தொலைபேசி கடையில் இளம் போதகர் மோசமான செய்திக்காக தன்னைத்தானே திடப்படுத்திக் கொண்டார். அவரது திறன்பேசி (smartphone) எங்கள் வேதாகம வகுப்பின் போது தற்செயலாக கை தவறி கீழே விழுந்தது இழப்பு இல்லையா? உண்மையில் அது அப்படி அல்ல. கடை ஊழியர் போதகருடைய வேதாகம காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் உட்பட எல்லா தரவையும் மீட்டெடுத்தார். “நான் அழித்த ஒவ்வொரு புகைப்படத்தையும் கூட அவர் மீட்டெடுத்தார்” என்று அவர் கூறினார். “அந்தக் கடை எனது உடைந்த கைபேசியை ஒரு புதிய கைபேசியுடன் மாற்றியது.” அவர் சொன்னதுபோல “நான் இழந்த அனைத்தையும் மேலும் அதிகமானவற்றையும் மீட்டெடுத்தேன்.”

கொடூரமான அமலேக்கியர்களின் தாக்குதலுக்கு பிறகு தாவீது ஒருமுறை தனது சொந்த மீட்பு பணியை வழிநடத்தினார். பெளிஸ்திய ஆட்சியாளர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட தாவீது மற்றும் அவரது ராணுவம், அவர்கள் தங்கள் நகரமான ஜிக்லாக் மீது திடீர் தாக்குதல் நடத்தி எரித்ததை கண்டுபிடித்தனர். “அதிலிருந்த ஸ்திரீகளாகிய சிறுவர்களையும் பெரியவர்களையும் சிறைப்பிடித்து… தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைபிடித்து கொண்டு போகப்பட்டார்கள்” (1 சாமு. 30: 2-3). அப்பொழுது தாவீதும் அவரோடு இருந்த ஜனங்களும் அழுவதற்கு தங்களில் பெலன் இல்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள். (வச. 4) வீரர்கள் தங்கள் தலைவர் தாவீதுடன் மிகவும் கசப்பாக இருந்தார்கள். அவர்கள் “அவரைக் கல்லெறிவது” பற்றி பேசினர் (வச. 6).

“தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்கு உள்ளே தன்னை திடப்படுத்திக் கொண்டான்” (வச. 6). தேவன் வாக்குறுதி அளித்தபடி, தாவீது அமலேக்கியரை பின் தொடர்ந்து “அமலேக்கியர் பிடித்துக்கொண்டுபோன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான்.

அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும், பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும், ஒன்றும் குறைபடாமல், எல்லாவற்றையும் தாவீது திருப்பிகொண்டான்” (வச. 18-19). நமது நம்பிக்கையைக் கூட கொள்ளையடிக்கும் ஆவிக்குரிய தாக்குதல்களை நாம் எதிர்கொள்ளும் போது கர்த்தரில் நாம் புதிய பலத்தை காணலாம். வாழ்க்கையின் ஒவ்வொரு சவாலிலும் அவர் நம்முடன் இருப்பார்.