கூட இருப்பது
கேளிக்கை பூங்காவில் வேலை செய்யும் ஜென், ரோஹித் கண்ணீரோடு தரையிலே சரிந்ததைக் கண்டதும், உடனே அவனுக்கு உதவி செய்ய விரைந்தாள். ரோஹித், மனஇருக்கத்தால் பாதிக்கப்ட்ட ஒரு இளைஞன். நாள் முழுதும் தான் மகிழ்ச்சியாக அனுபவிக்க எதிர்பார்த்துக் கொண்டிருந்த சவாரி செய்யும் இயந்திரம் பழுதடைந்து போனதை நினைத்து வருத்தப்பட்டு அழுதுக் கொண்டிருந்தான். உடனடியாக அவனை எழுந்து நிற்கவைக்கவோ அல்லது சமாதானப்படுத்தவோ முயற்சிப்பதற்கு பதிலாக, ஜென், தரையிலே ரோஹித்துடன் உட்கார்ந்து, அவனுடைய உணர்வுகளைப் புரிந்துக்கொண்டு அவனை அழ அனுமதித்தாள்.
ஜென்னின் இந்தச் செயல், துன்பத்தோடும் அல்லது துக்கத்தோடும் இருப்பவர்களோடு எவ்வாறு நாமும் துணை நிற்பது என்பதற்க்கு ஒரு அழகிய உதாரணமாய் இருக்கிறது. தன்னுடைய வீடு, தன் மிருகஜீவன்கள் (வருமானம்), தன் ஆரோக்கியத்தின் இழப்பு மற்றும் ஒரே நேரத்தில் ஏற்பட்ட தன் பத்து பிள்ளைகளின் இறப்பினால் முடங்கிப்போன யோபுவின் துன்பத்தைப்பற்றி வேதாகமம் கூறுகிறது. யோபின் துக்கத்தை அறிந்த அவருடைய நண்பர்கள் யோபுவுக்கு ஆறுதல் சொல்லவும் - அவரவர் ஸ்தலங்களிலிருந்து வந்தார்கள் (யோபு 2:11). யோபு துக்கத்தோடே தரையிலே உட்கார்ந்திருந்தார்.
அவருடைய நண்பர்கள் வந்தபோது, அவர்களும் யோபுடன் உட்கார்ந்து - ஏழு நாட்கள் - அவருடைய துக்கம் கொடிதாயிருந்ததினால் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தார்கள்.
பிறகு, தங்களுடைய மனிதத்தன்மையின் அடிப்படையில் யோபுவின் நண்பர்கள் அவருக்கு உணர்வற்ற ஆலோசனைகளை வழங்கினர். ஆனால் முதல் ஏழு நாட்கள், வார்த்தைகளற்ற மென்மையான பரிசாகிய அவர்களுடைய பிரசன்னத்தை மட்டும் கொடுத்தார்கள்.
மற்றவர்களுடைய துக்கத்தை நம்மால் புரிந்துக்கொள்ள முடியாமல் இருக்கலாம், ஆனால், வெறுமனே அவர்களோடு கூட இருப்பதன் மூலம் அவர்களிடத்தில் அன்பு செலுத்த இந்த புரிந்துக்கொள்ளுதல் தேவையற்றது.
ஜெபத்தோடே போராடுவது
யாரோ ஒரு புதிய ஏற்பாட்டுப் புத்தகத்தை கொடுத்தப் பிறகு டென்னிஸின் வாழ்க்கை மாற்றப்பட்டது. அதை வாசித்தல் அவரை கவர்ந்தது. அது அவருடைய நிலையான துணையாக மாறியது. ஆறு மாதங்களுக்குள், அவரது வாழ்க்கையில் இரண்டு வாழ்வை மாற்றும் நிகழ்வுகள் நிகழ்ந்தன. அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட அவர் இயேசுவின்மேல் நம்பிக்கை வைத்தார் மற்றும் கடுமையான தலைவலியினிமித்தம் அவருக்கு மூளையில் கட்டியிருப்பது கண்டறியப்பட்டது. தாங்கமுடியாத வலியின் காரணமாக அவர் படுக்கையிலேயே இருந்து வேலை செய்ய முடியாமல் கிடந்தார். தூக்கமில்லாத ஒரு இரவில் அவர் தேவனை நோக்கி கூப்பிட்டார். இறுதியாக காலை 4.30 மணிக்கு தூக்கம் வந்தது.
உடல் ரீதியான வலிகள் நம்மை தேவனிடம் கூக்குரலிடச் செய்யலாம், ஆனால் மற்ற துன்பகரமான வாழ்க்கை சூழ்நிலைகளும் அவரிடம் ஓட நம்மைத் தூண்டுகின்றன. டென்னிஸின் போராட்ட இரவுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம்பிக்கை இழந்த யாக்கோபு தேவனை எதிர்கொண்டார் (ஆதி. 32:24). யுhக்கோபுக்கு அது ஒரு தொடர்ந்து கொண்டிருக்கும் குடும்ப பிரச்சனை. தன் சகோதரன் ஏசாவுக்கு எதிராக அநீதி இழைத்தார். (ஆதி. 27) ஏசா உடனடியாக பழிவாங்கக்கூடும் என்று பயந்தார். இந்தக் கடினமான சூழ்நிலையில் தேவனுடைய உதவியை நாடின யாக்கோபு தேவனை நேருக்கு நேர் சந்தித்த (32:30) பிறகு ஒரு மாற்றப்பட்ட மனிதனாக வெளிப்பட்டார்.
டென்னிஸ{ம் அவ்வாறே செய்தார். ஜெபத்தில் தேவனோடு மன்றாடின பிறகு, படுத்த படுக்கையில் கிடந்த டென்னிஸ் எழுந்து நிற்க முடிந்தது மற்றும் மருத்துவரின் பரிசோதனையில் கட்டியின் அறிகுறிகள் காணப்படவில்லை.
தேவன் எப்போதும் நம்மை அற்புதமாக குணப்படுத்த தெரிந்தெடுப்பதில்லை என்றாலும், அவர் நம்முடைய ஜெபத்தைக் கேட்டு நம்முடைய சூழ்நிலைக்கு தக்கதாக நம்முடைய தேவைகளை சந்திப்பார் என்று நம்புகிறோம். நம்முடைய விரக்தியில் நாம் உண்மையான ஜெபங்களை ஏறெடுக்கிறோம். அதன் முடிவுகளை அவரிடம் விட்டுவிடுகிறோம்.
காலை மூடுபனி
ஒரு நாள் காலையில் என் வீட்டின் அருகிலுள்ள குளத்தைப் பார்வையிட்டேன். நான் ஒரு தலைகீழான படகிண்மேல் உட்கார்ந்து, ஒரு மென்மையான மேற்கு காற்று நீரின் மேற்பரப்பு முழுவதிலும் காணப்பட்ட மூடுபனியை துரத்துவதைப் பார்த்து யோசித்துக்கொண்டிருந்தேன். மூடுபனி வட்டமிட்டுச் சுழன்றது. சிறிய சூறாவளிகள் எழுந்து அடங்கின. அதற்குப் பின்னர் சூரிய ஓளி மேகங்களின் வழியாக சென்றதினால் மூடுபனி மறைந்தது.
இந்தக் காட்சி எனக்கு ஆறுதல் அளித்தது, ஏனென்றால் நான் சற்று முன் வாசித்த 'உன் மீறுதல்களை மேகத்தைப் போலவும், உன் பாவங்களை கார்மேகத்தைப் போலவும் அகற்றிவிட்டேன்" (ஏசா. 44:22) என்ற வசனத்துடன் இணைத்துப் பார்த்தேன். தொடர்ச்சியான பாவ எண்ணங்களிலிருந்து என்னை திசைதிருப்ப வேண்டி, நான் அந்த இடத்திற்கு சென்றேன். அந்த பாவங்களை நான் அறிக்கை செய்தாலும், நான் மீண்டும் அந்தப் பாவத்தை செய்யும்போது தேவன் என்னை மன்னிப்பாரா என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
அன்று காலையில், ஆம் என்ற பதில் எனக்குத் தெரிந்தது. இஸ்ரவேலர் விக்கிரக ஆராதனை பிரச்சனையுடன் போராடிக்கொண்டிருக்கும்போது, தேவன் தம்முடைய தீர்க்கதரிசியான ஏசாயாவின் மூலம் அவர்களுக்கு கிருபை பாராட்டினார். பொய்யான தெய்வங்களை பின்பற்றி போவதை நிறுத்தும்படி கூறினபோதும், 'நான் உன்னை உருவாக்கினேன். நீ என் தாசன்... நீ என்னால் மறக்கப்படுவதில்லை" (வச. 21) என்று சொல்லி தேவன் அவர்களை மீண்டும் தம்மிடம் அழைத்தார்.
நான் அப்படி முழுமையாக மன்னிப்பை புரிந்துக்கொள்ளவில்லை, ஆனால் தேவனின் கிருபை மட்டுமே நம் பாவத்தை முழுவதுமாக நீக்கி, அதிலிருந்து நம்மை குணமாக்கும் என்பதை புரிந்துக்கொண்டேன். அவருடைய கிருபை முடிவில்லாதது, அவரைப்போல தெய்வீகமானதும், நமக்கு தேவையான போதெல்லாம் அது கிடைக்கிறது. இதற்காக அவருக்கு நன்றியுள்ள வனாயிருக்கிறேன்.
உத்தம ஊழியக்காரன்
கி.மு. 27 ல், ரோமானிய ஆட்சியாளரான ஆக்டேவியன், தனது அதிகாரங்களை ஒப்படைக்க செனட் முன் வந்தார். அவர் ஒரு உள்நாட்டுப் போரை வென்று, உலகின் அந்த பிராந்தியத்தின் ஒரே ஆட்சியாளராகி ஒரு பேரரசரைப் போல செயல்பட்டு வந்தார். ஆயினும், அப்படிப்பட்ட அதிகாரம் சந்தேகத்துக்குரியதாக பார்க்கப்பட்டதாக அவர் அறிந்திருந்தார். அதனால், ஆக்டேவியன் தனது அதிகாரங்களை செனட்டுக்கு முன்பாக ஒப்படைத்து, நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரியாக செயல்பட சாபதமெடுத்தார். அவர்களின் பதில் ? ரோமானிய செனட், ஆட்சியாளரை ஒரு குடிமைக் கிரீடத்தால் முடிசூட்டி, ரோமானிய மக்களின் சேவைக்காரன் என்று பெயரிட்டு கௌரவித்தது. அவருக்கு அகஸ்டஸ் - “மகா பெரியவர்” – என்ற பெயரும் வழங்கப்பட்டது.
இயேசு தன்னை வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்ததைக் குறித்து பவுல் எழுதுகிறார். அகஸ்டஸ் தனது அதிகாரங்களை ஒப்படைப்பதைப் போலவே செயல்பட்டார். ஆனால் அதை தனது சொந்த லாபத்திற்காக செய்துக் கொண்டிருந்தார். இயேசு “ மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரயபரியந்தமும் கீழ்படிந்தவராகித், தம்மைத் தாமே தாழ்த்தினார். (பிலிப்பியர் 2:8). ரோமானிய சிலுவையில் மரணம் என்பது அவமானம் மற்றும் அவமானத்தின் மோசமான வடிவமாகும்.
இன்று மக்கள் “ஊழியத் தலைமையை” ஒரு நல்லொழுக்கமாகப் புகழ்வதற்கு காரணம் இயேசுவே. தாழ்மை ஒரு கிரேக்க மற்றும் ரோமானிய நல்லொழுக்கம் அல்ல. இயேசு நமக்காக சிலுவையில்
மரித்ததால், அவரே உண்மையான ஊழியக்காரன். அவரே உண்மையான இரட்சகர்.
நம்மை இரட்சிக்கும்படியாக கிறிஸ்து ஒரு அடிமையானார். உண்மையிலேயே மிகப்பெரிய பரிசாகிய, இரட்சிப்பு மற்றும் நித்திய ஜீவன், இவைகளை நாம் பெற்றுக்கொள்ளும்படியாக அவர் “தம்மைத் தாமே வெறுமையாக்கினார்”.