வாரன் பபெட், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் ஆகியோர் கொடுக்கும் வாக்குறுதியைத் தொடங்கி ஒரு சரித்திரம் படைத்தனர், அவர்களது பணத்தில் பாதியை நன்கொடையாக அளிப்பதாக உறுதியளித்தனர். 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, இது 92 பில்லியன் டாலர்களைக் கொடுப்பதாகும். இந்த உறுதி மொழியானது  உளவியலாளர் பால் பிஃப்பை கொடுக்கும் முறைகளைப் பற்றி படிக்கத் தூண்டியது. ஒரு பரிசோதனையின் மூலம், ஏழைகள் செல்வந்தர்களை விட 44 சதவிகிதம் அதிகம் கொடுக்க விரும்புவதைக் கண்டறிந்தார். தங்கள் சொந்த வறுமையை உணர்ந்தவர்கள் பெரும்பாலும் அதிக தாராள மனப்பான்மைக்கு நேராக நகர்த்தப்படுகிறார்கள்.

இயேசு இதை நன்றாக அறிந்திருந்தார். தேவாலயத்திற்கு சென்றிருந்த அவர், மக்கள் பரிசுகளை பண்டகசாலையில் போடுவதைப் பார்த்தார். பணக்காரர்கள் பணத்தைத் தூக்கி எறிந்தனர். ஆனால் ஒரு ஏழை விதவை ஏறக்குறைய ஒரு ருபாய் மதிப்புள்ள தனது கடைசி இரண்டு செப்பு நாணயங்களை வெளியே எடுத்து பண்டகசாலையில் வைத்தார். நான் இயேசு எழுந்துநின்று மகிழ்ந்து, திகைத்து நிற்பதை கற்பனையாகப் பார்க்கிறேன். உடனடியாக அவர் தம்முடைய சீஷர்களைச் கூட்டி, இந்த திகைப்பூட்டும் செயலை அவர்கள் தவறவிடாமல் பார்த்துக் கொண்டார். “அப்பொழுது அவர் தம்முடைய சீஷரை அழைத்து காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (வ. 43) என்றார். இயேசு எதைப் பற்றி பேசுகிறார் என்பதை யாரேனும் விளக்குவார்கள் என்று நம்பி சீஷர்கள் ஒருவருக்கொருவர் பார்த்து கலக்கமடைந்து போனார்கள். எனவே, அவர் அதை தெளிவுபடுத்தினார்: “அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துப் போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்” என்றார் (வ.44).

நம்மிடம் கொடுப்பதற்கு குறைவாக இருக்கலாம். ஆனால் நம்முடைய வறுமையிலிருந்து கொடுக்க இயேசு நம்மை அழைக்கிறார். இது மற்றவர்களுக்கு அற்பமானதாகத் தோன்றினாலும் நம்மிடம் இருப்பதைக் கொடுக்கிறோம். நம்முடைய நிறைவான பரிசுகளில் தேவன் மிகுந்த மகிழ்ச்சியடைகிறார்.