நம்பிக்கையோடு காத்திருப்பது
ஹச்சி: எ டாக்ஸ் டேல் (Hachi: A Dog's Tale) என்ற ஆங்கில திரைப்படத்தில், கல்லூரி பேராசிரியர் ஒருவர் ஹச்சி என்ற தெரு நாய்க்குட்டியுடன் நட்பு கொண்டிருந்தார். பேராசிரியர் வேலையிலிருந்து திரும்புவதற்காக ஒவ்வொரு நாளும் ரயில் நிலையத்தில் காத்திருந்து நாய் தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியது. ஒரு நாள், பேராசிரியருக்கு ஆபத்தான பக்கவாதம் ஏற்பட்டது. ஹச்சி ரயில் நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்தது. அடுத்த பத்து வருடங்களுக்கு ஒவ்வொரு நாளும் அது திரும்பத் திரும்ப வந்தது. அதனுடைய அன்பான எஜமானருக்காக காத்திருந்தது.
தன் எஜமானரின் வருகைக்காக பொறுமையாகக் காத்திருந்த சிமியோன் என்ற மனிதனின் கதையை லூக்கா சொல்கிறார் (லூக்கா 2:25). மேசியாவைக் காணும் வரை அவர் மரணத்தைக் காணமாட்டார் என்று பரிசுத்த ஆவியானவர் சிமியோனுக்கு வெளிப்படுத்தினார் (வச. 26). இதன் விளைவாக, கடவுளின் மக்களுக்கு “இரட்சிப்பை” அளிப்பவருக்காக சிமியோன் காத்திருந்தார் (வச. 30). மரியாளும் யோசேப்பும் இயேசுவோடு ஆலயத்திற்குள் நுழைந்தபோது, பரிசுத்த ஆவியானவர் சிமியோனிடம் இவர்தான் அவர் என்று கிசுகிசுத்தார்! காத்திருப்பு இறுதியாக முடிந்தது! சிமியோன் எல்லா மக்களுக்கும் நம்பிக்கை, இரட்சிப்பு மற்றும் ஆறுதலுமான கிறிஸ்துவை தன் கைகளில் வைத்திருந்தார் (வச. 28-32).
காத்திருக்கும் பருவத்தில் நாம் நம்மைக் கண்டால், ஏசாயா தீர்க்கதரிசியின் வார்த்தைகளை புதிய காதுகளால் கேட்கலாம்: “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்” (ஏசா. 40:31). இயேசுவின் வருகைக்காக நாம் காத்திருக்கும்போது, ஒவ்வொரு புதிய நாளுக்கும் நமக்குத் தேவையான நம்பிக்கையையும் பலத்தையும் அவர் அளிக்கிறார்.
மேல்நோக்கி பார்த்தல்
மாறுகண் (வெவ்வேறு அளவிலான கண்கள்) கனவா மீன் வகை சமுத்திரத்தின் அந்தி மண்டலத்தில் வாழ்கிறது. அங்கு சூரிய ஒளி ஆழமான நீர் வழியாக குறைவாக ஊடுருவுகிறது. கணவாயின் புனைப்பெயர் அதன் இருவேறுபட்ட கண்களை குறிக்கிறது. இடது கண் காலப்போக்கில் வலது கண்ணை விட கணிசமாக பெரிதாகிறது - கிட்டத்தட்ட இரு மடங்கு பெரியது. முதுகெலும்பில்லாத உயிரிகளை படிக்கும் விஞ்ஞானிகள் கணவாய் அதன் சிறிய வலது கண்ணை இருண்ட ஆழத்தை நோக்கிப் பார்க்க பயன்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர் பெரிய இடது கண் சூரிய ஒளியை நோக்கி மேல்நோக்கி பார்க்கிறது.
நாம் தற்போதைய உலகில் வாழ்வதன் அர்த்தம் என்ன என்பது பற்றியும் “நாம் கிறிஸ்துவுடனே எழுந்ததுண்டானால்” எதிர்காலத்தின் நிச்சயம் என்ன என்பதையும் பற்றிய ஒரு சித்தரிப்பாக கணவாய் இருக்கிறது (கொலோ. 3:1). பவுல் கொலோசையருக்கு எழுதிய கடிதத்தில் “மேலானவைகளையே நாடுங்கள்” என்று அவர் வலியுறுத்துகிறார். ஏனென்றால் நம் வாழ்க்கை "கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது." (வச. 2-3)
பூமியில் வசிப்பவர்கள் பரலோகத்தில் நம் வாழ்க்கையை எதிர்பார்த்து காத்திருப்பதால் நம்முடைய தற்போதைய எதார்த்தத்தில் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை குறித்து பார்க்கப் பயிற்சி அளிக்கிறோம். ஆனால் கணவாயின் இடதுகண் காலப்போக்கில் வளர்ந்து பெரியதாகவும் அதிக உணர் திறன் கொண்டதாகவும் உருவாகிறது. அதேபோல ஆவிக்குரிய உலகில் தேவன் செயல்படும் வழிகளைப் பற்றிய விழிப்புணர்வில் நாமும் வளர்கிறோம். இயேசுவில் உயிரோடு இருப்பதன் அர்த்தம் என்ன என்பதை நாம் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் நாம் “மேலே” பார்க்கும் போது நம் கண்கள் அதை மேலும் மேலும் பார்க்கத் தொடங்கும்.
ஒளியை நம்புங்கள்
மாபெரும் சூறாவளி என்று வானிலை முன்னறிவிப்பு தெரிவித்துள்ளது. வளிமண்டல அழுத்தம் குறைந்து குளிர்கால புயல் விரைவாக தீவிரமடையும்போது இப்படித்தான் நடக்கும். இரவு நேரத்தில் காற்று வீசும். தூசி நிறைந்த சூழ்நிலை விமான நிலையத்துக்கு செல்லும் நெடுஞ்சாலையில் கிட்டத்தட்ட பார்க்க இயலாததாக ஆக்கிவிட்டது. ஆனால் உங்கள் மகள் உங்கள் வீட்டிற்கு விமானத்தில் பயணித்து வரும் போது, நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்கிறீர்கள். நீங்கள் கூடுதல் உடைகள் மற்றும் தண்ணீரை எடுத்து செல்வீர்கள். (நீங்கள் நெடுஞ்சாலையில் சிக்கிக்கொண்டால்). மிக மெதுவாக வாகனம் ஓட்டு வீர்கள். நிறுத்தாமல் பிரார்த்தனையும் செய்வீர்கள் இறுதியாக, உங்கள் முகப்பு விளக்குகளை நம்புவீர்கள். சில நேரங்களில் நீங்கள் கிட்டத்தட்ட சாத்தியமற்றதை அடையமுடியும்.
அவருடைய மரணம் சம்பந்தப்பட்ட ஒரு புயலை இயேசு தன் ஞானத்தால் முன்னறிவித்தார் (1 யோவா. 12:31-33). அது தம்மை பின்பற்றுபவர்களுக்கு உண்மையுள்ளவர்கவும், சேவை செய்பவர்களாகவும் இருக்க ஊக்குவிக்கிறது. இப்பொழுது இருட்டாக போகிறது, பார்க்க கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக இருக்கிறது.. ஆகவே இயேசு அவர்களை பார்த்து "ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள்" என்று சொன்னார் (வச. 36). அவர்கள் முன்னோக்கிச் சென்று உண்மையாக இருக்க ஒரே வழி அதுதான்.
இயேசு இன்னும் சிறிது காலம் மட்டுமே அவர்களுடன் இருப்பார். ஆனால் விசுவாசிகளுக்கு தேவ ஆவியானவர் வழியை ஒளிர செய்வதற்கான நிலையான வழிகாட்டியாக இருக்கிறார். நாமும் கிட்டத்தட்ட பார்க்க சாத்தியமற்ற காலங்களை எதிர்கொள்வோம். ஆனால் ஒளியினிடத்தில் விசுவாசமாயிருப்பதின் மூலம் நாம் முன்னோக்கி செல்லலாம்.
இழந்ததை மீட்டெடுத்தல்
தொலைபேசி கடையில் இளம் போதகர் மோசமான செய்திக்காக தன்னைத்தானே திடப்படுத்திக் கொண்டார். அவரது திறன்பேசி (smartphone) எங்கள் வேதாகம வகுப்பின் போது தற்செயலாக கை தவறி கீழே விழுந்தது இழப்பு இல்லையா? உண்மையில் அது அப்படி அல்ல. கடை ஊழியர் போதகருடைய வேதாகம காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் உட்பட எல்லா தரவையும் மீட்டெடுத்தார். “நான் அழித்த ஒவ்வொரு புகைப்படத்தையும் கூட அவர் மீட்டெடுத்தார்" என்று அவர் கூறினார். "அந்தக் கடை எனது உடைந்த கைபேசியை ஒரு புதிய கைபேசியுடன் மாற்றியது.” அவர் சொன்னதுபோல "நான் இழந்த அனைத்தையும் மேலும் அதிகமானவற்றையும் மீட்டெடுத்தேன்."
கொடூரமான அமலேக்கியர்களின் தாக்குதலுக்கு பிறகு தாவீது ஒருமுறை தனது சொந்த மீட்பு பணியை வழிநடத்தினார். பெளிஸ்திய ஆட்சியாளர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட தாவீது மற்றும் அவரது ராணுவம், அவர்கள் தங்கள் நகரமான ஜிக்லாக் மீது திடீர் தாக்குதல் நடத்தி எரித்ததை கண்டுபிடித்தனர். “அதிலிருந்த ஸ்திரீகளாகிய சிறுவர்களையும் பெரியவர்களையும் சிறைப்பிடித்து... தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைபிடித்து கொண்டு போகப்பட்டார்கள்” (1 சாமு. 30: 2-3). அப்பொழுது தாவீதும் அவரோடு இருந்த ஜனங்களும் அழுவதற்கு தங்களில் பெலன் இல்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள். (வச. 4) வீரர்கள் தங்கள் தலைவர் தாவீதுடன் மிகவும் கசப்பாக இருந்தார்கள். அவர்கள் "அவரைக் கல்லெறிவது" பற்றி பேசினர் (வச. 6).
“தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்கு உள்ளே தன்னை திடப்படுத்திக் கொண்டான்” (வச. 6). கடவுள் வாக்குறுதி அளித்தபடி, தாவீது அமலேக்கியரை பின் தொடர்ந்து "அமலேக்கியர் பிடித்துக்கொண்டுபோன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான்.
அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும், பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும், ஒன்றும் குறைபடாமல், எல்லாவற்றையும் தாவீது திருப்பிகொண்டான்" (வச. 18-19). நமது நம்பிக்கையைக் கூட கொள்ளையடிக்கும் ஆவிக்குரிய தாக்குதல்களை நாம் எதிர்கொள்ளும் போது கர்த்தரில் நாம் புதிய பலத்தை காணலாம். வாழ்க்கையின் ஒவ்வொரு சவாலிலும் அவர் நம்முடன் இருப்பார்.