தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன்
எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரை தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். யோவான் 3:16

கிறிஸ்துமஸ் காலம் பரிசுகள் மற்றும் பிறருக்கு கொடுப்பதுடன் ஒத்ததாக இருக்கிறது. குழந்தைகள் கிறிஸ்துமஸ் மரத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ள அவர்களின் பரிசுகளைத் திறக்க ஆவலுடனும், உற்சாகத்துடனும் காத்திருப்பார்கள். பல தனி நபர்கள், குடும்பங்கள், நிறுவனங்கள் மற்றும் தேவாலயங்கள் இந்த சமயத்தில் தேவைப்படுபவர்களுக்கு அவர்களின் தயவை நீட்டும் நேரம். இந்த காலத்தின் பல நிகழ்வுகளின் நோக்கம், தேவைப்படுபவர்களுக்கு உணவு, உடைகள் மற்றும் பரிசுகளை விநியோகிப்பது குறித்தே இருக்கும்.

கிறிஸ்துமஸ் என்பது உண்மையிலேயே மனிதகுலம் இதுவரை பெற்ற ‘மிகப் பெரிய பரிசின்’ கொண்டாட்டமாகும். பிதாவாகிய தேவன் அவருடைய ஒரே குமாரனாகிய இயேசுவை முழு உலகின் பாவங்களை தீர்க்கும்படியாய், பாவமில்லாத ‘தேவாட்டுக்குட்டி’யாக உலகிற்கு கொடுத்தார், இயேசுவின் பிறப்பு, தேவன் கொடுத்த விலைமதிப்பற்ற பரிசு. இயேசு மூலமாக மட்டுமே, கல்வாரி சிலுவையில் அவர் நமக்காக செய்ததின் நிமித்தம், நமது பாவங்களுக்கு மன்னிப்பு கிடைத்தது. அவர் நம் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையை கொடுத்தார், நம்முடைய பலவீனங்களை அவர் குணப்படுத்தினார், அவர் மரணத்தை வென்று, நமக்கு பரலோகத்தில் நித்திய ஜீவனின் நம்பிக்கை அளித்துள்ளார்.

ஆகவே, நாம் கொடுப்பது இயேசுவிடமிருந்து பெற்றுள்ளோம் என்பதன் வெளிப்பாடாக இருக்க வேண்டும். அப்போஸ்தலன் பவுல் கொடுப்பது பற்றி கற்பிக்கும்போது, கட்டாயமல்லாமல் உற்சாகத்துடன் கொடுக்க வலியுறுத்துகிறார் (2 கொரிந்தியர் 9:7). எதுவாக இருந்தாலும் அது எந்த அறிவிப்புகளும் இல்லாமல் இரகசியமாக செய்யப்பட வேண்டும் (மத்தேயு 6:2). இயேசு மத்தேயு 2:11-ல் சொன்னார், நம்மோடு எப்போதும் ஏழைகள் இருப்பார்கள், இது ஆண்டு முழுவதும் தேவையுள்ளோருக்கு உதவுவதற்கான வாய்ப்புகளை நாம் தேட வேண்டும் என்பதற்கான நினைவூட்டலாகும், நாம் கொடுப்பதை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் மட்டும் சுருக்கிக் கொள்ள கூடாது. “ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்” (நீதிமொழிகள் 19:17). தேவன் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது. இதனால் நாம் மற்றவர்களுக்கு அவருடைய ஆசீர்வாதத்தின் வாய்காளாக இருக்க முடியும், அப்போதுதான் தேவனின் பரிசு தொடரும்.

அன்புள்ள பிதாவே, எங்கள் இரட்சகர் இயேசுவில், அனைவருக்கும் மிகப் பெரிய பரிசை வழங்கியதற்கு நன்றி; இதையொட்டி, இந்த கிறிஸ்துமஸ் காலகட்டத்தில் மட்டுமல்லாமல், எப்போதும் உங்கள் தாராள மனப்பான்மைக்கு நாங்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கட்டும். ஆமென்.

– எஸ்தர் காலின்ஸ்