டீ அண் தனது தசைகள் அனைத்தையும் பலவீனப்படுத்தி கிட்டத்தட்ட அவரைக் கொன்றுகொண்டிருந்த, ஒரு அரிய தன்னுடல் தாக்கும் நோயால் பாதிக்கப்பட்டபோது, ​​தன்னால் சுவாசிக்க முடிவதே ஒரு பரிசு என்பதை அவர் உணர்ந்தார். அவரது சிகிச்சையின் வேதனையான பகுதியானது என்னவெனில், ஒரு வாரத்திற்கும் மேலாக ஒரு கருவி ஒவ்வொரு சில விநாடிகளிலும் ஒருமுறை அவரது நுரையீரலில் காற்றை செலுத்த வேண்டியதாயிருந்தது.

டீ அண் அற்புதவிதமாக மீண்டார். வாழ்க்கையின் பிரச்சனைகளை குறித்து புலம்பிக்கொண்டிருக்க கூடாது என்று தனக்குத் தானே நினைப்பூட்டுகிறார். “நான் நன்றாக சுவாசித்து” அதை செய்யமுடிவதால் தேவனுக்கு நன்றி சொல்லுவேன்”. என்று கூறுகிறார்.

சில சமயங்களில் வாழ்க்கையின் மிகச்சிறிய காரியங்களும் மிகப் பெரிய அற்புதங்களாக இருக்கலாம் என்பதை மறந்து, நமக்குத் தேவையான அல்லது நாம் விரும்பும் காரியங்களில் கவனம் செலுத்துவது எவ்வளவு எளிதானது. எசேக்கியாவின் தரிசனத்தில்(எசேக்கியேல் 37:1-14),  தன்னால் மட்டுமே உலர்ந்த எலும்புகளுக்கும் உயிரைக் கொடுக்க முடியும் என்று தேவன் தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்தி காண்பித்தார். அவைகள்மேல் நரம்புகளும் மாம்சமும் உண்டாயிற்று மேற்புறமெங்கும் தோலினால் மூடப்பட்டது; ஆனாலும் அவைகளில் ஆவி இல்லாதிருந்தது (வ. 8) தேவன் அவைகளுக்கு ஆவியை கொடுத்தால் மட்டுமே அவைகளால் உயிர்பெற முடியும் (10).

இந்த தரிசனம் இஸ்ரேலை பேரழிவிலிருந்து மீட்டெடுக்க தேவன் அளித்த வாக்குத்தத்தை விளக்குகிறது. தேவன் எனக்கு சுவாசத்தை தரவில்லையெனில், பெரியதோ அல்லது சிறியதோ என்னிடம் உள்ள எதுவும் பயனற்றது என்பதை இது நினைவூட்டுகிறது.

இன்றைய வாழ்க்கையின்  எளிமையான ஆசீர்வாதங்களுக்காக தேவனுக்கு நன்றி சொல்வீர்களா? தினசரி போராட்டத்தின் மத்தியில், அவ்வவ்போது நின்று, ஓய்ந்து, “சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக” (சங்கீதம் 150: 6).