தனது பன்னிரண்டாவது கிறிஸ்மஸ் தினத்தன்று, அந்தச் சிறுவன் மரத்தினடியில் பரிசுகளை திறக்க ஆவலுடன் காத்திருந்தான். அவன் ஒரு புதிய பைக்கிற்காக எதிர்நோக்கி கொண்டிருந்தான். ஆனால், அவனது நம்பிக்கை பொய்த்துப் போனது. கடைசியாக அவன் பெற்றது ஒரு அகராதி. முதல் பக்கத்தில் எழுதியிருந்ததை அவன் படித்தான். “அம்மா மற்றும் அப்பாவிடமிருந்து சார்லஸ்க்கு, 1958. பள்ளியில் உனது சிறந்த பணிக்காக  அன்பு மற்றும் அதிக நம்பிக்கையுடனும்.” 

அடுத்த 10 ஆண்டுகளில் இந்த சிறுவன் பள்ளியில் சிறப்பாக செயலாற்றினார். கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் விமான பயிற்சி பெற்றார். அவர் வெளிநாட்டில் பணிபுரியும் ஒரு விமானி ஆனார். தேவைப்படும் மக்களுக்கு உதவுவதற்கும், இயேசுவை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் தனது வேட்கையை நிறைவேற்றினார். இப்போது இந்தப் பரிசைப் பெற்று சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தான் நன்கு உபயோகித்திருந்த அகராதியை தனது பேரக் குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டார். இது அவரது எதிர்காலத்தில் பெற்றோரின் அன்பான முதலீட்டின் அடையாளமாக மாறியது. அவர் அதை இன்னும் பொக்கிஷமாகக் கருதுகிறார். அனால் தேவன் , வேதாகம வசனங்களை பற்றி தினம்தோறும் அவருக்கு கற்பிப்பதன் மூலம் தனது நம்பிக்கையை வளர்ப்பதில் தன் பெற்றோர் செய்த அன்றாட முதலீட்டிற்கு அவர் இன்னும் அதிகமான நன்றியுள்ளவராக இருக்கின்றார்.

உபாகமம் 11 வேதாகமத்தின் வார்த்தைகளை குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகிறது.”அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அதுகுறித்து பேசுவீர்களாக” (வச. 20).

 இந்தச் சிறுவனைப் பொறுத்தவரை, அவர் சிறுவனாக இருந்தபோது நடப்பட்ட நித்திய மதிப்புகள் வாழ்நாள் முழுவதும் அவரது இரட்சகருக்கான சேவையில் மலர்ந்தன. கடவுளின் செயல்பாட்டின் மூலம், ஒருவரின் ஆத்தும வளர்ச்சியில் நமது முதலீடு எவ்வளவு பலனளிக்கும் என்பதை யார் அறிவார்.