நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்;கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். ஏசாயா 9: 6

முந்தைய இரவு நட்சத்திரம் மேலே தொங்கவிடப்பட்டது. வருடம்தோறும் கிறிஸ்துமஸ் காலத்தின் ஒரு பாரம்பரிய தொடக்கமாக என் அப்பா, சகோதரர் மற்றும் நான் ஒன்றாக இணைத்து ஒரு பெரிய நட்சத்திரத்தை வைப்போம். நாங்கள் காலையில் எழும்போது, என்ன வைத்துவைக்க பட்டு இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். சமையலறையிலிருந்து வரும் மாவு பிசையும் ஒலி எங்களை பெருமூச்சு விட செய்யும். அது குல்-குல் தயாரிக்கும் நாள்! நாங்கள் அம்மா அழைப்பதைக் கேட்டோம், எங்களை கட்டுபடுத்த முடியாமல் நாங்கள் சாப்பாட்டு மேஜைக்கு சென்றடைந்தோம். குல்-குல் சாப்பிட மிகவும் ருசியான ஒரு பண்டமாக இருதாலும் அதை தயார் செய்வது அவ்வளவு எளிதல்ல.

பந்தை போன்று உருண்டையான மாவு ஒரு முட்கரண்டியுடன் எங்களுக்கு முன்னால் வைக்கப்பட்டது. அந்த பயிற்சி எங்களுக்குத் தெரியும் – மாவிலிருந்து ஒரு சிறு துண்டை உடைதெடுத்து, சிறு உருண்டைகளாக உருட்டவும் பின்னர் அதை பின்புறத்தில் முட்கரண்டியை கொண்டு தட்டவும். நாங்கள் பெரிய அளவிலான மாவை பார்த்து முனகினோம். இந்த பணி எங்கள் பல மணிநேர விளையாட்டு நேரத்தை எடுத்துவிடும் என தெரியும், ஆனாலும் நாங்கள் வேலை செய்யத் தொடங்கினோம். திடீரென்று, எங்கள் காலடியில், ஒரு உரோம கூட்டாளி உள்ளே நுழைந்தாள். அது எங்கள் நண்பனான செல்ல நாய். மேசையின் கீழ் இருக்க ஒரு நல்ல நேரம் அது என்பது அவளுக்குத் தெரியும். ஏனெனில் மாவின் ஒரு துண்டு “தற்செயலாக” எங்கள் முட்கரண்டியிலிருந்து நழுவும்போது, மாவு கீழே விழுந்த தடயமே இல்லாமல் அவள் அதை விரைவாக உட்கொள்வாள், இறுதி முடிவு? வேலை வேகமாகச் நடந்தது, மாவு சிறியதாகிகொண்டிருந்தது, குல்-குல் ஒன்றின் மீது ஒன்று அடுக்கப்பட்டது, அசல் மாவின் அளவு விகிதத்தில் இல்லாவிட்டாலும். அன்று மாலை, நண்பனுக்கு வயிற்றுக்கோளாறு ஏற்பட்டது.

வயது முதிர்த்தவனாக, நான் இப்போது அதைப் பற்றி நினைக்கும் போதும், ஒன்று என் அம்மாவை ஏமாற்றுகிறோம் அல்லது ஒரு நாயிற்க்கு ஆரோக்கியமற்ற உணவு அளித்தோம் என நான் வீணான மாவில் கவனம் செலுத்த ஆசைப்பட்டேன். எனினும், அதற்குமாறாக, அந்த நினைவுகளின் மகிழ்ச்சியை நான் பிடித்துக் கொள்கிறேன். ஒரு நட்சத்திரம் எங்கள் தாழ்வாரத்தில் இருந்து தொங்கும், குல்-குல் ஒரு அடுப்பில் வறுத்தெடுக்கப்பட்டு இருக்கும், எங்கள் காலடியில் ஒரு புஷ்டியான உரோமம் உள்ள பிராணி. ஒரு சொல் இந்த நிகழ்வை விவரிக்கும் – சமாதானம். ஏசாயா தீர்க்கதரிசி வரவிருக்கும் மேசியா “சமாதான பிரபு” என்று முன்னறிவித்தார். இன்று நாம் நம்மைச் சுற்றியுள்ள கொந்தளிப்பை காணும்போது சமாதானம் மங்கலாக இருந்தாலும், இயேசுவைத் தேடும்போது இந்த கொந்தளிப்பான சூழ்நிலையின் மத்தியில், முதலில் நாம் காண்பது சமாதானம் என்பதும் உண்மை. அவர் கொடுக்கும் உண்மையான சமாதானத்தை உலகத்தால் கொடுக்கவோ, பறிக்கவோ முடியாது. இந்த காலங்களில் இச்சமாதானம் உங்கள் வீடுகளில் நிலைத்திருந்து, மற்றவர்கள் மேல் தாக்கம் ஏற்படுத்தட்டும்.

அன்புள்ள பிதாவே, இந்த கொந்தளிப்பான உலகில், நீங்கள் என் இதயத்தில் வைத்த இச்சமாதானத்தை பரப்ப எனக்கு உதவுங்கள். நான் நிரம்பி வழியும்படி என்னை நிரப்புங்கள். ஆமென்.

– பாஸ்டர் சிசில் கிளெமென்ட்ஸ்