Archives: ஜனவரி 2021

ஏற்றுக்கொள்ளும் மரபு

சமூக உரிமை ஆர்வலர் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் 1968-ல் படுகொலை செய்யப்பட்ட பின்னர் சிகாகோவில் உள்ள தனது கல்லூரி ஓய்வறையின் கூரைக்கு ஏறினதை பற்றி “சுவர்களை உடைத்தல்” என்ற தன்னுடைய புத்தகத்தில், கிளென் கேஹ்ரேய்ன் எழுதுகிறார். “துப்பாக்கிச் சூட்டின் சத்தம் பெரிய கட்டிடங்களில் இருந்து முன்னும் பின்னுமாக எதிரொலித்தது, விரைவில் எனது கூரையிலிருந்து ஒரு பரந்த, இன்னும் கொடூரமான காட்சியை பார்த்தேன். . . . இரண்டு வருடங்களுக்குள் விஸ்கான்சின்-ன் சோளக்காட்டுக்குள் இருந்து சிக்காகோவின் உள் நகரத்தின் போர் மண்டலத்திற்கு நான் எப்படி வந்தேன்?”. இயேசுவின் மீதும் தனது பின்னணியிலிருந்து வேறுபட்ட மற்ற மக்களின் மீதான அன்பினால் கட்டாயப்படுத்தப்பட்ட க்ளென், சிகாகோவின் மேற்குப் பகுதியில் வசித்து, அங்கு 2011-ல் தான் இறக்கும் வரை உணவு, உடை, தங்குமிடம் மற்றும் பிற சேவைகளை மக்களுக்கு வழங்கும் ஒரு ஊழியத்தை நடத்தி வந்தார்.

தங்களைவிட வேறுபட்டவர்களைத் தழுவிக்கொள்ள வேண்டிய அவசியத்தை ஈடுசெய்த இயேசுவின் விசுவாசிகளின் முயற்சிகளை க்ளெனின் வாழ்க்கை பிரதிபலிக்கிறது. வழித்தப்பிபோன மனிதகுலத்தை மீட்கும் திட்டத்தில் யூதர்கள் மட்டுமல்லாமல் புறஜாதியினரும் சேர்த்துக்கொள்ள பட்டிருக்கிறார்கள் என்பது பவுலின் போதனையிலும் எடுத்துக்காட்டிலிருந்தும் ரோம விசுவாசிகள் கண்டார்கள் ( ரோமர் 15:8-12). மற்றவர்களை ஏற்றுக்கொள்ளும் அவருடைய எடுத்துக்காட்டை பின்பற்ற விசுவாசிகள் அழைக்கப்படுகிறார்கள் (வச 7); “ஏகசிந்தையோடும் ஒரே குரலோடும்” (வச 6) தேவனை மகிமைப்படுத்த அழைக்கப்பட்டவர்கள் மத்தியில் பாரபட்சத்திற்கும் கருத்து வேறுபாடுகளுக்கும் இடமில்லை. வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், தடைகளைத் தாண்டி சுவர்களை உடைக்கவும், அனைவரையும் அன்புடன் அரவணைக்கவும் தேவன் உங்களுக்கு உதவும்படி கேளுங்கள். ஏற்றுக்கொள்ளும் மரபை நமக்குப் பின் விட்டுச்செல்ல முயற்சிப்போம்.

ஓஸ்-ன் அவ்வளவு அற்புதமான மாந்திரிகன் அல்ல

ஒரு ஆங்கில புத்தகத்தை தழுவி எழுதப்பட்ட ஓஸ்-ன் மாந்திரிகன் என்ற  நாடகத்தில் டோரதி, சோலைக்கொள்ளை பொம்மை,  தகர மனிதன், கோழையான சிங்கமும் மேற்கின் பொல்லாத சூனியக்காரிக்கு சக்தியளித்த விளக்குமாற்றை கொண்டுவருகிறார்கள். அதற்கு பதிலாக ஓஸ்-ன் மாந்திரிகன் அவர்கள் நால்வருக்கும்  அவர்களது ஆழ் மனதின் ஆசைகளை நிறைவேற்றுவேன் என்று வாக்களித்து இருந்தான்: டோரதி மீண்டும் வீடு செல்வதற்கு ஒரு சவாரி, சோலைக்கொள்ளை பொம்மைக்கு  மூளையும், தகர மனிதனுக்கு இதயமும்,  கோழையான சிங்கத்திற்கு  தைரியமும். ஆனால் அந்த மாந்திரீகனோ அவர்களை தினமும் ஏமாற்றி அடுத்த நாள் வர கூறுவான்.

அவர்கள் அந்த மாந்திரீகனுடன் கெஞ்சிக் கொண்டிருக்கும் போது, டோரோதியின் நாய்  டோடோ அங்கிருந்த திரையை இழுத்துவிட, திரைக்கு  பின்னால் இருந்து பேசிக்கொண்டிருக்கும் மாந்திரீகன் ஒரு மாந்தரீகனே  அல்ல, நெப்ராஸ்க்கா என்ற ஊரில்  இருந்து வந்த ஒரு பயந்த அமைதியற்ற மனிதன் என்று தெரிய வருகிறது. 

இதன்  நூலாசிரியர் ல. பிராங்க் பாம்-க்கு, கடவுளை பற்றி பிரச்சினை இருந்ததால்  நம் பிரச்சனைகளை நாம் தான்  தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற செய்தியை  மக்களுக்கு தெரிவிக்க விரும்பினார்.

இதற்கு மாறாக, அப்போஸ்தலனாகிய யோவான் திரையை பின்னிழுத்து திரைக்குப் பின்னால் இருக்கும் அற்புதமானவரை வெளிப்படுத்துகிறார். வார்த்தைகள் உதவவில்லை என்றாலும் யோவான் கூறுவது தெளிவாக உள்ளது : தேவன் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார், அதை சுற்றி பளிங்குக்கொப்பான கண்ணாடிக்கடலிருக்கிறது ( வெளிப்படுத்தின விசேஷம் 4:2,6). எப்பேர்ப்பட்ட தொல்லைகள் நம்மை பூமியில் வாதித்தாலும் (அதி 2-3), தன் நகங்களை கடித்து கொண்டு முன்னும் பின்னுமாக  தேவன் நடப்பதில்லை. அவருடைய  சமாதானத்தை நாம் அனுபவிப்பதற்கு, நம்  நன்மைக்காக  அவர் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

வல்லமை

23 வாரங்களில் குறைமாதத்தில் பிறந்த குழந்தை செய்பி, 245 கிராம் எடை மட்டுமே இருந்தாள். அவள் உயிர் வாழ்வது சந்தேகம் என்று மருத்துவர்கள் அவள் பெற்றோர்களிடம் ஒரு மணி நேரம் அவகாசம் கொடுத்தனர். ஆனால் செய்பி தொடர்ந்து போராடினாள். அவள் அருகே ஒரு இளஞ்சிவப்பு நிற அட்டையில் ”சிறிய ஆனால் வல்லமையான” என்று எழுதி வைக்கப்பட்டது. ஐந்து மாதங்களுக்கு பிறகு அற்புதமாக செய்பி 2.26 கிலோ எடை கொண்ட ஆரோக்கியமான குழந்தையாக வீடு திரும்பியது மட்டுமல்லாமல் உலகிலேயே உயிர் பிழைத்த மிக சிறிய குழந்தை என்ற உலக சாதனையையும் எடுத்து சென்றாள்.

முரண்பாடுகளை வென்றவர்களின் கதைகளைக் கேட்பது வல்லமை வாய்ந்தது. வேதாகமமும் அது போன்ற ஒரு கதையை கூறுகிறது. தேவனை தூஷித்து இஸ்ரவேலை மிரட்டிய ஒரு ராட்சத போர்வீரனான கோலியத்தை எதிர்த்து சண்டையிட ஆடு மேய்க்கும் சிறுவன் தாவீது முன் வந்தான். சவுல் இராஜா "நீ இந்தப் பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம் பண்ண உன்னால் ஆகாது; நீ இளைஞன், அவனோ தன் சிறு வயதுமுதல் யுத்தவீரன் என்றான்” (1 சாமுவேல் 17:33). தாவீது போர்க்களத்தில் இறங்கியபோது, கோலியாத் “சுற்றிப்பார்த்து: தாவீதைக் கண்டு, அவன் இளைஞனும் சவுந்தரிய ரூபமான சிவந்த மேனியுள்ளவனுமாயிருந்தபடியினால், அவனை அசட்டை பண்ணினான்.” (வச 42). ஆனால் தாவீது போர்க்களத்திற்கு தனியாக செல்லவில்லை. “இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்” என்றான் (வச 45). அந்த நாள் நிறைவடைந்தபோது செத்துப்போன கோலியாத்தின் மீது வெற்றி பெற்ற தாவீது நின்றான்.

பிரச்சனை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், தேவன் நம்மோடு இருந்தால் நாம் எதற்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. அவருடைய பெலத்தினால் நாமும் வல்லமையுள்ளவர்களாக இருக்கிறோம்.

அணைத்து வழிகளுமா?

நான் வேலையிலிருந்து எனது பேத்தியின் தடகள போட்டியை பார்க்கும்படி செல்லும்போது “நெடுஞ்சாலையை எடுக்க வேண்டாம்” இன்று எனது மகளிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியை பார்க்கும் போது தான் எனக்கு தெரியவந்தது அங்கு அனைத்து வழிகளும் மூடப்பட்டிருக்கிறது என்று. நான் வேறு வழியில்லாமல் வந்த பாதை எடுத்து திரும்ப சென்றேன்.

திரும்ப வீடு செல்லும்படி நான் எடுத்த எல்லா வழிகளும் அடைக்கப்பட்டிருந்தன என்பதை கண்டறிந்தது எல்லா சாலைகளும் தேவனுடனான நித்திய உறவுக்கு வழிவகுக்கும் என்று கூறும் மக்களைப் பற்றி சிந்திக்க வைத்தது. சிலர் கருணை மற்றும் நன்னடத்தையின் பாதை நம்மை அங்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறார்கள். மற்றவர்கள் மதம் சம்மந்தப்பட்ட காரியங்களை செய்வதற்கான பாதையைத் தேர்வு செய்கிறார்கள்.

அந்த வழிகளை நம்பி செல்வது நம்மை மூடப்பட்ட சாலைகளுக்கு தான் எடுத்து செல்லும். “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று இயேசு இதை தெளிவுபடுத்துகிறார் (யோவா. 14:6). பிதாவின் வாசஸ்தலத்துக்கு உள்ளாக நாம் செல்லும்படியாக நமக்காய் அவர் மரிக்க போகிறார் என்பதை இந்த வசனத்தின் மூலமாக வெளிப்படுத்தினார்.

தேவ பிரசன்னத்திற்குள்ளாக நம்மை அழைத்து செல்லாத எந்த வழியையும் நாம் எடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக இரட்சகராகிய இயேசுவை நம்புவோம் (யோவா.3:36). அவரை நம்பி கொண்டு இருப்பவர்கள், அவர் அளித்திருக்கும் வழிகளில் ஓய்வெடுக்கலாம்.

நம் இரக்கமுள்ள தேவன்

குளிர் நிறைந்த ஒரு இரவு நாளில், ஒரு யூத குடும்ப வீட்டின் ஜன்னல் ஒன்றின் மீது கல் எறியப்பட்டது. தாவீதின் நட்சத்திரமானது அந்த ஜன்னலில் தொங்கவிடப்பட்டிருந்தது. யூதர்களின் ஒளியின் திருவிழாவாகக் கொண்டாடப்படும் ஹானுக்கா-வை முன்னிட்டு மெனோரவும் (யூத விளக்குத்தண்டு) வைக்கப்பட்டிருந்தது. சில ஆயிரம் மக்கள் வசித்து வந்த இந்த சிறிய அமெரிக்க நகரத்தில் பெரும்பாலானோர் கிறிஸ்துவை விசுவாசித்தவர்கள் - அவர்கள் அந்த வெறுப்பு நிறைந்த செயலுக்கு இறக்கத்துடன் பதிலளித்தார்கள். அவர்கள் அருகில் வாழ்ந்து வந்த யூதர்களின் வலியிலும் பயத்திலும் பங்கேற்க்கும் வண்ணமாக, மெனோராக்களின் படங்களை தங்கள் வீடுகளின் ஜன்னல்களில் ஒட்டினார்கள்.

நம் இரட்சகராகிய இயேசு நமக்காக தம்மை தாழ்த்தி நம்மோடு வாழும்படி (யோ 1:14) வந்ததால் விசுவாசிகள் ஆகிய நாமும் பெரிதான இரக்கத்தை பெற்றவர்களாய் இருக்கிறோம். நமக்காக “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும்,.. தம்மை வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்தார்” (பிலி 2:6-7). நான் அழும்போது நம்மோடு அவரும் அழுது, நம்மை காக்கும் படி நமக்காக சிலுவையில் மரித்தார்.

தேவனுடைய அக்கறைக்கு அப்பால் நமக்கு எந்த சோதனையும் நேரிடாது. நம்மீது யாராவது ‘கல்லெறிந்தால்’ அவர் நமக்கு ஆறுதலாய் இருப்பார், வாழ்க்கை நமக்கு ஏமாற்றங்களை கொண்டு வந்தால் நம்மோடு அந்த கஷ்டத்தில் நடக்கிறார் (சங் 138:6). சோதனையில் நம்மை தப்புவித்து நம் பயங்களுக்கு நம்மை தப்புவிக்கிறார். உம் இரக்கம் நிறைந்த அன்பிற்காக நன்றி, தேவனே.