“…அந்தபடி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியை பெறாமல், அப்பா பிதாவே என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.”.
ரோமர் 8:15

நான் வளரும்போது கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆலய ஆராதனையின் நினைவுகள் அனைத்தும் பிரகாசமாய் மின்னியதைப் பற்றியே இருந்தன. அதிகாலை 2 மணிக்கு ஆலய ஆராதனைக்காக எங்கள் அம்மா எங்களை எழுப்பியதை நான் நினைவில் கொள்கிறேன். நாங்கள் பிரகாசமான மற்றும் சிறந்த உடையணிந்து, என் அப்பா இருட்டோடே, ஏதும் இல்லா சாலை வழியாக தேவாலயத்திற்கு எங்களை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வார். அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ள தேவாலயம், முழுமையாக ஒளிரூப்பட்ட விளக்குகளோடு இருட்டில் கலங்கரை விளக்கம் போல் நிற்கும். சிறந்த உடையணிந்த மக்களால் தேவாலயம் நிரம்பி வழியும், வண்ண கலவரம் போல காட்சியளிக்கும். பட்டு மற்றும் நகைகள் நீண்ட இருக்கைகளை அலங்கரிக்கும். ஆலய ஆராதனை நடக்கும்போது நானும் என் சகோதரனும் இடைவிடாது தூங்குவோம், ஆனால் ஆலய ஆராதனை முடிவடையும் நேரத்தில் நாங்கள் எப்படியாவது முழுமையாக விழித்திருப்போம். “மெர்ரி கிறிஸ்மஸ்” என மகிழ்ச்சியான வாழ்த்துக்கள், அதைத் தொடர்ந்து நண்பர்கள், குடும்பத்தினரின் அணைப்புகள் மற்றும் முத்தங்கள் கிறிஸ்துமஸ் தின விடியலின் கிறிஸ்துமஸ் ஆராதனைக்கு பொருத்தமான முடிவாக இருந்தது. அவை அற்புதமான மற்றும் மகிழ்ச்சியான காலங்கள்.

“பல வருடங்கள் கழித்து, ஒரு பெற்றோராக நான், என் பெற்றோரின், ஒரே வருமானத்தில் கிறிஸ்துமஸின் சந்தோஷங்களை எங்களுக்கு வழங்க செய்த தியாகங்களை புரிந்து கொண்டேன். நான் வளர்ந்த அந்த காலங்களை திரும்பிப் பார்க்கும்போது நானும் குழந்தைகள் பெற்று பெற்றோர் ஆனதால், குழந்தைகளுக்கு சிறந்ததை கொடுக்க விரும்பும் உணர்வுடன் என்னால் முழுமையாக தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது. நம்மையும் நம்முடைய ஆசைகளையும் மறுக்க நாம் தயாராக இருக்கிறோம், இதனால் நாம் அனுபவிக்காத சந்தோஷங்களை அவர்கள் அனுபவிக்கக்கூடும். மத்தேயு 7:11 ல் இயேசு கூறுகிறார், “ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?

இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் நமது குடும்பத்திற்கு சிறந்த கிறிஸ்துமஸை கொடுக்க தயாராகும்போது, நம்முடைய பரலோக தகப்பனும் நம்மில் சந்தோஷப்படுகிறார் என்பதை நினைவில் கொள்வோம். அவர் நமக்கென சிறந்ததை விரும்புகிறார், ஆனால் நாம் விரும்புவதை எப்போதும் பெறாவிட்டாலும், அவர் எப்போதும் நமக்குத் தேவையானதைக் கொண்டு நம்மை நிலைநிறுத்துகிறார். அவருடைய மகன்கள் மற்றும் மகள்களாக, அவர் நமக்கு மிக சிறந்ததை விரும்புகிறார் என்பதை அறிந்து கொள்வதில் நாம் எப்போதும் நம்பிக்கை பெறுகிறோம்.

இந்த உத்தரவாதத்துடன் இந்த நம்பிக்கையின் கலங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.

அன்புள்ள பிதாவே, உங்கள் பிள்ளையாக உம்மில் என் அடையாளம் இன்னும் என்னை வியக்க வைக்கிறது. ஒவ்வொரு நாளும் என் வாழ்க்கையில் உங்கள் நன்மையைப் புரிந்துகொள்ள இந்த உண்மை எனக்கு உதவட்டும். ஆமென்.

– ஜாஸ்மின் டேவிட்