நான் முகநூலில் வாதிட்டுக்கொண்டிருந்தேன். மோசமான நடவடிக்கை. நான் ஒரு அந்நியரை ஒரு காரசாரமான தலைப்பு முக்கியமாக, பிரிவினையை உண்டாக்கும் தலைப்பு – இதைப்பற்றி பேசி திருத்த கடமைப்பட்டிருக்கிறேன் என்று நினைத்தேன். அதன் விளைவு கடுமையான வாக்குவாதம், புண்படுத்தும் உணர்வுகள் (என்னுடைய பங்கில்) மற்றும் இயேசுவுக்காக சாட்சி கொடுப்பதற்கு ஒரு தகாத தருணமாக இருந்தது. இது ‘இணையதள கோபத்தின்” வெளிப்பாடாக இருந்தது. இது வலைதளத்தில் தினமும் வீசப்படும் கடுஞ்சொற்களை குறிக்கும் பதம். ஒரு நெறிமுறை நிபுணர் விளக்கியது போல், ஆத்திரம் என்பது ‘எப்படி பொதுக் கருத்துக்கள் பேசப்படுகின்றது” என்று மக்கள் தவறாக முடிவு செய்கிறார்கள்.

பவுல் தீமோத்தேயுவுக்கு கொடுத்த ஞானமான ஆலோசனை எச்சரிக்கையாக இருந்தது. புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் சண்டையை பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு. கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைப்பண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகச் சமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனாயும் இருக்க வேண்டும் (2 தீமோ. 2:23-24).

ரோமானிய சிறையிலிருந்து தீமோத்தேயுவுக்கு எழுதப்பட்ட பவுலின் நல்ல ஆலோசனை, தேவனுடைய சத்தியத்தை கற்பிப்பதற்கு இளம் போதகரை தயார்படுத்த அனுப்பப்பட்டது. பவுலின் அறிவுரை இன்று சரியான நேரத்தில், முக்கியமாக நம்முடைய உரையாடல் விசுவாசத்திற்கு நேராக திருப்பப்படும்போது, நமக்கும் கொடுக்கப்படடுள்ளது. எதிர் பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும் … சாந்தமாய அவர்களுக்கு உபதேசிக்க வேண்டும் (வச. 25).

மற்றவர்களுடன் கனிவாக பேசுவது இந்த சவாலின் ஒரு பகுதி, ஆனால் போதகர்களுக்கு மட்டுமல்ல. தேவனை நேசித்து, அவரைப்பற்றி மற்றவர்களுக்கும் சொல்ல வாஞ்சிக்கும் எல்லோரும், அவருடைய சத்தியத்தை அன்போடு சொல்வோமாக. ஓவ்வொரு வார்த்தையிலும் பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்வார்.