Archives: ஏப்ரல் 2021

எளியோருக்கு உதவுதல்

அவர் பெயர் ஸ்பென்சர். ஆனால் எல்லோரும் அவரை "ஸ்பென்ஸ்" என்று அழைக்கிறார்கள். அவர் உயர்நிலைப் பள்ளியில் மாநில தடகள சாம்பியனாக இருந்தார்; பின்னர் அவர் ஒரு மதிப்புமிக்க பல்கலைக்கழகத்தில் முழு கல்வி உதவித்தொகையுடன் படித்தார். அவர் இப்போது அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றில் வசித்து வருகிறார், மேலும் ரசாயன பொறியியல் துறையில் மிகவும் மதிக்கப்படும் நபராக  இருக்கிறார். ஆனால் இன்றுவரை ஸ்பென்ஸின் மிகப்பெரிய சாதனைகளை என்றூ நீங்கள் அவரிடம் கேட்டால், அவர் மேற்கண்ட விஷயங்களில் எதையும் குறிப்பிட மாட்டார். சில மாதங்களுக்கு ஒரு முறை நாட்டின் தேவை மிகுந்த நாட்டிற்கு மேற்கொள்ளும் பயணங்கள் மூலம்  நாட்ட்டின் வறுமை நிறைந்த பகுதிகளில் தான் நிறுவுவதற்கு உதவிய பயிற்சி திட்டத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை பார்க்க உற்சாகமாக கூறுவார். அவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் அவரது வாழ்க்கை எவ்வளவு வளமானதாக இருந்தது என்பதையும் அவர் உங்களுக்குச் சொல்லுவார்.

"இவர்களில் மிக சிறியவர்கள்." இந்த சொற்றொடரை மக்கள் பல்வேறு வழிகளில் பயன்படுத்துவர், எனினும்,, உலக வழக்கத்தின்படி, நமது சேவைக்கு கைம்மாறாக  நமக்கு வழங்குவதற்கு சொற்பமாக வைத்திருப்பவர்கள் அல்லது ஒன்றும் இல்லாதவர்களை விவரிக்க இயேசு இதைப் பயன்படுத்தினார். அவர்கள் உலத்தால்  பெரும்பாலும் கவனிக்கப்படாத - முற்றிலும் மறக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள். ஆயினும்கூட, "நீங்கள் [அவர்களுக்காக] எதை செய்தாலும், எனக்கே செய்தீர்கள்" (மத்தேயு 25:40) என்று சொல்வதன் மூலம் அவர்களை இயேசு அத்தகைய சிறந்த நிலைக்கு அந்த மக்களை உயர்த்துகிறார். இந்த “சிறியவர்களுக்கு” உதவி செய்வது கிறிஸ்துவுக்கு  சேவை செய்வதற்கு சமம்: என்று கிறிஸ்து சொல்லும் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள நீங்கள் ஒரு மதிப்புமிக்க பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற வேண்டியதில்லை. இதை உண்மையில் எற்றுக்கொள்ள விருப்பமுள்ள இதயம் மட்டுமே போதும்.

நேர்த்தியற்ற திட்டங்கள்

ஒரு புதிய சமூக மையத்தின் கீழ் தளத்தில் ஒரு நூலகத்தை நான் ஆராய்ந்து கொண்டிருந்தபோது, ​​மேலிருந்து ஒரு சப்தம் திடீரென அந்த அறையை அதிரச் செய்தது. சில நிமிடங்கள் கழித்து அது மீண்டும் நடந்தது,. இறுதியில் எரிச்சலடைந்த ஒரு நூலகர், நூலகத்திற்கு நேராக மேல் பகுதியில் ஒரு பளு தூக்கும் பகுதி அமைக்கப்பட்டிருப்பதாக விளக்கினார், ஒவ்வொரு முறையும் யாரோ ஒருவர் எடையைக் கீழே வைக்கும் போதெல்லாம் சத்தம் ஏற்பட்டது. கட்டிடக் கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் இந்த அதிநவீன வசதியின் பல அம்சங்களை கவனமாக திட்டமிட்டிருந்தனர், எனினும் யாரோ ஒருவர் நூலகத்தை இந்த செயல்பாடுகள் உள்ள இடத்திலிருந்து வேறு இடதிற்கு மாற்ற மறந்துவிட்டார்.

வாழ்க்கையிலும், நமது திட்டங்கள் பெரும்பாலும் குறைபாடுள்ளதாக இருக்கிறது. முக்கியமான கருத்தாய்வுகளை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம்.  நம் திட்டங்கள் விபத்துகளும் அல்லது எதிர்பாராத  சூழ்நிலைகளிலும் எப்போதும் கைகொடுப்பதில்லை. நிதி குறைபாடுகள், நேர நெருக்கடிகள் மற்றும் சுகாதார பிரச்சினைகள் ஆகியவற்றைத் தவிர்க்க திட்டமிடுவது நமக்கு உதவுகிறது என்றாலும், மிக சிறப்பான  உத்திகள் கூட நம் வாழ்க்கையிலிருந்து எல்லா பிரச்சனைளையும் அகற்ற முடியாது. நாம் ஏதேனுக்குப் பிந்தைய உலகில் வாழ்கிறோம்.

தேவனின் உதவியுடன், எதிர்காலத்தை விவேகத்துடன் எதிர் கொள்வதற்கும் (நீதிமொழிகள் 6: 6–8) சிரமங்களை கையாள்வதற்கும் இடையே உள்ள சமநிலையையும் நாம் காணலாம். பெரும்பாலும் தேவன் நம் வாழ்க்கையில் அனுமதிக்கும் கஷ்டங்களுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. நம்மிடம் பொறுமையை வளர்க்கவோ, நம்முடைய விசுவாசம் பெருகவோ அல்லது நம்மை அவரண்டையில் நெருங்கி சேரவும் அதை அனுமதிக்கலாம்.  வேதம் நமக்கு நினைவூட்டுகிறது, “மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.” (நீதிமொழிகள் 19:21).  நம்முடைய இலக்குகளையும், எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் நாம் இயேசுவிடம் அர்ப்பணிக்கும்போது, நம்மிடத்திலும், நம் மூலமாகவும் என்ன செய்து முடிக்க விரும்புவதை அவர் நமக்குக் காண்பிப்பார்.

துதிப்பதில் மகிழ்ச்சியைக் கண்டறிதல்

பிரபல பிரிட்டன் நாட்டு எழுத்தாளர் சி.எஸ். லூயிஸ் முதன்முதலில் தனது வாழ்க்கையை இயேசுவுக்குக் கொடுத்தபோது, ​​ஆரம்பத்தில் தேவனை துதிப்பதை அவர் எதிர்த்தார். உண்மையில், அவர் அதை "ஒரு இடையூரு" என்று அழைத்தார். "தேவனே அதைக் கோரியது." தான் அவரது பிரச்சனை. ஆயினும்கூட லூயிஸ் இறுதியாக உணர்ந்தார் “அது ஆராதிக்கப்படும் செயல்முறையில் உள்ள போது தேவன் தம்முடைய பிரசன்னத்தை” தம்முடைய மக்களுக்கு அளிக்கிறார் என்று. பின்னர், "தேவனோடுள்ள பரிபூரண அன்பினால்", " ஒரு கண்ணாடி பெறும் பிரகாசத்தை விட அதிகமாய் அது பிரதிபலிக்கிறது போல" பிரிக்க முடியாத சந்தோஷத்தை அவருள் கண்டடைகிறோம்.

இந்த முடிவுக்கு ஆபகூக் தீர்கதரிசி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வந்தார். யூத மக்களை குறிவைத்த தீமைகளைப் பற்றி தேவனிடம் முறையிட்ட பின், அவரைத் துதிப்பது மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது என்பதை ஆபகூக் கண்டறிந்தார்—தேவன் என்ன செய்கிறார் என்பதில் அல்ல, ஆனால் அவர் யார் என்பதே. இவ்வாறு, ஒரு தேசிய அல்லது உலக அளவிளான நெருக்கடியில் கூட, தேவன் இப்போதும் வல்லவராய் இருக்கிறார். தீர்க்கதரிசி அறிவித்தபடியே: 

"அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்" (ஆபகூக் 3:17-18).”நான் இரட்சகராகிய தேவனிடத்தில் மகிழ்ச்சியாயிருப்பேன்” என்று கூறினார்.

சி.எஸ். லூயிஸ் உணர்ந்தபடி, "உலகம் முழுவதும் துதியின் சத்தம் ஒலிக்கிறது." அதேபோல், ஆபக்கூக்கும் தேவனை எப்போதும் துதிப்பதற்கு அர்ப்பணித்தார், “நித்திய நடைகளாயிருந்தவருள்” ​​மிகுந்த மகிழ்ச்சியைக் கண்டார் (வச. 6).

நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம்

ஜார்ஜ் வைட்ஃபீல்ட் (1714-1770) வரலாற்றில் மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள போதகர்களில் ஒருவராகவும், ஆயிரக்கணக்கானோரை இயேசுவின் விசுவாசத்தில் வழிநடத்தினவராகவும் இருந்தார். ஆனால் அவரது வாழ்க்கை சர்ச்சைக்குரியதாய் இல்லாமல் இல்லை. வெளி இடங்களில் பிரசங்கிக்கும் அவரது நடைமுறை (மிகப் பெரிய கூட்டத்திற்கு) சில சமயங்களில் அவருடைய நோக்கங்களை கேள்விக்குள்ளாக்கியவர்களாலும், அவர் ஒரு தேவாலய கட்டிடத்தின் நான்கு சுவர்களுக்குள் மட்டுமே பிரசிங்கிக்க வேண்டும் என்று நினைத்தவர்களாலும் விமர்சிக்கப்பட்டது.. வைட்ஃபீல்டின் கல்லறை வாசகங்கள் மற்றவர்களின் “கடுமையான வார்த்தைகளுக்கு” அவர் அளித்த பதிலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது: “எனது பண்பை காட்ட நீயாத்தீர்ப்பு நாள் வரை காத்திருப்பதில் நான் திருப்தி அடைகிறேன்; நான் இறந்த பிறகு, இதைத் தவிர வேறு எந்தப் கல்லறை வாசகத்தையும் நான் விரும்பவில்லை, 'ஜார்ஜ் வைட்ஃபீல்ட் இங்கே இருக்கிறார்-அவர் எப்படிப்பட்ட மனிதர் அவர், என்பதை அந்த பெரிய நாள் வெளிப்படுத்தும்.”

பழைய ஏற்பாட்டில், தாவீது மற்றவர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டபோது, ​​அவரும் தன்னை தேவனிடம் ஒப்படைத்தார். தாவீது ஒரு கிளர்ச்சியை வழிநடத்தியதாக சவுல் பொய்யாகக் குற்றம் சாட்டியபோது, ​​சவுலின் இராணுவம் நெருங்கியபோது ஒரு குகையில் மறைந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் தாவீது இருந்தபோது, ​​தாவீது “சிங்கங்களுக்கு நடுவே” இருப்பதை விவரித்தார், “அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது.” (சங்கீதம் 57: 4). ஆனால் அந்த இக்கட்டான இடத்திலும் கூட, அவர் தேவனை நோக்கிப் பார்த்து அவரிடத்தில் ஆறுதல் பெற்றார்: “உமது கிருபை வானபரியந்தமும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது” (வச.. 10). 

மற்றவர்கள் நம்மை தவறாக புரிந்து கொள்ளும்போதும் அல்லது நம்மை நிராகரிக்கும்போதும், ​​தேவனே  நம் “அடைக்கலம்” (வச.. 1). அவருடைய தவறாத மற்றும் இரக்கமுள்ள அன்பிற்காக அவர் என்றென்றும் ஸ்தோத்தரிக்கப்படுவாராக!