முடைய நினைவை விட்டு எப்போதுமே நீங்காத சில பிம்பங்கள் உண்டு. வேல்ஸ் நாட்டின் மறைந்த இளவரசியான டயானாவின் பிரபல புகைப்படத்தை பார்வையிட்டபோது நானும் அப்படியே உணர்ந்தேன். முதல் பார்வையில் அந்த புகைப்படம் பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாய், இயல்பான புன்சிரிப்போடு இளவரசி டயானா, யாரோ ஒருவரின் கைகளை குலுக்கியபடி நின்றிருந்தார். ஆனால் அந்த புகைப்படத்தின் பின் கதை ஆச்சரியமானது. 

ஏப்ரல் 19, 1987 அன்று இளவரசி டயானா லண்டனின் மிடில்செக்ஸ் மருத்துவமனையை பார்வையிட்டார். எயிட்ஸ் வியாதி தீவிரமாய் பரவி இங்கிலாந்தையே அச்சுறுத்திக்கொண்டிருந்த தருணம் அது. அந்த கொடிய நோய் மக்களை கொன்று குவித்துக்கொண்டிருந்தது. எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை தீண்டத்தகாதவர்களாய் கருதினர். 

அந்த தருணத்தில் எந்த கையுறையும் அணியாமல் ஒரு எயிட்ஸ் நோயாளியை புன்சிரிப்புடன் கைகுலுக்கிய இந்த தருணம் ஆச்சரியப்பட வைத்தது. அந்த புகைப்படம், எயிட்ஸ் நோயாளிகளை அதே கனிவுடனும் பரிவுடனும் ஆதரிக்க வேண்டும் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தியது. 

நான் அடிக்கடி மறக்கிற ஒன்றை அந்த புகைப்படம் எனக்கு நினைவூட்டியது. இயேசுவின் அன்பை மற்றவர்களுக்கு இலவசமாய் தாராளமாய் கொடுக்கவேண்டும். பயந்துகொண்டே நாம் காட்டுகிற அன்பு, மரணத்தில் வாழ்வதற்கு சமானம் (1 யோவான் 3:14) என்று யோவான் ஆதி கிறிஸ்தவர்களுக்கு நினைப்பூட்டுகிறார். உண்மையான அன்போடு, பயமின்றி, தன்னையே கொடுக்கும் தியாகமான அன்பினால் ஊக்கப்படுத்தப்பட்டவர்களாய் உயிர்த்தெழுந்த ஜீவியத்தை வாழ்வதற்கும் உற்சாகப்படுத்துகிறார் (வச. 14,16).