தேவன் நம்மை தாங்குகிறார்
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஃப்ரெடி ப்ளோம் என்பவர் 2018-ல் 114 வயதை எட்டி உலகத்திலேயே நீண்ட ஆயுள் பெற்றவர் என்று கருதப்பட்டார். ரைட் சகோதரர்கள் ஃபிளயர் II உருவாக்கிய வருடம் 1904-ல் பிறந்து அவர் இரண்டு உலக மகா யுத்தங்கள், நிறவெறி கலகம், பொருளாதார மந்த நிலை இவை எல்லாவற்றையும் பார்த்திருக்கிறார். அவருடைய நீண்ட வாழ் நாளுக்கு என்ன காரணம் என்று அவரிடம் கேட்டபோது அந்த கேள்வியை அவர் தட்டி கழிக்கிறார். நம்மில் அநேகர் போல அவரும் ஆரோக்கியமான உணவுகளையோ பழக்கங்களையோ கையாண்டவர் அல்ல. ஆனால் தன்னுடைய நீண்ட வாழ்விற்கு ஒரு காரணம் மட்டும் சொல்லுகிறார். அது “ஒன்றே ஒன்று தான், அது தேவன். தேவனுக்கு எல்லா வல்லமையும் உண்டு… அவர் என்னை தாங்குகிறார்” என்றார்.
எதிரிகளின் அடக்குமுறையில் தவித்துக்கொண்டிருந்த இஸ்ரவேலருக்கு தேவன் கூறியவாக்குகளை போலவே ப்ளோம்-ம் எதிரொலிக்கிறார். “நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்” (ஏசா. 41:10) என்று தேவன்வாக்களிக்கிறார். நிலைமை எவ்வளவு மோசமாக மாறினாலும், மீட்பிற்கு வழியே தெரியவில்லை என்றாலும் அவர்கள் தம்முடைய மெண்மையான பாதுகாப்பில் இருக்கிறார்கள் என்று தேவன் உறுதியளிக்கிறார். ” நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்” (ஏசா. 41:10) என்று வலியுறுத்துகிறார்
எவ்வளவு வருடங்கள்நாம் வாழ்ந்தாலும் கடினங்கள் நம் கதவைத் தட்டதான் செய்யும்: திருமணவாழ்வில் சிக்கல். பிள்ளைகள் நம்மை கவனிக்காதது. மருத்துவரிடமிருந்து திகிலூட்டும் செய்தி. நம் விசுவாசத்தின் நிம்மித்தம் துன்பப்படுவதாக கூட இருக்கலாம். எப்படி இருந்தாலும் நம்முடைய தேவன் அவர் கரத்தை நீட்டி நம்மை இறுக்கமாகபற்றிக்கொள்ளுகிறார். அவருடைய பலத்த, மென்மையான கரங்களுக்குள் சேர்த்து அணைக்கிறார்.
அந்நியரை நேசித்தல்
நான் ஒரு புதிய நாட்டிற்கு இடம்பெயர்ந்த போது என்னுடைய முதல் அனுபவம் சற்றே விரும்பத்தகாத ஒன்றாக இருந்தது. அன்று என் கணவர் பிரசங்கம் செய்யவிருந்த சிறிய ஆலயத்திலே ஒரு இடம் கண்டுபிடித்து நான் அமர்ந்தபொழுது வயதான ஒரு நபர் சற்றே முரடாக என்னை “தள்ளி உட்காரு” என்றார். அவருடைய மனைவி என்னிடம் மன்னிப்பு கேட்டு, அந்த இடம் அவர்கள் எப்போதும் உட்காரும் இடம் என்று எனக்கு விளக்கினார்கள். முந்திய காலத்தில் சபையார் தங்களுக்கு வேண்டிய இடத்தை ஆலயத்தில் வாடகைக்கு எடுத்துக்கொள்வார்கள் என்றுஅறிந்தேன். இந்த பழக்கம் ஆலயத்திற்கு வருமானம் தருவது மட்டுமல்லாமல் ஒருவர் இடத்தை இன்னொருவர் எடுத்துக்கொள்ளாமல் தவிர்த்தது. இந்த மனப்பான்மை தெளிவாக சில தசாப்தங்களுக்கு இன்னும் பரவி இருந்தது.
நான் பார்த்த இவ்வித கலாச்சார முறைகளுக்கு மாறாக, தேவன் எப்படி இஸ்ரவேலரை அந்நியர்களை வரவேற்க அறிவுறுத்தினார் என்று நான் பிறகு யோசித்தேன். தம்முடைய ஜனங்கள் செழித்து வாழ்வதற்கு வழிமுறைகளைச் கூறியபின் அந்நியரை வரவேற்க அவர்களுக்கு நினைவூட்டினார் ஏனென்றால் அவர்களும் ஒரு காலத்தில் அந்நியராக இருந்தவர்கள் தான். அவர்கள் அந்நியரை கனிவாக நடத்துவது மட்டுமன்றி அவர்களை நேசிக்கவும் கூட தேவன் கட்டளையிட்டார. தேவன் அவர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை அவளுக்கு கொடுத்தார் அவ்விடத்தில் இருந்த மற்றவர்களையும் அவர்கள் நேசிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்
நீங்கள் அந்நியரை உங்கள் மத்தியில் சந்தித்தால் , தேவனுடைய அன்பை அவர்களுடன் பகிர்ந்துக் கொள்ள தடையாய் இருக்கும் கலாச்சார பழக்கங்களை வெளிப்படுத்துமாறு அவரை கேளுங்கள்.
காணவில்லை : ஞானம்
இரண்டு வயது சிறுவன் கென்னத் காணாமல் போய்விட்டான். அனால் அவனது தாயார் அவசர உதவி எண்ணை அழைத்த மூன்று நிமிடங்களில் ஒரு அவசர உதவியாளர் அவனை இரண்டு தெருக்கள் தள்ளி இருந்த ஒரு கண்காட்சியில் கண்டுபிடித்தார்.. பின்னர் அங்கே அவனுடைய தாத்தாவோடு போகலாம் என்று அவனுடைய அம்மா கூறி இருந்தார். ஆனால் அவன் தன்னுடைய விளையாட்டு வாகனத்திலே, தானே அங்கு போய் தனக்கு பிரியமான ஒரு இராட்டினத்திற்க்கு அருகே நிறுத்தியிருந்தான். அந்த சிறுவன் வீடு வந்தவுடன் அவனுடைய அப்பா ஞானமாக அந்த சின்ன வாகனத்தின் மின்கலத்தை எடுத்து அப்புறப்படுத்தி விட்டார்.
கென்னத் புத்திசாலித்தனமாக அவன் விரும்பிய இடத்துக்குப் போயிருந்தாலும், அனால் இரண்டு வயது சிறுவர்களுக்கு இல்லாத ஒரு தன்மை : ஞானம். சில நேரங்களில் பெரியவர்களாகிய நமக்குக் கூட அது காணப்படுவதில்லை. தன் தகப்பன் தாவீதினால் ராஜாவாக நியமிக்கப்பட்ட (1 இரா. 2) சாலமோன் கூட தான் ஒரு சிறு பிள்ளை போல என்று உணர்ந்தார் . தேவன் அவருடைய கனவிலே வந்து "நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள்" (3:5) என்று கூறினார். அவர் அதற்கு "நான் போக்கு வரவு அறியாத சிறுபிள்ளையாயிருக்கிறேன். ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்" (3:7-9) என்றார். தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார் (4:29).
நமக்கு ஞானம் எங்கிருந்து கிடைக்கும்? “கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” என்றான் சாலமோன் கூறியிருக்கிறார் (நீதிமொழிகள் 9:10). ஆகவே நாமும் அவரைப் பற்றி நமக்கு கற்றுக்கொடுக்க தேவனை வேண்டிக்கொண்டு நம்முடைய ஞானத்துக்கு மேலானதை அவரிடத்தில் இருந்து பெற்றுக் கொள்வோம்.
வாழ்க்கையின் வலுசர்ப்பங்களுடன் போராடுவது
நீங்கள் வலுசர்ப்பத்துடன் சண்டை போட்டதுண்டா? இல்லை என்று சொன்னால் நூலாசிரியர் யூஜீன் பீட்டர்சன் உங்களுடன் ஒற்றுக்கொள்ள மாட்டார். அவருடைய "ஒரே திசையில் நீடிய கீழ்ப்படிதல் " என்ற புத்தகத்தில் அவர் இவ்வாறு எழுதியிருக்கிறார் "இந்த வலுசர்ப்பங்கள் நம்முடைய பயங்களே, நமக்கு வேதனை தரக்கூடியவற்றின் பயங்கரமான கட்டமைப்புக்களே. ஒரு சாதாரண மனிதனை எதிர்கொள்ளும் அசாதரணமான வலுசர்ப்பம் நிச்சயமாக அவனை மேற்கொள்ளும்". அனால் பீட்டர்சன்-ன் கருது? வாழ்க்கை இவ்விதமான வலுசர்ப்பங்களால் நிறைந்திருக்கிறது: சுகவீனம், வேலையின்மை, உடைந்த திருமணம், தூரம் போன பிள்ளை. இந்த வலுசர்ப்பங்கள் நம்மால் தனித்து சண்டை போட முடியாத அளவு பூதாகரமாக இருக்கும் வாழ்க்கையின் ஆபத்துகளும் ,பெலவீனங்களும்.
ஆனால் இந்த போர்க்களங்களில் நமக்கு ஒரு வீரர் இருக்கிறார். அவர் ஏதோ ஒரு கதை வீரன் அல்ல. கட்டுக்கதையில் வரும் வீரன் அல்ல - நம் சார்பில் சண்டையிட்டு நம்மை அழிக்க நினைத்த வலுசர்ப்பங்களை வென்ற நிகரற்ற வீரர். நம்முடைய சொந்த தோல்விகளின் வலுசர்ப்பமோ அல்லது நமது அழிவை விரும்பும் ஆவிக்குரிய எதிரியா, அவை எல்லாவற்றையும் விட நம்ம வீரர் பெரியவர், அதனால் பவுல் இயேசுவை பற்றி இவ்வாறு எழுதுகிறார் “துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்” (கொலோசெயர் 2:15). இந்த உடைந்த உலகத்தின் எதிர்ப்புகள் அவருக்கு நிகர் அல்ல!
நம்முடைய வாழ்க்கையின் வலுசர்ப்பங்கள் மிகவும் பெரியவை என்று நாம் உணரும்போது நாம் கிறிஸ்துவின் இளைப்பாற ஆரம்பிக்கலாம் . நாம் நம்பிக்கையுடன் “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்”(1 கொரி. 15:57) என்று கூறலாம்.