தேவன் கொடுக்கும் மகிழ்ச்சி
திவ்யா வீதியில் நடக்கும்போதெல்லாம் எதிர்படுபவர்களை எல்லாம் புன்முறுவலோடு எதிர்கொள்வது வழக்கம். சிநேகிக்கும் முகங்களை பார்க்க விரும்புபவர்களை அவள் வரவேற்கும் விதம் அப்படியாக இருந்தது. பல வேளைகளில் பெரும்பாலானோரின் உண்மையான புன்னகை அவளுக்கு பதிலாக கிடைக்கும். முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டபின், அவளுடைய முகத்தை யாரும் பார்க்க முடியாததால், அவள் சிரிப்பையும் யாரும் பார்க்கமுடியாது என்பதை அவள் உணர்ந்தாள். அது கடினம் என்றாலும் “நான் அதை நிறுத்தப்போவதில்லை, நான் சிரிப்பதை மற்றவர்கள் என் கண்களின் மூலமாய் பார்க்கட்டும்” என்று தீர்மானித்தாள்.
இந்த தீர்மானத்திற்கு பின் ஒரு சிறிய அறிவியல் பூர்வமான காரியம் உண்டு. வாயின் இருபுறமுள்ள தசைகளும் கண்களை சுறுக்கச்செய்யும் தசையும் இணைந்தே செயல்படும். இதனை “டுசென்னே” புன்னகை என்று அழைப்பர். அதற்கு, “கண்களால் சிரிப்பது” என்றும் அர்த்தம் உண்டு.
நீதிமொழிகள், “கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கட்டும்” என்றும் “மனமகிழ்ச்சி நல்ல ஓளஷதம்” (15:30; 17:22) என்றும் குறிப்பிடுகிறது. பெரும்பாலான நேரத்தில் தேவ பிள்ளைகளாகிய நம்மிடத்திலிருந்து வெளிப்படுகிற புன்னகை நாம் பெற்றிருக்கிற உன்னதமான மகிழ்ச்சியிலிருந்து வெளிப்படுகிறது. அது, அதிகமான பாரத்தை சுமக்கிற மக்களை உற்சாகப்படுத்தவும், வாழ்க்கையில் கேள்வியோடு பயணிக்கிறவர்களோடு பகிர்ந்துகொள்ளவும் நம் வாழ்க்கையிலிருந்து வழிந்தோடும் தேவனுடைய வரமாய் இருக்கிறது. நாம் உபத்திரவத்தைச் சந்திக்கும்போது என் மகிழ்ச்சி புன்னகையில் பிரதிபலிக்கும்.
இயேசுவுக்காய் பூத்துக் குலுங்குதல்
நான் அந்த அல்லிப் பூக்களுக்கு உண்மையாய் இல்லை. வெளிநாட்டிற்கு சென்று அமெரிக்கா திரும்பிய என்னுடைய மகள் எனக்கு பரிசாக வாங்கி வந்த அல்லிப்பூக்களின் பூண்டுகள். அவளை மீண்டும் நான் சந்தித்த ஆச்சரியத்தைப் போலவே அந்த பரிசைப் பார்த்ததும் ஆச்சரியப்படுவதுபோல காண்பித்துக்கொண்டேன். ஆனால் எனக்கு அல்லிப் பூக்கள் மீது ஆர்வம் இல்லை. ஏனெனில், அவைகளில் சிலவை சீக்கிரம் பூத்து, சீக்கிரம் வாடிவிடும். ஜூலை மாதத்தின் வெட்பமான சூழ்நிலை அதை பயிரிடுவதற்கு உகந்ததும் இல்லை.
செப்டம்பர் மாத இறுதியில் என் மகள் பரிசளித்த அல்லிப் பூண்டுகளை அன்போடு விதைத்தேன். பாறை மணலில் அதின் வளர்ச்சியைக் குறித்து நான் சந்தேகித்தேன். அதற்கென்று ஒரு மணல் பரப்பில் அதை நட்டு, அது வசந்தகாலத்தில் பூக்கும் என்ற நம்பிக்கையோடு கடைசியாய் அதனை தடவி “நன்றாய் தூங்கு” என்று சொல்லிவிட்டு வந்தேன்.
என்னுடைய இந்த செய்கை, நாம் விரும்பாத நபராயினும் ஒருவரையொருவர் நேசியுங்கள் என்று தேவன் நமக்கு கொடுத்த அழைப்பை நினைவுபடுத்துகிறது. நம் ஒவ்வொருவரின் கடந்தகால தவறான “களைகளை” திரும்பிப்பார்த்து, வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைகளிலும் நம் அன்பைப் பிரதிபலிக்க தேவனால் ஊக்குவிக்கப்படுகிறோம். காலங்கள் நகர, மெய்யான அன்பு பூக்கத் துவங்குகிறது. “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார். அவரால் கிளைநறுக்கப்பட்டு, வசந்த காலத்தில் என் அல்லிப் பூக்கள் பூத்துக் குலுங்கியதைப் போன்று நாமும் பூத்துக் குலுங்குவோம்.
அந்த வாரயிறுதியில் என் மகள் மீண்டும் வீட்டிற்கு வந்தாள். “பார்! அங்கே என்ன பூத்திருக்கிறது” என்று அவளுக்கு காட்டினேன். நானும் மலர்ந்திருந்தேன்.
ஜெபமும் மணலும் நட்சத்திரங்களும்
அதீதியும் ஆகாஷும் குழந்தைக்காய் ஏங்கினர். ஆனால் அவர்களுடைய மருத்துவர் அது சாத்தியமில்லை என்று கூறிவிட்டார். அதீதி தன் சிநேகிதியிடம் “நான் தேவனோடு நேர்மையாக பேசவிரும்புகிறேன்” என்றாள். அவ்வாறு பேசியதின் விளைவாய், அவளும் ஆகாஷும் அவர்களின் போதகரை சந்தித்து, சபையில் குழந்தை தத்தெடுக்கும் ஊழியத்தைத் துவங்க ஆலோசித்தார்கள். சரியாய் ஒருவருடம் கழித்து, அவர்கள் ஒரு ஆண் குழந்தையைத் தத்தெடுத்தனர்.
ஆதியாகமம் 15இல், ஆபிராமுக்கும் தேவனுக்கும் இடையில் நேர்மையான உரையாடல் ஒன்று நிகழ்கிறது. தேவன் அவனிடம், “ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்கு… மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்” (வச. 1). ஆனால் தன் எதிர்காலத்தைக் குறித்து நிச்சயமில்லாதிருந்த ஆபிராம், “கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே” என்று வெளிப்படையாய் பேசுகிறான் (வச. 2).
ஆபிராமுக்கு ஏற்கனவே தேவன், “உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்” என்று வாக்குப்பண்ணியிருக்கிறார் (13:16). தற்போது தேவன் அதை மீண்டும் அவனுக்கு நினைவுபடுத்துகிறார். இங்ஙனம் தேவனுடைய பதிலைப் பாருங்கள்: தேவன் அவனை வானத்தை அண்ணாந்து பார்க்கும்படி செய்து, “நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு” என்று சொல்லி, அதைப்போலவே எண்ணக்கூடாத அளவு அவனுடைய சந்ததி இருக்கும் என்று குறிப்பிடுகிறார் (15:5).
பின்பாக, தேவன் அவனுடைய பெயரை ஆபிரகாம் (ஜாதிகளுக்கு தகப்பன்) என்று மாற்றுகிறார். ஆபிரகாமைப் போல் நீங்களும் நானும் நேர்மையாய் நம்மை வெளிப்படுத்தி, நமக்கும் மற்றவர்களுக்கும் அவர் நன்மை செய்வார் என்று பூரணமாய் நம்புவோம்.
தேவன் நம்மை சுமக்கிறார்
சென்னைப் பட்டணத்தில் 2015ஆம் ஆண்டு, வரலாற்றில் இதுவரை இடம்பெறாத பெருவெள்ளம் வந்து பலரை பாதிப்பிற்குள்ளாக்கியது. வீட்டில் இனி தங்கியிருப்பது சாத்தியமல்ல என்று எண்ணிய அவர், தன் சிறு குழந்தையுடன் வெளியேறினார். அவர் பார்வையற்றவர் என்றபோதிலும் தன் மகனைக் காப்பாற்றியாக வேண்டும். தன் மகனை தன் தோள்மீது மென்மையாய் அமரச்செய்து, ஆழமான அந்த தண்ணீரில் பாதுகாப்பை நோக்கி நடக்கிறார்.
இத்தனை இடர்களையும் தாண்டி தன்னுடைய பிள்ளையைக் காப்பாற்ற ஒரு மாம்ச தகப்பன் என்னும்போது, நம்முடைய பரம தகப்பன் அவருடைய பிள்ளைகளின் மீது எந்த அளவிற்கு அக்கறை எடுத்துக்கொள்வார்! பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் ஜனங்கள் விசுவாசத்தில் தடுமாற்றமடைந்த நேரத்திலும் தேவன் அவர்களை எப்படி நடத்தி வந்தார் என்பதை மோசே நினைவுகூருகிறார். தேவன் அவர்களை எப்படி மீட்டார் என்றும் வனாந்திரத்தில் அவர்களை எப்படி போஷித்தார் என்றும், எதிரிகளோடு யுத்தம்செய்து அவர்களை மேகஸ்தம்பத்தினாலும் அக்கினி ஸ்தம்பத்தினாலும் எப்படி வழிநடத்தினார் என்றும் இஸ்ரவேலர்களுக்கு நினைவுபடுத்துகிறார். அவர்களுக்கு தேவன் எப்படி ஆதரவாய் செயல்பட்டார் என்று எடுத்துரைத்த மோசே, “ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல” (உபாகமம் 1:31) அவர்களை வழிநடத்தி வந்தார் என்று சொல்லுகிறார்.
இஸ்ரவேலர்களின் வனாந்திரப் பயணம் சாதாரணமானது அல்ல; விசுவாசத்திற்கு அடிக்கடி சவாலாய் அமைந்தது. ஆனால் தேவனுடைய பாதுகாப்பிற்கும் வழிநடத்துதலுக்கும் அது தெளிவான ஆதாரம். ஒரு தகப்பன் துணிச்சலோடும் உறுதியோடும் தன் மகனை மென்மையாய் தோளில் சுமப்பதுபோல தேவன் இஸ்ரவேலைச் சுமந்தார். நம்முடைய விசுவாசத்தைச் சோதிக்கும் சவால்களை சந்திக்கும்போது அதிலிருந்து நம்மைத் தூக்கிச்செல்லும் ஆண்டவர் இருக்கிறார் என்பதை நினைவுகூருவோம்.
மிகச்சிறந்த சிம்பொனி இசை
உலகின் புகழ்பெற்ற 150 இசைக்கலைஞர்களிடம் அவர்கள் கேட்டதிலேயே மிகச்சிறந்த 20 சிம்பொனி இசைகளை வரிசைப்படுத்தும் படி ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை கேட்டது. பீத்தோவனின் பெயர் எல்லாவற்றிலும் முதன்மையான இடத்தைத் தக்கவைத்தது. அரசியல் ரீதியாக உலகம் அமைதியிழந்து காணப்பட்ட தருணத்தில் தான் “ஹீரோயிக்” என்னும் பீத்தோவனின் பிரம்மாண்டமான படைப்பு வெளியாகியது. மேலும் அந்த தருணத்தில்தான் பீத்தோவனின் கேட்கும் திறனும் குறையத் தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. மனிதாபிமானம், துணிச்சலான வாழ்க்கைப் போராட்டம் ஆகியவைகளை பிரதிபலித்த இந்த இசையில் உணர்வுகள் பொங்கியது. உச்சகட்ட மகிழ்ச்சி, சோகம், வெற்றிக்களிப்பு என்று உணர்வுகளின் ஊடாய் பயணித்த பீத்தோவனின் மூன்றாம் மாபெரும் சிம்பொனி இசை, மனிதனுடைய ஆவிக்கு கிடைத்த பரிசு.
பவுலின் முதலாம் கொரிந்திய நிருபமும் இதே காரணங்களுக்காக நம் கவனத்தை ஈர்க்கிறது. ஒரு இசையாய் அல்லாமல், வார்த்தைகளாகிய அவைகள், ஆசீர்வாதத்துடன் துவங்கி (1:4-9), ஆத்துமாவை உடைக்கும் சோகத்தினூடாய் கடந்து (11:13-22), வரம்பெற்ற தேவ மனிதர்கள் அவைகளை சகமனிதர்களுக்காகவும், தேவ நாம மகிமைக்காகவும் பயன்படுத்தத் தூண்டும் ஆலோசனையோடு நிறைவடைகிறது (12:6-7).
நம்முடைய ஆவி உயிர்ப்பிக்கப்படுதலே தேவனுடைய ஆவிக்கு நாம் கொடுக்கும் காணிக்கை. கிறிஸ்துவின் விவரிக்கமுடியாத அன்பை உணருவதற்கு பவுல் நம்மை உற்சாகப்படுத்த, நாம் பிதாவாகிய தேவனால் அழைக்கப்பட்டு, குமாரனால் வழிநடத்தப்பட்டு, அவருடைய ஆவியினாலே ஏவப்படுகிறோம் என்பதை காண உதவுகிறார். ஏதோ ஒரு சத்தத்தை பிறப்பிப்பதற்கு அல்ல, மாறாக, உலகின் மாபெரும் சிம்பொனி படைப்பை நம்மிலிருந்து பிறப்பிக்கும் பொருட்டு அது நம்மை தூண்டுகிறது.