வேரோடு பிடுங்கு
ரெபேக்கா தனது சகோதரனின் குடும்பத்தை குறித்து மிகவும் கவலை கொண்டு இருந்தால் . கணவன் மனைவி இடையிலான பிரச்சனை முடிவடைய வேண்டும் என்று தேவனிடம் உருக்கமாய் ஜெபித்து வந்தால். ஆனால் சில நாட்களில் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள் அவரது மனைவி குழந்தைகளை வேறொரு ஊருக்கு அழைத்துச் சென்று விட்டார்கள் .
ரெபேக்கா மிகவும் அன்போடு நேசித்த அந்த குழந்தைகளை மறுபடி பார்க்க முடியவில்லை. சில வருடங்கள் பிறகு அவர்கள் கூறியது என்னவென்றால் இந்த கவலையை எனக்குள்ளாக அதிக நேரம் வைத்ததினால் எனக்குள்ள ஒரு கசப்பான வேறொன்று வளர்ந்து என்னை சுற்றி இருக்கும் நண்பர்களையும் குடும்பத்தார்களின் பாதித்தது அனைவருக்கும் பரவ ஆரம்பித்தது
இதேபோல் வேதாகமத்தில் ரூத் என்னும் புத்தகத்தில் நகோமி என்னும் பெண்ணின் இருதயமும் துக்கத்தினால் பரவக்கூடிய கசப்பாக மாறியது என்று பார்க்கிறோம். தூர தேசத்தில் தன் கணவனை இழந்து 10 வருடம் பிறகு தன் இரு மகன்களையும் இழந்தவளாக தன் இரு மருமகளாகிய ரூத் மற்றும் ஓர்பாள்ளுடன் ஆதரவற்றவளாய் கைவிடப்பட்டால் (1 :3-5). நகோமி தன் மருமகளுடன் தனது தேசத்திற்கு திரும்ப செல்லும் போது தன் தேச மக்கள் அனைவரும் மிகவும் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் அவளோ அவர்கள் அனைவரிடம் “நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல் மாராள் என்று சொல்லுங்கள்;
சர்வ வல்லவர் எனக்கு மிகுந்த கசப்பை கட்டளையிட்டார்” (20) என்று துக்கத்தோடு சொன்னாள் .
உலகத்தில் அனைவருக்கும் துக்கங்களும் ஏமாற்றங்களும் உண்டு. அது நிமித்தம் நாம் கசப்புள்ளவர்களாய் மாறும்படி தூண்டப்படுகிறோம் சில வேளைகளில் நம் இருதயம் புண்படும்படி யாரேனும் ஏதாவது பேசினால் கூட அப்படி ஆகலாம் அல்லது நம் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படாமல் போனால் அது ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நம் இருதயத்தின் கசப்பான வேர்களை பிடுங்கிப் போடும் நம் தேவனிடம் நாம் இவைகளை ஒப்புக் கொள்ளும் போது அவர் அதை ஆனந்த இருதயமுள்ள ஆவியாக மாற்றிவிடுவார்.
காணப்படாதவைகளின் தேவன்
“சில நேரங்களில் நான் யாருக்கும் காணப்படாதவனாயும், அறியப்படாதவனைப் போலவும் உணருகிறேன் .ஆனால் தேவன் என்னை உபயோகிக்க வேண்டும் என்று வாஞ்சிக்கிறேன்.
நான் சென்றிருந்த உணவகத்தில் சுத்தம் செய்து கொண்டிருந்த அண்ணனிடம் பேசின போது தான் தெரிந்தது ஆச்சரியப்படும் விதமான சாட்சி அவர்களிடம் இருந்து .அவர்கள் சொன்னது என்னவென்றால் போதை பழகத்திற்கும் விபச்சாரத்திலும் ஈடுபட்டிருந்தேன் வீடு இல்லாமல் வீதிகளில் வாழ்ந்து வந்தேன் ஆனால் இவைகளை விட்டு தேவனை பின்பற்ற வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்று அறிந்து சில வருடத்திற்கு முன்பு ஒருநாள் முழங்கால்படியிட்டு அவர் பாதத்தில் விழுந்தேன் அவரோ என்னை எல்லா கட்டுக்களிலிருந்து விடுவித்தார் .
தேவன் அவர்கள் வாழ்வில் செய்த அற்புதத்தை சாட்சியாக என்னிடம் பகிர்ந்ததினால் அவர்களுக்கு நன்றி செலுத்தினேன். அந்த சாட்சியின் மூலம் நம் தேவன் ஒருவரின் வாழ்வை எவ்வளவு தூரம் மாற்ற முடியும் என்பதையும் அது எனக்கு செய்த கிரியையினால் தேவன் அவர்களை உபயோகப்படுத்தினார் என்று அவர்களிடம் கூறினேன்.
மற்றவர்கள் தவறாக எண்ணக் கூடிய நபர்களை கொண்டும் தேவன் தம் சித்தத்தை நிறைவேற்றுகிறார் அப்போஸ்தலர்களில் அந்திரேயாவை விட அனைவருக்கும் தன் சகோதரரான பேதுருவை தான் அதிகம் தெரியும் ஆனால் யோவான் புஸ்தகத்தில் நாம் வாசிப்பது என்னவென்றால் பேதுருவை மேசியாவிடம் அழைத்து வந்தது அந்திரேயா தான் (யோவா. 1:41-42).
அந்திரேயா மூலமாகத்தான் பேதுரு இயேசுவை சந்தித்தான். யோவானுடைய சீஷனாக இருந்த அந்திரேயா இயேசுவைப் பற்றி அறிந்தவுடன் உடனடியாக அவரை விசுவாசித்து பின் தொடர்ந்து தன் சகோதரனுக்கும் அறிமுகப்படுத்தினான் அந்திரேயாவின் தாழ்மையான விசுவாசமானது உலகை உலுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது .
தேவன் உண்மையுள்ள ஊழியத்தை காணப்படுகிறார் நாம் எங்கு இருந்தாலும் யாரும் பார்க்கவில்லை என்றாலும் அவர் நம்மை உபயோகப்படுத்த முடியும் .
எக்காள சத்தம்
‘டப்ஸ் ‘என்கிற எக்காள சத்தம் ஆனது அமெரிக்க ராணுவ தளத்தில் தினமும் நாள் முடியும்போதும் இறுதிச் சடங்குகளிலும் பாடப்படும் அழைப்பானது நான் அந்த பாடல் அழைப்பின் வசனங்களை வாசிக்கும் போது ஆச்சரியப்பட்டுப் போனேன் அதில் உள்ள அநேக வரிகள் தேவன் நம் அருகே என்கிற சொற்களோடு முடிந்தது.ராணுவ வீரர்கள் இருட்டு நிறைந்த காட்டில் இருந்தாலும் அல்லது தன் நெருங்கிய நண்பரின் இழப்பை குறித்து துக்கப்படும்போதும் ‘ தேவன் நம் அருகே’ என்கிற தான இந்த வார்த்தை அவர்களுக்கு நிச்சயமாக நம்பிக்கை தரும் .
பழைய ஏற்பாட்டிலும் இஸ்ரவேல் மக்களுக்கு தேவன் தம் அருகே இருக்கிறார் என்பதை நினைவூட்டும் படி இதேபோல் எக்காலம் ஊதப்படும் தேவனுக்கும் இஸ்ரவேல் மக்களுக்கும் உள்ள உடன்படிக்கையின் ஒப்பந்தத்தின்படி பண்டிகை நாட்களில் எக்காளம் ஊதவேண்டும் எக்காலம் ஊதினால் தேவ பிரசன்னத்தை நினைவுபடுத்துவது மாத்திரமல்லாமல் தேவன் அவர்களின் எக் காலங்களையும்எதிர்பார்ப்புகளையும் கேட்க வல்லவராயிருக்கிறார் என்று கேட்பவர்களுக்கு உதவ வாஞ்சையாய் இருக்கிறார் என்பதையும் உணர்த்தும் படி இந்த ஒப்பந்தம் .
இன்றைக்கும் டேவன் நம் அருகில் இருக்கிறார் என்பதை நாம் நினைவு கூறுவோம் ஒருவேளை நம் ஜெபமும் தேவனுக்கு எக்காளம் போல் தொனி த்து அதைக் கேட்டு பதில் அளிப்பார் என்பதை குறித்து நாம் ஊக்குவிக்கப்படுவோம்( 1 பேதுரு 3:12 ) .நம் வருத்தங்களும் கஷ்டங்களும் தீரும் படி அவர் பெலப்படுத்தும் பிரசனத்தினால் நாம் வேண்டுதலுக்கு பதிலளிக்கிறார்.
அன்பின் ஆழங்கள்
சமீபத்தில் நீச்சல் கற்றுக்கொண்ட 3 வயது டில்லன் தன் தாத்தாவின் வீட்டின் பின் உள்ள ஒரு 40 அடி ஆழமுள்ள தண்ணீர் நிறைந்த குழியில் விழுந்து விட்டான். தன்னால் முயன்ற மட்டும் மேலே மிதந்து கொண்டிருந்தான். தீயணைப்பு வீரர்கள் தங்கள் சாதனங்களை எடுத்து கொண்டு விரைந்து வந்தார்கள்ஆனால் அந்த சிறுவனின் தந்தை யார் வருவது காத்திருக்காமல் அந்தக் கிணற்றில் இறங்க தொடங்கிவிட்டார்.
ஓ! பெற்றவரின் அன்பு! நம் பிள்ளைகளுக்காக நாம் போகும் ஆழங்களும் அகலங்களும் !
“நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்கு பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” என்று அப்போஸ்தலனாகிய யோவான் ஆதித் திருச்சபையின் விசுவாசிகள் கள்ள போதகங்களினால் அலைக்கழிக்கப்பட்டு தங்கள் விசுவாசத்தின் வேர்களை தேடிக்கொண்டு இருக்கும்போது உயிர் காப்பானாக இதை எழுதுகிறார். கிறிஸ்துவை விசுவாசிக்கிற அவர்கள் தேவனுடைய ‘பிள்ளைகள்’ என்று அழைக்கப்படுவதால் அவரை நம்பும் யாவருக்கும் அது ஒரு நெருக்கமான உறவை ஏற்படுத்தியது.
ஓ, தம் பிள்ளைகளுக்காக தேவன் போகும் ஆழங்களும் அகலங்களும் !
அந்த கிணற்றுக்குள் இறங்கி தன் குழந்தையை காப்பாற்றும்படி சென்ற அந்த தந்தையைப் போன்று பெற்றோராய் தம் குழந்தைகளுக்காக மாத்திரம் எடுக்கும் சில முயற்சிகள் உண்டு. அதே போன்று தான் தம்முடைய சொந்த குமாரனை அனுப்பி நம்மை அவர் இருதயதிற்கு சேர்த்து நமக்கு ஜீவனை திரும்ப கொடுக்கவும் பிதாவானவர் செய்த உச்சகட்ட செயலும் (வச 5-6)
பழுக்க வைக்கும் செயல் முறை
இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் நகரத்தில் தன்னுடைய 50 ஆண்டுகால ஊழியத்தின் ஆரம்ப காலத்தில் சார்லஸ் சிமியோன் (1759 -1836) தன் அருகில் வாழ்ந்த போதக நண்பரான ஹென்றி வென்னையும் அவருடைய மகள்களையும் சந்தித்தார். பார்த்து முடித்து செல்லும் போது அவருடைய மகள்கள் இருவரும் சிமியோனின் கடுமையான நடக்கை குறித்தும் சுய உறுதிப்பாடான குணத்தை குறித்தும் தங்கள் தந்தையிடம் குறிப்பிட்டார்கள். அதற்கு பதிலளிக்கும் படி அவருடைய மகள்களிடம் அருகில் இருந்த மரத்தில் இருந்து இன்னும் கனியாகாத பழத்தை ஒன்று பறிக்க சொன்னார். அதை ஏன் அவர் சொன்னார் என்று அவர்கள் இருவரும் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் “ இப்பொழுது இது பச்சையாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் வெயிலுக்கு பின்னரும் மறைக்க பின்னரும் அது பழமாகும். இதே போல் தான் சிமியோனும்” என்று கூறினார்.
வருட போக்கில் தேவனுடைய உருமாற்றும் கிருபையால் சிமியோன் மென்மையானார். அதற்கு ஒரு காரணம் தினமும் வேதம் வாசித்து ஜெபிப்பதற்கு அவர் அர்ப்பணித்தது. “ இதுதான் அவருக்கு இருக்கும் பெரிய கிருபைக்கும் ஆவிக்குரிய பெலத்திற்கான ரகசியம்” என்று அவருடன் சில மாதங்கள் தங்கி இருந்த நண்பர் அவரை குறித்து சாட்சி கொடுத்தார். எரேமியா தீர்க்கதரிசியை போல விசுவாசத்துடன் தேவ வார்த்தையை கைப்பற்றி வந்தார் சிமியோன். “‘ உம்முடைய வார்த்தைகள் கிடைத்த உடனே அவைகளை உட் கொண்டேன்” (எரேமியா 15:16) என்று எரேமியா கூறுகிறார். தேவனுடைய வார்த்தைகளை உட்கொள்ளுவது அவருக்கு ஆனந்தமும் அவர் இருதயத்துக்கு களிப்புமாக இருந்தது.
நாமும் கூட பச்சையாக புளிக்கும் பழமாக இருக்கலாம் ஆனால் தேவ ஆவியால் அவருடைய வார்த்தையை நாம் அதிகம் அறிந்து கொண்டு நாம் மென்மை பட தேவனை நாம் விசுவாசிக்கலாம்.