வீதியின் ஒருபுறத்திலிருந்த வீட்டு உரிமையாளர் தன்னுடைய வீட்டில் அரசியல் கட்சி ஒன்றின் கொடியைப் பறக்கவிட்டிருந்தார். அந்த பாதையில் கனரக வாகனம் ஒன்றின் ஜன்னல் கதவிலும் வரையப்பட்ட கொடி ஒன்றும் அதின் முன்பகுதியில் தேசபக்தியை வெளிப்படுத்தும் ஒட்டுக்காதிதங்களும் ஒட்டப்பட்டிருந்தது. அதே வீதியின் இன்னொரு வீட்டின் முற்றத்தில் சமூக அநீதியை எதிர்க்கும் புரட்சி வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. 

இந்த வீடுகளில் இருக்கும் மக்கள் விரோதிகளா? அல்லது நண்பர்களா? என்று நாம் ஆச்சரியப்படலாம். அந்த இரு வீடுகளிலும் இருப்பவர்கள் இயேசுவின் விசுவாசிகளாய் இருக்க முடியுமா? யாக்கோபு 1:19ன் படி வாழுவதற்கு தேவன் நம்மை அழைத்திருக்கிறார்: “யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்.” பெரும்பாலான நேரத்தில் மற்றவர்களின் கருத்துக்கு செவிகொடுக்காமல், நம்முடைய கருத்தையே பிடிவாதமாய் நாம் முன்வைப்பதுண்டு. மேத்யூ ஹென்றி விளக்கவுரையில் இந்த வாக்கியம் சற்று வித்தியாசமாய் இடம்பெற்றுள்ளது: “காரணத்தையும், எல்லா தரப்பு நியாயத்தையும் கேட்கிறதற்கு யாவரும் தீவிரமாயும், பேசுகிறதற்கு பொறுமையாயும்… அப்படி பேசும்போது கோபப்படாத வகையிலும் பேசவேண்டும்.”    

“கற்றுக்கொள்வதற்கு கேட்பது மிகவும் அவசியம்” என்று ஒருவர் சொல்லுகிறார். தேவனுடைய அன்பின் ஆவியினால் நிரப்பப்படுவதினாலும், மற்றவர்களைக் கனப்படுத்த பழகும்போதுமே யாக்கோபு நிருபத்தில் சொல்லப்பட்டுள்ள யதார்த்தமான வார்த்தைகள் சாத்தியமாகும். நம்முடைய இருதயத்திலும் சிந்தையிலும் மாற்றத்தைக் கொண்டுவரும் உதவியைச் செய்ய அவர் வாஞ்சையாயிருக்கிறார். நாம் கேட்பதற்கும் கற்றுக்கொள்வதற்கும் ஆயத்தமா?