ஒரு கூட்டத்திற்காக நான் ஒரு இரவு லண்டனில் இருந்தேன். மழை பெய்துக்கொண்டிருந்தது. நான் தாமதமாக போய்க்கொண்டிருந்தேன். நான் தெருக்களில் விரைந்து, ஒரு மூலையில் திருப்பி, பின்பு அசையாமல் நிறுத்தினேன். டஜன் கணக்கான தூதர்கள் ரீஜென்ட் ஸ்ட்ரீட்டுக்கு மேலே சென்றனர். அவர்களின் பிரம்மாண்டமான இரக்கைகள் போக்குவரத்து முழுவதின் மேலும் விரிக்கப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான துடிப்பு விளக்குகளால் ஆன அது நான் பார்த்த மிக அற்புதமான கிறிஸ்மஸ் காட்சி. நான் மட்டும் வசீகரப்படவில்லை நூற்றுக்கணக்கானவர்கள் வீதியில் வரிசையாக பார்த்துக்கொண்டிருந்தனர்.
கிறிஸ்மஸ் கதைக்கு பிரமிப்பு மையமானது. தேவதூதன் மரியாளுக்கு தோன்றி அவர் அற்புதமாக கருத்தரிப்பார் என்று விளக்கியப் போதும்
(லூக். 1:26-38), மேய்ப்பர்களுக்கு இயேசுவின் பிறப்பைக் குறித்து அறிவித்தப் போதும் (2:8-20) ஒவ்வொருவரும் பயம், ஆச்சரியம் மற்றும் பிரமிப்படைந்தனர். ஆந்த ரீஜென்ட் ஸ்ட்ரீட் கூட்டத்தைப் சுற்றிப் பார்க்கும்போது முதலில் தேவதூதர்களின் சந்திப்பின் ஒரு பகுதியை காண்பதாக நினைத்து ஆச்சரியப்பட்டேன்.
ஒரு கணம் கழித்து நான் வேறு ஒன்றை கவனித்தேன். சில தேவதூதர்கள் தங்கள் கைகளை உயர்த்தி அவர்களும் எதையோ பார்த்துக்கொண்டிருப்பது போல இருந்தது. இயேசு என்ற பெயரைக் கேட்டவுடனே (வச. 13-14)
தேவதூதர்களின் பாடகற் குழு வெடிப்பது போல் தூதர்களும் இயேசுவைப் பார்ப்கும்போது பிரமிப்பில் சிக்கிக்கொள்ளுகின்றனர் என்று தோன்றுகிறது.
இவர் தேவனுடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாயிருக்கிறார் (எபி. 1:3). பிரகாசமான மற்றும் ஒளிரும் ஒவ்வொரு தேவதூதரின் பார்வையிலும் இயேசுவே மையமாக இருக்கிறார் (வச. 6). தேவதூதரை மையமாகக்கொண்ட கிறிஸ்மஸ் காட்சி பரபரப்பான லண்டன் வாசிகளையே தங்களுடைய தடங்களில் நிறுத்த முடியுமானால், நாம் அவரை முகமுகமாய் பார்க்கும் தருணத்தை கற்பனை செய்து பார்க்கவும்.
கடைசியாக நீங்கள் எப்போது பிரமிப்படைந்தீர்கள்? இந்தக் கிறிஸ்மஸ் காலங்களில் நீங்கள் இயேசுவைப் பற்றிய பிரமிப்பை எவ்வாறு புதுப்பிப்பீர்கள்?
தேவனே நான் உம்மை ஆராதிக்கிறேன். உம்முடைய அற்புதமான குமாரனாகிய பரிசுக்காக உமக்கு நன்றி.