அவர்களின் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் தேவன் அவர்களை என்ன செய்ய அழைகிக்கிறார் என்ற கேள்வியோடு ஜெபித்த பிறகு, மார்க்கும் நீனாவும் அவர்கள் நகர்ப்புற மையத்திற்கு செல்வது தான் சரி என்று தீர்மானித்தனர். அவர்கள் ஒரு காலியான வீட்டை வாங்கினர். வீடு புதுப்பித்தல் மும்முரமாக நடந்து கொண்டிருந்த வேளையிலே புயல் வந்தது. மார்க் எனக்கு இவ்வாறு ஒரு உரை செய்தியில் எழுதினார்: “ எங்கள் நகரம் வழியாக பாய்ந்த புயல், எங்களுடைய புதுப்பித்தல் வேலையை தகர்த்தெரிந்தது. வெறும் குச்சிகளும் மற்றும் செங்கற்களும் தான் நிற்கின்றன. தேவன் ஏதோவொன்றைக் திட்டம் கொண்டிருக்கிறார்போலும்”
கட்டுப்படுத்த முடியாத புயல்கள் நம்மை வியப்புக்குள்ளாக்கும், வாழ்க்கையில் குழப்பத்தை உருவாக்கும். துரதிர்ஷ்டத்தின் மத்தியில் நாம் தேவனை நோக்கிக்கொண்டிருப்பது தான் பிழைக்க ஒரே வழி.
யோபின் வாழ்க்கையில் வானிலையால் ஏற்பட்ட பேரழிவு, சொத்து இழப்பு மற்றும் பிள்ளைகளின் இறப்பு
(யோபு 1:19) அவருடைய வாழ்வில் அவர் சந்தித்த அதிர்ச்சியாகும். அதற்கு முன் மூன்று தூதர்கள் துற்செய்திகளைக் கொண்டு வந்தார்கள் (வச. 13-17).
எந்த ஒரு நாளிலும், விருந்தில் இருந்து வருத்தத்திற்கு, கொண்டாட்டத்திலிருந்து மரணத்திற்கு ஊடே நாம் செல்ல கூடும். நம் வாழ்க்கையை துரிதமாகவே – நிதி, உறவு, உடல், உணர்ச்சி, ஆன்மீகம் ரீதியில் – வெறும் “குச்சிகள் மற்றும் செங்கற்கள் ஆகலாம். ஆனால் கடவுள் எந்த புயலையும் விட வலிமையானவர். வாழ்க்கையின் சோதனைகளில் இருந்து தப்பிக்க நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும், யோபைபோல “கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்” என்று சொல்லக்கூடிய விசுவாச பக்குவம் வேண்டும்.” (வச. 21).
உன் பார்வையிலிருந்து தேவன் அகன்றபோது நீங்கள் எப்படி மீண்டும் அவரை பார்க்க முடிந்தது? வாழ்க்கையின் புயல்களை சந்திக்க யோபினிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
பிதாவே, வாழ்க்கையின் சிரமங்களுக்கு மத்தியில் நான் உம்மை நோக்காத நேரங்களுக்காக என்னை மன்னியும். புதிய கண்களால் உம்மை நோக்க உதவும்.