புத்தாண்டு தினத்தன்று உலகெங்கிலும் உள்ள நகரம் மற்றும் மாநகரங்களில் அதிக சக்தி வாய்ந்த பட்டாசுகள் வெடிக்கும்போது, அதனுடைய சத்தம் நோக்கத்துடன் அதிகமாக இருக்கும். உற்பத்தியாளர்கள் கூறுகையில், அவற்றின் இயல்பால் ஒளிரும் பட்டாசுகள் வளிமண்டலத்தை பிளவுபடுத்துவதாக இருக்கும். ‘ரிப்பீட்டர்ஸ்” அதாவது ஒரே சமயத்தில் மீண்டும் மீண்டும் வெடிப்பவை, குறிப்பாக தரையில் வெடிக்கப்படும்போது அதிக சத்தத்துடன் வெடிக்கும்.
தொல்லைகள் நம் இதயங்கள், மனங்கள் மற்றும் வீட்டின் மூலமாக ஏற்றம் பெறலாம். வாழ்க்கையின் பட்டாசுகள், குடும்பப் பிரச்சனைகள், உறவுப் பிரச்சனைகள், வேலை சவால்கள், நிதி நெருக்கடி, தேவாலயத்தில் பிரிவுகள் – இவைகள் நம்முடைய உணர்வு சூழலை பாதித்து ஒரு பெரிய வெடியைப் போல வெடிக்கும்.
இப்படிப்பட்ட ஒரு சலசலப்புக்கு மேலே நம்மை தூக்கி நிறுத்துபவர் யார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். கிறிஸ்துவே நம்முடைய சமாதானக் காரணர் என்று பவுல் எபேசியர் 2:14ல் எழுதுகிறார். அவருடைய பிரசன்னத்தில் நாம் உறுதியாக நிற்கும்போது, அவருடைய சமாதானம் எப்படிப்பட்ட இடையூரைக் காட்டிலும் மகா பெரியது. எந்த ஒரு கவலை, காயம் மற்றும் ஒற்றுமையின்மையின் சத்தத்தையும் அமைதிப்படுத்தும்.
இது யூதர்களுக்கும், புறஜாதிகளுக்கும் ஒரு ஆற்றல் மிக்க உறுதிமொழியாய் இருந்திருக்கும். அவர்கள் ஒருகாலத்தில் ‘இந்த உலகத்தில் நம்பிக்கையில்லாமலும், தேவனில்லாமலும் வாழ்ந்து வந்தனர்” (வச. 12). இப்போது அவர்கள் துன்புறுத்தலின் அச்சுறுத்தல்களையும், அவர்களுக்குள்ளே பிரிவினையின் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் கிறிஸ்துவினால் அவர்கள் தேவனுக்கும், அதன் விளைவால் ஒருவருக்கொருவர் அவருடைய இரத்தத்தினாலே நெருங்கி கொண்டுவரப்பட்டனர். ‘அவரே நம்முடைய சமாதானக் காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினைர்யாகிய நடுச்சுவரைத் தகர்த்தார் (வச. 14).
ஒரு புதிய ஆண்டை நாம் தொடங்கும்போது, அமைதியின்மை மற்றும் வானவெளியில் எப்போதும் உருட்டிக்கொண்டிருக்கும் பிரிவினையின் அச்சுறுத்தல்களிலிருந்து வாழ்க்கையின் இரைச்சல்மிக்க சோதனைகளிலிருந்து நாம் எப்போதும் இருக்கிற சமாதானத்திற்கு திரும்பக் கடவோம். அவர் வெள்ளப்பெருக்கை அமைதிப்படுத்தி நம்மை குணப்படுத்துகிறார்.
எந்த பட்டாசுகள் உங்கள் வாழ்க்கையின் அமைதியை சிதைக்கின்றன? நீங்கள் அவைகளை ஜெபத்தின் மூலம் தேவனுக்கு தெரியப்படுத்தும்போது நீங்கள் எப்படிப்பட்ட சமாதானத்தை உணருகிறீர்கள்?
ஆறுதலளிக்கும் தேவனே, வாழ்க்கையின் வெடிகள் என்னை அதிர்ச்சியடையச் செய்து நிலைகுலைத்துப் பொடும்போது, உமது சமாதானத்திற்கு நேராக என்னை இழுத்துக்கொள்ளும்.