வேதாகமத்தை மொழிபெயர்பவர் லில்லி . ஒரு முறை தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு தனது தேசத்திற்கு திரும்பியபோது விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி தனிமைப்படுத்தினார்கள். தனது கைபேசியில் உள்ள புதிய ஏற்பாட்டின் ஆடியோ பதிவை கண்டதால் அதையும் பறிமுதல் செய்து அடுத்த இரண்டு மணிநேரமாக கேள்விமேல் கேள்வி கேட்டு கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் அந்த ஆடியோவை சோதனை செய்யும்படியாக அதை கேட்கத் தொடங்கினார்கள், அப்பொழுது பதிவில் மத்தேயு 7:1-2 வாசிக்க கேட்டார்கள் ” நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.” இந்த வார்த்தைகளை தனது சொந்த மொழியில் கேட்டபோது அங்குள்ள அதிகாரிகளில் ஒருவருக்கு வியர்க்கத் தொடங்கியது. இறுதியில் லில்லி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அந்த அதிகாரி தன் மனதில் என்ன நினைத்தார் என்று நமக்கு தெரியாது. ஆனால் ஒன்றை நாம் அறிவோம், அவர் (தேவன்) வாயிலிருந்து புறப்படும் வசனம் அவர் விரும்பியதை நிச்சயமாக நிறைவேற்றுகிறது (ஏசா. 55:11). ஏசாயா இந்த நம்பிக்கைக்குரிய வார்த்தைகளை தேவ மக்களுக்கு அவர்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் இருக்கும்போது வாக்குத்தத்தமாக உரைத்தார். அவர்களுக்கு நம்பிக்கை தரும் படி அவர் வாயிலிருந்து புறப்படும் எந்த வார்த்தையும் முளைக்கச்செய்கிற உறைந்த மழையைப்போல் – அவர் நோக்கத்தை நிறைவேற்றுவதாக இருக்கிறது.
தேவன் மேல் உள்ள நம்பிக்கையை மேம்படுத்தும்படி இந்த வசனங்களை வாசிக்கலாம். லில்லியுடைய சூழ்நிலையைப்போல் நாமும் கடந்து செய்வோமானால், கிரியை செய்கிற தேவன் நமக்கு உண்டென்று நிச்சயித்து அவர்மேல் நம்பிக்கை வைப்போம்.
கடைசியாக தேவன் உங்கள் வாழ்வில் எப்போது கிரியை செய்தார்?தேவ அன்பை அவர் வார்த்தைகள் மூலம் எந்தெந்த விதத்தில் பெற்றிருக்கிறீர்கள்?
பரலோக பிதாவே அன்பும், நம்பிக்கையும், சமாதானமும் பெருகும்படி நீர் எனக்கு வெளிப்படுத்திய உமது வார்த்தைகளுக்காக நன்றி. உம் அன்பில் வளரும்படி எனக்கு உதவும்.