Archives: பிப்ரவரி 2021

உங்கள் நற்கீர்த்தி என்ன?

உள்ளூர் உயர்நிலைப் பள்ளி விளையாட்டு நிகழ்வுகளில், டெட் அரங்கத்தில் மிக அதிகமாக பேசுபவராகவும் ஆதிக்கம் நிறைந்த நபராகவும் இருந்தார். ஒரு சீர்குலைக்க கூடிய நிலை அவருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன்பு, அவர் 6 அடி 6 அங்குலம் உயரமும் 130 கிலோவுக்கு அதிக எடையும் கொண்டவர். கூட்டத்தை தூண்டும் சேன்ட்சாட் பள்ளி நிகழ்வுகள் பழம் பெருமை வாய்ந்தவை.
ஆனால் டெட் தனது சமூகத்தில் புகழ் பெற்றது விளையாட்டில் உற்சாகம் ஊட்டுபவராக இருந்ததினால் அல்ல. ஒரு இளைஞனாக அனுபவித்த மது அடிமை தனத்தினாலும். கடவுள் மீது மற்றும் குடும்பத்தின் மீது அன்புக்காகவும், அவருடைய தாராள மனப்பான்மைக்காகவும், கருணைக்காகவும் அவர் நினைவு கூரப்படுகிறார். 7 மணி நேரம் நடைபெற்ற அடக்க ஆராதனையில், நற்செய்தி மூலம் கிறிஸ்துவின் வல்லமையாலே இருளில் இருந்து மீட்கப்பட்ட ஒரு மனிதனின் துடிப்பான கிறிஸ்துவைப் போன்ற வழிகள் பற்றி சாட்சியம் அளிக்க ஒருவருக்குப் பின் ஒருவராக முன்வந்தனர்.
எபேசியர் 5:8ல் பவுல் விசுவாசிகளுக்கு இவ்வாறு நினைவுபடுத்துகிறார், “முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாய் இருந்தீர்கள்.” ஆனால் உடனேயே குறிப்பிட்டது என்னவென்றால், "இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள். வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்து கொள்ளுங்கள்." இயேசுவை விசுவாசிக்கும் ஒவ்வொருவருக்கும் இதுவே அழைப்பு. டெட் போன்ற ஒளியின் பிள்ளைகள் இந்த உலகின் இருளில் மூழ்கி இருப்பவர்களுக்கு நிறைய வழங்க வேண்டும். “கனியற்ற அந்தகார கிரியைகள்” தவிர்க்கப்படவேண்டும். (பார்க்க வச. 3-4, 11) நம்முடைய சமூகங்களிலும் உலகெங்கிலும் உள்ளவர்களுக்கு இயேசுவால் பிரகாசிக்கப்பட்டவர்களின் அற்புதமான தனித்துவமான சாட்சி தேவை. (வசனம் 14) என்பது ஒளி இருளில் இருந்து வேறுபட்டது போல எவ்வளவு தனித்துவமானது.

நிலைத்திருங்கள்

ஹாரியட் டப்மேன் பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறந்த அமெரிக்க போராட்ட வீரர்களில் ஒருவர். குறிப்பிடத்தக்க தைரியத்தை காட்டி, அமெரிக்காவின் வடக்கில் விடுதலையான நிலப்பரப்புக்குள் கடந்து வந்து அடிமைத்தனத்தில் இருந்து தப்பித்த பின், 300க்கும் மேற்பட்ட அடிமைகளின் விடுதலைக்கு வழிநடத்தினார். தனது சொந்த சுதந்திரத்தை வெறுமனே அனுபவிப்பதில் திருப்தியாக இருந்துவிடவில்லை. நண்பர்கள் குடும்பத்தினர் மற்றும் அந்நியர்களை சுதந்திரத்திற்கு இட்டுச் செல்ல 19 முறை அடிமை மாநிலங்களுக்குள் நுழைந்தார். சிலசமயங்களில் கனடாவுக்கு நடந்து செல்லும் பாதையில் மக்களை வழிநடத்தினார்.
இத்தகைய துணிச்சலான நடவடிக்கைக்கு டப்மேனைத் தூண்டியது எது? ஆழ்ந்த விசுவாசம் உள்ள அந்த பெண்மணி ஒரு காலத்தில் இதைச் சொன்னார். நான் எப்போதும் தேவனிடம் சொல்வேன், நான் உம்மில் நிலைநிற்க போகிறேன். நீர்தான் என்னை பார்க்க வேண்டும். மக்களை அடிமைத்தனத்திலிருந்து வெளியேற்றும் போது தேவனின் வழிகாட்டுதலை அவள் சார்ந்து இருப்பது அவளுடைய வெற்றியின் ஒரு தனிச்சிறப்பாகும்.
தேவனிடம் "நிலை நிற்பது" என்றால் என்ன? ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தில் ஒரு வசனம் உண்மையில் அவருடைய கையை நாம் பற்றிக் கொள்ளும் போது நம்மை பிடிப்பவர் அவர் என்பதை காண நமக்கு உதவக்கூடும். “உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலது கையை பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்று சொல்லுகிறேன்" (41:13). ஏசாயா இப்படியாக சொன்ன ஒரு கடவுளை மேற்கோள் காட்டுகிறார்.
ஹாரியட் தேவனை இறுக்கமாக பற்றிக் கொண்டார். தேவன் அவளைப் பார்த்துக்கொண்டார். நீங்கள் என்ன சவால்களை எதிர் கொள்கிறீர்கள்? உங்கள் கையையும் உங்கள் வாழ்க்கையையும் அவர் “பிடித்துக் கொள்வதால்" கடவுளிடம் உறுதியாக இருங்கள். “பயப்படாதிருங்கள்" அவர் உங்களுக்கு உதவுவார்.

விசுவாச முதலீடுகள்

தனது பன்னிரண்டாவது கிறிஸ்மஸ் தினத்தன்று, அந்தச் சிறுவன் மரத்தினடியில் பரிசுகளை திறக்க ஆவலுடன் காத்திருந்தான். அவன் ஒரு புதிய பைக்கிற்காக எதிர்நோக்கி கொண்டிருந்தான். ஆனால், அவனது நம்பிக்கை பொய்த்துப் போனது. கடைசியாக அவன் பெற்றது ஒரு அகராதி. முதல் பக்கத்தில் எழுதியிருந்ததை அவன் படித்தான். “அம்மா மற்றும் அப்பாவிடமிருந்து சார்லஸ்க்கு, 1958. அன்புடனும் பள்ளியில் உனது சிறந்த பணிக்கான மிக அதிக நம்பிக்கையுடனும்."
அடுத்த 10 ஆண்டுகளில் இந்த சிறுவன் பள்ளியில் சிறப்பாக செயலாற்றினார். கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் விமான பயிற்சி பெற்றார். அவர் வெளிநாட்டில் பணிபுரியும் ஒரு விமானி ஆனார். தேவைப்படும் மக்களுக்கு உதவுவதற்கும், இயேசுவை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் தனது வேட்கையை நிறைவேற்றினார். இப்போது இந்தப் பரிசைப் பெற்று சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தான் நன்கு உபயோகித்திருந்த அகராதியை தனது பேரக் குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டார். இது அவரது எதிர்காலத்தில் பெற்றோரின் அன்பான முதலீட்டின் அடையாளமாக மாறியது. அவர் அதை இன்னும் பொக்கிஷமாகக் கருதுகிறார். அனால் கடவுள், வேதாகம வசனங்களை பற்றி தினம்தோறும் அவருக்கு கற்பிப்பதன் மூலம் தனது நம்பிக்கையை வளர்ப்பதில் தன் பெற்றோர் செய்த அன்றாட முதலீட்டிற்கு அவர் இன்னும் அதிகமான நன்றியுள்ளவராக இருக்கின்றார்.
உபாகமம் 11 வேதாகமத்தின் வார்த்தைகளை குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகிறது."அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அதுகுறித்து பேசுவீர்களாக" (வச. 20).
இந்தச் சிறுவனைப் பொறுத்தவரை, அவர் சிறுவனாக இருந்தபோது நடப்பட்ட நித்திய மதிப்புகள் வாழ்நாள் முழுவதும் அவரது இரட்சகருக்கான சேவையில் மலர்ந்தன. கடவுளின் செயல்பாட்டின் மூலம், ஒருவரின் ஆத்தும வளர்ச்சியில் நமது முதலீடு எவ்வளவு பலனளிக்கும் என்பதை யார் அறிவார்.

ஆசீர்வாத திற்காக காத்திருத்தல்

பாங்காக்கில் உள்ள ஒரு பிரபலமான உணவகம் 45 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சமைத்து வரும் ஒரு குழம்பில் இருந்து சூப் ஒன்றை பரிமாறுகிறது. மேலும் ஒவ்வொரு நாளும் அது மீண்டும் மீண்டும் நிரப்பப்படுகிறது. 'நிரந்தர குழம்பு' என்று அழைக்கப்படும் இந்த நடைமுறை இடைக் காலத்திற்கும் முந்தையது. சில 'எஞ்சியவை' சில நாட்களுக்குப் பிறகு நன்றாக ருசிப்பது போல நீட்டிக்கப்பட்ட சமையல் நேரம் ஒன்றிணைந்து தனித்துவமான சுவைகளை உருவாக்குகின்றது. இந்த உணவகம் தாய்லாந்தில் மிகவும் சுவையான குழம்புக்கான பல விருதுகளை வென்றுள்ளது.
நல்ல விஷயங்கள் பெரும்பாலும் நேரம் எடுக்கும், ஆனால் நம் மனித இயல்பு பொறுமையுடன் போராடுகின்றது. "எவ்வளவு காலம்?" என்ற கேள்வி முழு வேதாகமத்திலும் வருகிறது. ஒரு தெளிவான உதாரணம் ஆபகூக் தீர்க்கதரிசியிடமிருந்து, அவர் தனது புத்தகத்தை இவ்வாறு தொடங்குகிறார். "கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன் நீர் கேளாமல் இருக்கிறீரே!" (ஆப. 1:2). ஆபகூக் (பெயரின் அர்த்தம் 'மல்யுத்த வீரர்') இரக்கமற்ற பாபிலோனிய சாம்ராஜ்ஜியத்தின் படையெடுப்பு மூலம் தனது நாடு (யூதா) மீது கடவுளின் தீர்ப்பை முன்னறிவித்தார். மேலும் ஊழல் செய்தவர்கள் மற்றவர்களை சுரண்டும் போது வளர்வதற்கு கடவுள் எவ்வாறு அனுமதிக்க முடியும் என்று அவர் போராடினார். ஆனால் கடவுள் தம்முடைய நேரத்தில் நம்பிக்கையையும் மீட்டு எடுப்பதையும் வாக்களித்தார். குறித்த காலத்துக்கு தரிசனம் (கடவுளின் உதவி) இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; அது தாமதித்தாலும் அதற்கு காத்திரு. அது நிச்சயமாய் வரும். அது தாமதிப்பதில்லை" (2:3).
பாபிலோனின் சிறையிருப்பு 70 வருடம் நீடித்தது. மனித கணக்கெடுப்பின்படி அது ஒரு நீண்ட காலம், ஆனால் கடவுள் அவருடைய வார்த்தைக்கு உண்மையும் நேர்மையும் உள்ளவர்.
கடவுளின் சில மிகச்சிறப்பான ஆசீர்வாதங்கள் வருவதற்கு நீண்ட காலம் எடுக்கலாம். அது தாமதித்தாலும், அவரையே நோக்கிக் கொண்டிருக்க வேண்டும். அவர் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் சரியான ஞானத்துடனும் அக்கறையுடனும் தயார் செய்கிறார். நாம் காத்திருப்பதற்கு அவர் எப்போதும் தகுதி வாய்ந்தவர்.

செழித்தோங்க வெட்டி களைதல்

ஒரு பெரிய வண்டு ஒரு பூப்பூக்கும் புதரில் மெல்ல இறங்கியதை நான் பார்த்தபோது, அந்த புதரின் பசுமையான இலைகள் வண்ணமயமாக விரிவதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். அதன் கரு நீல மலர்கள் கண்களையும் வண்டுகளையும் ஒரே மாதிரி ஈர்த்தன. இலையுதிர் காலத்தின் கடைசி நாட்கள் என்பதால், அவை மீண்டும் பூக்குமா என்று நான் ஆச்சரியப்பட்டேன். என் மனைவியின் பெற்றோர் ஒரு பஞ்சு செடியை ஒரு சிறு துண்டாக குறைத்த போது அவர்கள் அதை அகற்ற முடிவு செய்தார்கள் என்று நான் கருதினேன். கொடூரமாக தோன்றிய, வெட்டி களைதலின் பிரகாசமான விளைவை நான் இப்பொழுது கண்டேன்.
இத்தகைய கடுமையான வெட்டுகளால் ஏற்படுகின்ற ஆச்சரியப்படத்தக்க அழகுதான் விசுவாசிகளிடையே கடவுளின் வேலையை விவரிக்க இயேசு வெட்டி களைதலின் உருவகத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாம். யோவான் 15ல் இயேசு கூறுகிறார், "நான் மெய்யான திராட்சச்செடி. என் பிதா திராட்சத் தோட்டக்காரர். என்னில் கனி கொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப் போடுகிறார். கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும் படி, அதைச் சுத்தம் பண்ணுகிறார்." (வச. 1-2).
நல்ல காலத்திலும் கெட்ட காலத்திலும் கடவுள் எப்போதும் நமது ஆவிக்குரிய புதுப்பித்தல் மற்றும் கனி கொடுத்தல் இவற்றை நோக்கியே நம்மில் செயல்படுகிறார் என்பதை இயேசுவின் வார்த்தைகள் நமக்கு நினைவூட்டுகின்றன. வெட்டி களைதலின் பருவங்களான துன்பப்படுதல் அல்லது உணர்ச்சியின் மலட்டுத்தன்மை இவற்றின் போது, நாம் எப்போதாவது மீண்டும் செழித்து வளர முடியுமோ என்று ஆச்சரியப்படுகிறோம். ஆனால் கிறிஸ்து தொடர்ந்து அவருடன் நாம் நெருக்கமாக இருக்கும்படி நம்மை ஊக்குவிக்கின்றார். "கொடியானது திராட்சைச் செடியில் நிலைத்திராவிட்டால், அது தானாய் கனி கொடுக்க மாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்" (வச. 4). நாம் தொடர்ந்து இயேசுவிடமிருந்து ஆவிக்குரிய ஊட்டத்தை பெறுகையில் இதன் விளைவாக நம் வாழ்வில் வரும் அழகும் கனி தருதலும்,தேவனின் நன்மையை இந்த உலகிற்கு காண்பிக்கும்.