Archives: மார்ச் 2021

தேவனின் கதைப்புத்தகம்

அழகான நாளை அனுபவிக்க விரும்பிய நான், நடந்துவிட்டு வரலாம் என வெளியே புறப்பட்டேன் விரைவில் ஒரு புதிய அண்டை வீட்டாரை சந்தித்தேன். அவர் என்னை இடைநிறுத்தி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்: “என் பெயர் ஆதியாகமம் எனக்கு ஆறரை வயது” என்றான்.

“ஆதியாகமம் ஒரு உயரிய பெயர்! இது வேதாகமத்தில் உள்ள ஒரு புத்தகம்” என்று நான் பதிலளித்தேன்.

“வேதாகமம் என்றால் என்ன?” என்று அவன் கேட்டான்.

"அவர் எப்படி உலகத்தையும் மக்களையும் எவ்வாறு சிருஷ்டித்தார் மற்றும் அவர் நம்மை எப்படி நேசிக்கிறார் என்பவற்றைப் பற்றிய தேவனின் கதைப்புத்தகம் இது."

அவனது வினோதமான மறு மொழி என்னைப் புன்னகைக்க செய்தது: “அவர் ஏன் உலகத்தையும் மக்களையும் கார்களையும் வீடுகளையும் உருவாக்கினார்? என் படம் அவருடைய புத்தகத்தில் உள்ளதா?”

என் புதிய நண்பர் ஆதியாகமம் அல்லது நம் அனைவரின் உண்மையான நிழற்படம் வேதாகமத்தில் இல்லையென்றாலும் தேவனுடைய கதைப்புத்தகத்தில் நாம் பெரும்பங்காவோம். ஆதியாகமம் 1-ல், “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார். அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்” (வ. 27) என்பதை கண்டோம். தேவன் அவர்களுடன் தோட்டத்தில் உலாவினார், பின்னர் தாங்களே தங்கள் சொந்த தேவனாக இருக்க வேண்டும் என்ற சோதனைக்குட்படுவதை குறித்து எச்சரித்தார் (அதி. 3). அவருடைய குமாரனாகிய இயேசு, அன்புள்ளவராய், எப்படி மீண்டும் நம்முடன் உலாவ வந்தார் மற்றும் நம்முடைய பாவமன்னிப்பிற்கான மற்றும் அவருடைய படைப்பின் மீட்பிற்கான திட்டத்தை எவ்வாறு கொண்டு வந்து செயல்படுத்தினார் என்பதைப் பற்றி தேவன் பின்னர் அவருடைய புத்தகத்தில் கூறியுள்ளார்.

நாம் வேதத்தைப் பார்க்கும்போது, ​​நாம் அவரை அறிந்து கொள்ளவும், அவருடன் பேசவும், நம்முடைய கேள்விகளை அவரிடம் கேட்கவும் நம்முடைய சிருஷ்டிகர் விரும்புகிறார் என்பதை அறிகிறோம். நாம் நினைப்பதை விடவும் அவர் நம்மீது அதீத அக்கறை கொண்டுள்ளார்.

ஒவ்வொரு சுவாசமும்

டீ அண் தனது தசைகள் அனைத்தையும் பலவீனப்படுத்தி கிட்டத்தட்ட அவரைக் கொன்றுகொண்டிருந்த, ஒரு அரிய தன்னுடல் தாக்கும் நோயால் பாதிக்கப்பட்டபோது, ​​தன்னால் சுவாசிக்க முடிவதே ஒரு பரிசு என்பதை அவர் உணர்ந்தார். அவரது சிகிச்சையின் வேதனையான பகுதியானது என்னவெனில், ஒரு வாரத்திற்கும் மேலாக ஒரு கருவி ஒவ்வொரு சில விநாடிகளிலும் ஒருமுறை அவரது நுரையீரலில் காற்றை செலுத்த வேண்டியதாயிருந்தது.

டீ அண் அற்புதவிதமாக மீண்டார். வாழ்க்கையின் பிரச்சனைகளை குறித்து புலம்பிக்கொண்டிருக்க கூடாது என்று தனக்குத் தானே நினைப்பூட்டுகிறார். “நான் நன்றாக சுவாசித்து” அதை செய்யமுடிவதால் தேவனுக்கு நன்றி சொல்லுவேன்”. என்று கூறுகிறார்.

சில சமயங்களில் வாழ்க்கையின் மிகச்சிறிய காரியங்களும் மிகப் பெரிய அற்புதங்களாக இருக்கலாம் என்பதை மறந்து, நமக்குத் தேவையான அல்லது நாம் விரும்பும் காரியங்களில் கவனம் செலுத்துவது எவ்வளவு எளிதானது. எசேக்கியாவின் தரிசனத்தில்(எசேக்கியேல் 37:1-14),  தன்னால் மட்டுமே உலர்ந்த எலும்புகளுக்கும் உயிரைக் கொடுக்க முடியும் என்று தேவன் தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்தி காண்பித்தார். அவைகள்மேல் நரம்புகளும் மாம்சமும் உண்டாயிற்று மேற்புறமெங்கும் தோலினால் மூடப்பட்டது; ஆனாலும் அவைகளில் ஆவி இல்லாதிருந்தது (வ. 8) தேவன் அவைகளுக்கு ஆவியை கொடுத்தால் மட்டுமே அவைகளால் உயிர்பெற முடியும் (10).

இந்த தரிசனம் இஸ்ரேலை பேரழிவிலிருந்து மீட்டெடுக்க தேவன் அளித்த வாக்குத்தத்தை விளக்குகிறது. தேவன் எனக்கு சுவாசத்தை தரவில்லையெனில், பெரியதோ அல்லது சிறியதோ என்னிடம் உள்ள எதுவும் பயனற்றது என்பதை இது நினைவூட்டுகிறது.

இன்றைய வாழ்க்கையின்  எளிமையான ஆசீர்வாதங்களுக்காக தேவனுக்கு நன்றி சொல்வீர்களா? தினசரி போராட்டத்தின் மத்தியில், அவ்வவ்போது நின்று, ஓய்ந்து, “சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக” (சங்கீதம் 150: 6).

நம் வறுமையிலிருந்து

வாரன் பபெட், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் ஆகியோர் கொடுக்கும் வாக்குறுதியைத் தொடங்கி ஒரு சரித்திரம் படைத்தனர், அவர்களது பணத்தில் பாதியை நன்கொடையாக அளிப்பதாக உறுதியளித்தனர். 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, இது 92 பில்லியன் டாலர்களைக் கொடுப்பதாகும். இந்த உறுதி மொழியானது  உளவியலாளர் பால் பிஃப்பை கொடுக்கும் முறைகளைப் பற்றி படிக்கத் தூண்டியது. ஒரு பரிசோதனையின் மூலம், ஏழைகள் செல்வந்தர்களை விட 44 சதவிகிதம் அதிகம் கொடுக்க விரும்புவதைக் கண்டறிந்தார். தங்கள் சொந்த வறுமையை உணர்ந்தவர்கள் பெரும்பாலும் அதிக தாராள மனப்பான்மைக்கு நேராக நகர்த்தப்படுகிறார்கள்.

இயேசு இதை நன்றாக அறிந்திருந்தார். தேவாலயத்திற்கு சென்றிருந்த அவர், மக்கள் பரிசுகளை பண்டகசாலையில் போடுவதைப் பார்த்தார். பணக்காரர்கள் பணத்தைத் தூக்கி எறிந்தனர். ஆனால் ஒரு ஏழை விதவை ஏறக்குறைய ஒரு ருபாய் மதிப்புள்ள தனது கடைசி இரண்டு செப்பு நாணயங்களை வெளியே எடுத்து பண்டகசாலையில் வைத்தார். நான் இயேசு எழுந்துநின்று மகிழ்ந்து, திகைத்து நிற்பதை கற்பனையாகப் பார்க்கிறேன். உடனடியாக அவர் தம்முடைய சீஷர்களைச் கூட்டி, இந்த திகைப்பூட்டும் செயலை அவர்கள் தவறவிடாமல் பார்த்துக் கொண்டார். “அப்பொழுது அவர் தம்முடைய சீஷரை அழைத்து காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (வ. 43) என்றார். இயேசு எதைப் பற்றி பேசுகிறார் என்பதை யாரேனும் விளக்குவார்கள் என்று நம்பி சீஷர்கள் ஒருவருக்கொருவர் பார்த்து கலக்கமடைந்து போனார்கள். எனவே, அவர் அதை தெளிவுபடுத்தினார்: “அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துப் போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்” என்றார் (வ.44).

நம்மிடம் கொடுப்பதற்கு குறைவாக இருக்கலாம். ஆனால் நம்முடைய வறுமையிலிருந்து கொடுக்க இயேசு நம்மை அழைக்கிறார். இது மற்றவர்களுக்கு அற்பமானதாகத் தோன்றினாலும் நம்மிடம் இருப்பதைக் கொடுக்கிறோம். நம்முடைய நிறைவான பரிசுகளில் தேவன் மிகுந்த மகிழ்ச்சியடைகிறார்.

இந்த விஷயங்களை பயிற்சி செய்யுங்கள்

நான் என் மகனுக்கு கணக்கு வீட்டுப்பாடத்தில் உதவி செய்தபோதுதான், அதே பாடத்தில் எழும் சிக்கலான கணக்குகளை செய்வதில் அவனுக்கு ஆர்வம் குறைவாக உள்ளது என்பது வெளிப்பட்டது. “நான் அதை செய்து முடித்துவிட்டேன்”, என்று அவன் என்னிடம் வலியுறுத்திக்கொண்டே இருந்தான், அப்படி சொன்னால் நான் அவனை எல்ல வீட்டுப்பாடத்தையும் செய்யசொல்லி வற்புறுத்தமாட்டேன் என்று நம்பி அப்படி சொன்னான். நடைமுறையில் அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை நாம் கற்றுக் கொள்ளும் வரை ஒரு கருத்து ஒரு கருத்து மட்டுமே என்று நான் அவனுக்கு கனிவாக விளக்கினேன்.

பவுல் கடைப்பிடிப்பதை குறித்து பிலிப்பியில் உள்ள தனது நண்பர்களுக்கு எழுதுகிறார். “நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்” (பிலிப்பியர் 4:9). அவர் ஐந்து விஷயங்களைக் குறிப்பிடுகிறார்: ஒப்புரவாவது - அவர் எயோதியாளும், சிந்திகேயாளும் ஒப்புரவாகும்படி வலியுறுத்துகிறார் (வ. 2-3); சந்தோஷம் - அவர் தனது வாசகர்களை பக்குவப்படும்படி நினைப்பூட்டுகிறார் (வ. 4); சாந்தகுணம் - உலகத்துடனான அவர்களின் உறவில் வேலைசெய்யமாறு அவர் அவர்களை வலியுறுத்துகிறார் (வ. 5); ஜெபம் - அவர் தனிப்பட்ட முறையிலும் மற்றும் எழுத்திலும் அவர்களுக்கு முன்மாதிரியாக இருந்ததுபோல (வ. 6-7); சிந்தை - அவர் சிறையிலும் வெளிப்படுத்திகாட்டியபடி (வ. 8). ஒப்புரவாகுதல், சந்தோஷம், சாந்தகுணம், ஜெபம் மற்றும் சிந்தை - இயேசுவில் விசுவாசிகளாக வாழ அழைக்கப்பட்ட விஷயங்கள் இவை பக்குவப்பட மற்றெந்த பழக்கத்தையும் போல இந்த நற்பண்புகளும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

பவுல் ஏற்கனவே பிலிப்பியருக்கு சொன்னது போல சுவிசேஷத்தின் நற்செய்தி ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார் (2:13). நாம் நம் சொந்த வல்லமையில் ஒருபோதும் செயல்படுவதில்லை. தேவனே நமக்கு தேவையானதை போஷிக்கிறார் (4:19).