Archives: மே 2021

இயற்கையை கவனித்தல்

நானும் என் நண்பரும் எனக்கு பிடித்த நடைபயிற்சி இடத்தை சமீபத்தில் பார்வையிட்டோம். காற்று வீசும் மலையில் ஏறி, காட்டுப்பூக்களின் தோட்டத்தை கடந்து, உயரமான பைன் மரக் காடுகளுக்குள் சென்று, பின்னர் ஒரு பள்ளத்தாக்கில் இறங்கி, அங்கே ஒரு கணம் நின்றோம். மேகங்கள் எங்களுக்கு மேலே மென்மையாக மிதந்தன. அருகில் ஒரு சிறு ஊற்று ஓடியது. பறவைகள் பாடும் ஒலி மட்டுமே அங்கு ஒலித்தது. அதையெல்லாம் உள்ளார அனுபவித்துக்கொண்டு, நானும் என் நண்பனும் பதினைந்து நிமிடங்கள் அமைதியாக அங்கே நின்றோம்.

அன்றைய நாளின் இந்த அனுபவம் எங்களுக்கு ஆழ்ந்த சிகிச்சையை போல் இருந்தது. ஒரு அமெரிக்க பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியின் படி, இயற்கையைப் பற்றி நிதானித்து சிந்திப்பவர்கள் அதிக அளவு மகிழ்ச்சியையும், குறைந்த அளவிலான பதட்டத்தையும், பூமியைப் பாதுகாப்பதற்கான அதிக விருப்பத்தையும் தெரிவிக்கிறார்கள். காட்டின் வழியாக நடந்து செல்வது மட்டும் போதாது; நீங்கள் மேகங்களைப் பார்க்க வேண்டும்; பறவைகளின் ஓசையைக் கேட்கவேண்டும். இயற்கையில் வசிப்பது மட்டுமல்ல; அதை உற்று கவனிப்பதும் மிகவும் அவசியம்.

இயற்கையின் நன்மைகளுக்கு ஆன்மீக காரணம் இருக்க முடியுமா? படைப்பு தேவனின் வல்லமையும் அவரது தன்மையையும் வெளிப்படுத்துகிறது என்று பவுல் கூறுகிறார் (ரோமர் 1:20). தேவன் யோபுவிடம் அவரது பிரசன்னத்தை உணர சமுத்திரத்தையும், வானத்தையும், நட்சத்திரங்களையும் பார்க்கும்படி சொன்னார் (யோபு 38-39). “ஆகாயத்து பட்சிகளை” மற்றும் “காட்டுப் புஷ்பங்களை” பற்றி சிந்தித்துப் பார்ப்பது தேவனின் பாதுகாப்பை வெளிப்படுத்துவதோடு பதட்டத்தையும் குறைக்கும் என்று இயேசு கூறுகிறார் (மத்தேயு 6:25-30). வேதத்தில், இயற்கையை உற்று நோக்குவது ஒரு ஆவிக்குரிய நடைமுறையாய் காண்பிக்கப்பட்டுள்ளது.

இயற்கையானது நம்மை ஏன் மிகவும் நேர்மறையாக பாதிக்கிறது என்று விஞ்ஞானிகள் ஆச்சரியப்படுகிறார்கள். ஒரு காரணம் என்னவென்றால், இயற்கையை கவனிப்பதன் மூலம், அதைப் படைத்த தேவனை பற்றியும் அவர் நம்மை கண்ணோக்குகிறார் என்பது ஒரு காரணமாய் இருக்கலாம். 

அவருக்கு சொந்தமானவர்கள்

அவளும் அவளது கணவரும் தங்கள் குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட்டைப் பெற்றபோது ஷெபா மகிழ்ச்சியுடன் அழுதாள், தத்தெடுப்பு சட்டப்பூர்வமாகக்கப்பட்டது என்பதை என்னி.  இப்போதிருந்து மீனா எப்போதுமே அவர்களின் மகளாக இருப்பாள், என்டென்றும் அவர்களின் குடும்பத்தின் ஒரு அங்கமாக இருப்பாள். ஷெபா சட்ட செயல்முறையை யோசித்தபோது , நாம் இயேசுவின் குடும்பத்தின் அங்கமாகும் போது நடக்கும் "உண்மை பரிமாற்றத்தையும்" அவள் எண்ணினாள்: "இனி நாம் பாவம் மற்றும் முறிவின் பிறப்புரிமையால் இழுக்கப்படாமல்" மாறாக, அவள் தொடர்ந்தாள், தேவனுடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ளப்படும்போது தேவனுடைய ராஜ்யத்தின் பூரனத்தில் சட்டப்பூர்வமாக நுழைகிறோம்.

அப்போஸ்தலன் பவுலின் நாட்களில், ஒரு ரோமானிய குடும்பம் ஒரு மகனைத் தத்தெடுத்தால், அவருடைய சட்டபூர்வமான நிலை முற்றிலும் மாறும். அவனது பழைய வாழ்க்கையிலிருந்த எந்தவொரு கடன்களும் ரத்து செய்யப்படும், மேலும் அவன் தனது புதிய குடும்பத்தின் அனைத்து உரிமைகளையும் சலுகைகளையும் பெறுவான். இந்த புதிய அந்தஸ்து அவர்களுக்கும் பொருந்தும் என்பதை இயேசுவின் விசுவாசிக்கிற ரோமானிய விசுவாசிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பவுல் விரும்பினார் . இனி ஒருபோதும் அவர்கள் பாவத்திற்கும் கண்டனத்திற்கும் கட்டுப்பட்டவர்களல்ல, ஆனால் இப்போது அவர்கள் “ஆவியின் படி” வாகிறார்கள் (ரோமர் 8: 4). மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள் (வச. 14-15). அவர்கள் பரலோகத்தின் குடிமக்களாக மாறியபோது அவர்களின் சட்ட நிலை மாறியது. 

இரட்சிப்பின் பரிசை நாம் பெற்றிருந்தால், நாமும் தேவனின்  பிள்ளைகள், அவருடைய ராஜ்யத்தின் வாரிசுகள், கிறிஸ்துவோடு ஐக்கியப்படுகிறோம். பரிசாகிய இயேசு தன்னை தான் பலியாக கொடுத்ததின் மூலம் நம் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாம் இனி பயத்திலோ அல்லது கண்டனத்திலோ வாழத் தேவையில்லை.

சரியான சொற்கள்

கடந்த ஆண்டுகளில், பல எழுத்தாளர்கள், விசுவாசம் என்ற வார்த்தையின் "சொற்பொருளை" புதியதாகப் பார்க்கும்படி விசுவாசிகளை வலியுறுத்தியுள்ளனர். ஒரு எழுத்தாளர், இறையியல் ரீதியாக மேன்மையான விசுவாச வார்த்தைகள் கூட அதிகப்படியான பிரபல்யத்தாலும் மற்றும் அதிகப்படியான பயன்பாட்டாலும் அவற்றின் தாக்கத்தை இழக்க நேரிடும் என்று உதாரணமாக வலியுறுத்தினார், சுவிசேஷத்தின் ஆழத்தையும், தேவன் நமது தேவையாய் இருக்கிறார் என்பதன் தொடர்பை இழக்கிறோம். அது நிகழும்போது, ​​விசுவாசத்தின் மொழியை “தொடக்கத்திலிருந்து”  கற்க்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார், முதன்முறையாக நற்செய்தியைக் காணும் வரை நம் அனுமானங்களை விட்டுவிடலாம்.

"புதிதாக தேவனைப் பேச" கற்றுக்கொள்வதற்கான அழைப்பு, பவுலை நினைவூட்டுகிறது, அவர் தனது வாழ்க்கையை "எல்லா மக்களுக்கும் எல்லாவற்றையும்" அர்ப்பணித்தார். . . சுவிசேஷத்திற்காக ”(1 கொரிந்தியர் 9: 22–23). இயேசு செய்ததை எவ்வாறு எடுத்துரைக்கலாம் என்பது தனக்கு நன்றாகத் தெரியும் என்று அவர் ஒருபோதும் கருதவில்லை. அதற்கு பதிலாக, அவர் தொடர்ச்சியான ஜெபத்தை நம்பியிருந்தார், மேலும் சக விசுவாசிகளும் அவருக்காக ஜெபிக்கும்படியும் - நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ள “சரியான வார்த்தைகளை” (எபேசியர் 6:19 ) கண்டுபிடிக்க உதவுமாறும் கெஞ்சினார்.

கிறிஸ்துவில் உள்ள ஒவ்வொரு விசுவாசியும் அவருடைய அன்பில் ஆழமாக வேரூன்ற ஒவ்வொரு நாளும் தாழ்மையும் ஏற்றுக்கொள்ளுதலும் தேவை என்பதட் அப்போஸ்தலர்கள் அறிந்திருந்தனர் (3: 16–17). ஒவ்வொரு நாளும் தேவனின்  அன்பில் நம் வேரூன்றுவதனால் மட்டுமே, அவருடைய கிருபையின் மீது சார்ந்திருப்பதைப் பற்றி அதிகம் அறிகிறோம், அவர் நமக்காகச் செய்ததைப் பற்றிய ஆச்சரியமான செய்திகளைப் பகிர்ந்து கொள்ள சரியான சொற்களைக் கண்டுபிடிக்கிறோம்.

கனமான ஆனால் நம்பிக்கையான

பீனட்ஸ் என்ற துண்டு நகைச்சுவை தொடரில், மிகவும் சுவாரஸ்யமான கதாபாத்திரம் லூசி ஐந்து சென்டுக்கு "மனநல உதவி" என்று விளம்பரம் செய்தார். லினஸ் அவளது அலுவலகத்திற்கு தனது வழியைக் கண்டுபிடித்தார் மற்றும் அவரது "ஆழ்ந்த மனச்சோர்வை" ஒப்புக் கொண்டார். அவரது நிலை குறித்து அவர் என்ன செய்ய முடியும் என்று அவர் அவளிடம் கேட்டபோது, ​​லூசியின் விரைவான பதில், “அந்த நிலையிலிருந்து வெளிவரும்படியாக ! தயவுசெய்து ஐந்து சென்டுகள்” என்றார்.

இத்தகைய இலகுவான பொழுதுபோக்கு அப்போதைய தருணத்திற்கு புன்னகையைத் தரும் அதே வேளையில், நிஜ வாழ்க்கையில் நம்மைப் பிடிக்கக்கூடிய சோகமும், இருளும் அவ்வளவு எளிதில் நிராகரிக்கப்படுவதில்லை. நம்பிக்கையற்ற தன்மையும் மற்றும் விரக்தியின் உணர்வுகளும்  உண்மையானவை, சில சமயங்களில் தொழில்முறை கவனம் தேவை.

உண்மையான வேதனையை நிவர்த்தி செய்ய லூசியின் ஆலோசனை உதவாது. இருப்பினும், 88-ஆம் சங்கீதத்தின் ஆசிரியர் அறிவுறுத்துதலையும் மற்றும் நம்பிக்கையூட்டும் கருத்துகளையும் வழங்குகிறார். ஒரு லாரி சுமை பிரச்சனைகள் அவரது வீட்டு வாசலுக்கு வந்துவிட்டது. எனவே, கலங்கமில்லா நேர்மையுடன், அவர் தனது இருதயத்தை தேவனிடம்  ஊற்றினார். "என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என் ஜீவன் பாதாளாத்திற்குச் சமீபமாய் வந்திருக்கிறது." (வச. 3). "என்னை பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர்" (வச. 6). "இருள் என் நெருங்கிய நண்பனாதது" (வச. 18). சங்கீதக்காரனின் வலியைக் கொண்டு நாம் கேட்கிறோம், உணர்கிறோம், அடையாளம் காணலாம். ஆனாலும், அது அல்ல. அவரது புலம்பல் நம்பிக்கையுடன் உள்ளது. “ என் இரட்சிப்பின் தேவனாகிய கர்த்தாவே, இரவும் பகலும் உம்மை நோக்கி கூப்பிடுகிறேன். என் விண்ணப்பம் உமது சமூகத்தில் வருவதாக; என் கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும். ”(வச. 1-2; வி.வி 9, 13 ஐ காண்க). கனமான விஷயங்கள் வர கூடும் ஆலோசனை மற்றும் மருத்துவ பராமரிப்பு போன்ற நடைமுறை நடவடிக்கைகள் தேவைப்படலாம். ஆனால் தேவன் மீதான நம்பிக்கையை ஒருபோதும் கைவிடாதீர்கள்.

உங்களுக்கு யாரை தெரியும்?

2019 ஆம் ஆண்டின் முற்பகுதியில், சார்லி வாண்டர்மீர் தனது எண்பத்து நான்கு வயதில் இறந்தார். பல பந்தான்டுகளாக, அவர் ஆயிரக்கணக்கான மக்களுக்கு சார்லி மாமா என்று அறியப்பட்டார், தேசிய வானொலி ஒளிபரப்பு சில்டரன்ஸ் பைபிள் ஹவர்-ன் தொகுப்பாளராக இருந்தார். சார்லி  மாமா நித்தியத்திற்கு எடுத்து கொள்ளபடுவதர்கு முந்தைய நாள் அவரது நல்ல நண்பரிடம் கூறினார் "என்ன தெரியும் என்பது அல்ல, யாரை தெரியும் என்பதே. நிச்சயமாக, நான் இயேசு கிறிஸ்துவைப் பற்றி தான் பேசுகிறேன்."

அவர் தனது வாழ்க்கையின் முடிவை எதிர்கொண்டபோதும், சார்லி மாமாவுக்கு இயேசுவைப் பற்றியும், மக்கள் அவரை இரட்சகராகப் பெற வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் பேச முடியவில்லை.

அப்போஸ்தலன் பவுல் இயேசுவை அறிவது அவருடைய மிக முக்கியமான பணியாகக் கருதினார்: “என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின்மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும், ...... அவருக்காக எல்லாவற்றையும் குப்பையுமாக எண்ணுகிறேன்”(பிலிப்பியர் 3: 8–11). இயேசுவை நாம் எப்படி அறிவோம்? "கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயால் அறிக்கையிட்டு,தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்தில் விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்" (ரோமர் 10: 9).

இயேசுவைப் பற்றிய உண்மைகளை நாம் அறிந்திருக்கலாம், தேவாலயத்தைப் பற்றிய அனைத்தையும் நாம் அறிந்திருக்கலாம், வேதத்தை பற்றி கூட நமக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் இயேசுவை இரட்சகராக அறிந்து கொள்வதற்கான ஒரே வழி, இரட்சிபு எனும் இலவச பரிசை ஏற்றுக்கொள்வதாகும். அவர்தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டியவர்.