இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த நேரம் அது. ஜெர்மானிய  நாசிப்படைகள், ப்ரான்ஸ் ஜகார்ஸ்டேட்டரை இழுத்துக் கொண்டுவந்து அடிப்படை இராணுவப் பயிற்சி கொடுத்தனர். பயிற்சியின்போது அடால்ஃப் ஹிட்லருக்கு உண்மையாயிருக்கும்படிக்கான உறுதிமொழி எடுக்க விரும்பாமல் தவிர்த்தான். எனவே அவனை அவனுடைய பண்ணைக்குத் திருப்பி அனுப்பினர். ஆனால் சிலநாட்களில் யுத்தத்திற்கு வரும்படி அவனுக்கு அழைப்பு வந்தது. ஜெர்மானிய நாசியினரின் கொள்கையையும் யூத இனப்படுகொலையையும் ஏற்கமறுத்த ஜகார்ஸ்டேட்டர், தேவனுக்கு உண்மையாயிருக்க தீர்மானித்து, நாசி படையோடு சேர்ந்து யுத்தத்தில் ஈடுபட மறுத்தான். அவனுடைய மனைவி மற்றும் மூன்று மகள்களும் நிர்க்கதியாய் விடப்பட்டு, ஜகார்ஸ்டேட்டருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

மரணத்தின் பிடியில் நிறுத்தப்பட்டு ஆண்டாண்டுகாலமாய் கிறிஸ்துவை மறுதலிக்கும்படிக்கு கட்டாயப்படுத்தப்பட்ட பல உண்மைக் கிறிஸ்தவர்கள் அதை செய்யாமல் உறுதியாய் நின்றனர். அதில் ஒன்றுதான் தானியேலின் சம்பவம். “எந்த மனுஷனாகிலும்… ராஜாவாகிய உம்மைத் தவிர எந்த தேவனையானாலும்” சேவித்தால் அவனை சிங்கக் கெபியில் போடவேண்டும் என்றும் கட்டளை அதிகாரப்பூர்வமாய் வெளியிடப்பட்டபோதும், தானியேல் கர்த்தருக்கு உண்மையாயிருந்தான். “தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்” (வச. 10). தீர்க்கதரிசி தேவனிடத்தில் முழங்காற்படியிட்டு, என்ன வந்தாலும் சரியென்று தேவனை மட்டும் சார்ந்துகொண்டான். 

சிலவேளைகளில் நம்முடைய தேர்ந்தெடுப்பு தெளிவாயிருக்கும். நம்மைச் சுற்றிலுமிருக்கிற மக்கள் இதைச் செய்யுங்கள் என்று நம்மை தூண்டினாலும், நம்முடைய பேரும் புகழும், சுகவாழ்வும் கேள்விக்குள்ளாக்கப்பட்டாலும், நாம் தேவனுக்கு கீழ்ப்படிவதிலிருந்து பின்வாங்காமல் இருப்போம். அது விலையுயர்ந்த ஆசீர்வாதங்களாயிருந்தாலும் நம்முடைய மறுப்பைத் தெரியப்படுத்துவோம்.