Archives: செப்டம்பர் 2020

பகுத்தறிவற்ற பயங்கள்

மூன்று மாத காலத்தில் என் பெற்றோர்கள் இறந்த பிறகு, அவர்கள் என்னை மறந்து விடுவார்கள் என்ற உணர்வு எனக்குள் இருந்தது. நிச்சயமாக அவர்கள் இந்த பூமியில் இல்லை என்பது எனக்கு நிச்சயமற்ற உணர்வைத் தந்தது. இளமையான, திருமணமாகாத வயதுவந்த நான் அவர்களில்லாமல் எப்படி வாழ்வது என்று யோசித்தேன். உண்மையில் நான் ஒருவனாய் தனியாக உணர்ந்த போது தேவனைத் தேடினேன்.

ஒரு காலை வேளையில் நான் என்னுடைய பகுத்தறிவற்ற பயத்தை குறித்து தேவனிடம் (அதை அவர் அறிந்திருந்த போதும்) கூறினேன். அன்றைய தினத்தின் தியானத்திற்கு கொடுக்கப்பட்ட வேதபகுதி ஏசாயா 49. “ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல் தன் பாலகனை மறப்பாளோ ?. அவள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை. (வச. 15). ஏசாயா மூலமாக தேவன் தம்முடைய ஜனங்களை மறந்துவிடவில்லை என்றும் தன்னுடைய குமாரன் இயேசுவை அனுப்பி அவர்களை தம்மிடத்தில் மீட்டுக்கொள்வார் என்று உறுதியளித்தார். அந்த வார்த்தைகள் என்னுடைய இருதயத்திலும் கிரியை செய்தது. ஒரு தாயோ அல்லது தகப்பனோ தன்னுடைய பிள்ளையை மறப்பது என்பது அரிதானதாயிருந்தாலும் அது நடக்கக்கூடியதே. ஆனால் தேவன்?. மறப்பதே இல்லை. “என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்” என்கிறார்.

தேவன் பதிலளித்திருந்தால் எனக்கு இன்னும் பயத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அவர் என்னை நினைத்து எனக்கு அளித்த சமாதானமே எனக்கு தேவைப்பட்டது. பெற்றோர்களைப் பார்க்கிலும் தேவன் மிக அருகில் இருக்கிறார் என்றும், நம்முடைய பகுத்தறிவற்ற பயத்தில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் நமக்கு உதவி செய்ய அறிந்திருக்கிறார் என்பது என் கண்டுபிடிப்பின் தொடக்கமாகும்.

மெல்ல பேசும் கலைக்காட்சி கூடம்

லண்டனில் உள்ள தூய பவுல் தேவாலயத்தின் உயர்ந்த கோபுரத்தில், பார்வையாளர்கள் 259 படிகள் ஏறி மெல்லப் பேசும் கலைக்காட்சி கூடத்தை பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து நீங்கள் மெல்லப்பேசும்போது அங்கிருக்கும் வட்ட நடைபாதையில் இருப்பவர்கள் மட்டுமல்ல நூறு அடி தூரத்தில் இருக்கும் மகத்தான படுகுழியிலிருப்பவர்களும் கேட்கலாம்,  இந்த ஒழுங்கின்மைக்கு காரணம் கோள வடிவமுள்ள கோபுரம் மற்றும் குறைந்த தீவிரத்தன்மைக் கொண்ட ஒலி அலைகளின் விளைவே என்று பொறியாளர்கள் விளக்குகின்றனர்.

நம்முடைய வேதனையான மெல்லியப்பேச்சுகளை தேவன் கேட்கிறார் என்று எவ்வளவாய் நம்புகிறோம்! தேவன் நம்முடைய கண்ணீரையும், ஜெபத்தையும், மெல்லியப்பேச்சுகளை  கிசுகிசுப்புகளையும் கேட்கிறார் என்ற சாட்சிகள் சங்கீதங்களில் நிறைந்திருக்கிறது. எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன். என் தேவனை நோக்கி அபயமிட்டேன். (சங். 18:6) என்று தாவீது எழுதுகிறார். தாவீதும் மற்ற சங்கீதக்காரர்களும் தொடர்ந்து “என் ஜெபத்தை (4:1), என் சத்தத்தை (5:3), என் பெருமூச்சைக் (102:20) கேளும் என்று கெஞ்சுகின்றனர். சில நேரங்களில் “என்னைக் கேட்டருளும்” (77:1), என்று இருதயத்தில் தியானத்தோடும் ஆவியில் ஆராய்ச்சியோடும் வெளிப்படுகிறது (77:6).

இந்த வேண்டுதல்களுக்கெல்லாம் பதில், சங்கீதக்காரர்கள் - தாவீதைப்போல சங்கீதம்18:6 – தேவன் கவனித்துக்கொண்டிருக்கிறதை வெளிப்படுத்துகின்றனர்.

“தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார். என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய் அவர் செவிகளில் ஏறிற்று”. தேவாலயம் இன்னும் கட்டப்படாததால் தேவன் தம்முடைய பரலோக வாசஸ்தலத்தலிருந்து கவனிக்கிறார் என்று தாவீது குறிப்பிடுகிறார்.

பூமிக்கு மேலாக இருக்கும் தமக்கு சொந்தமான வானங்களின் கோபுரத்திலிருக்கிற முணுமுணுப்புகளையும் கூடத்திலிருந்து நம்முடைய ஆழ்ந்த முறுமுறுப்புகளையும், நம்முடைய மெல்லியப்பேச்சுகளை தேவன் கவனிக்கிறார்.

ஒன்றாக துன்பம் அனுபவித்தல்

2013ம் ஆண்டு, எழுபது வயது நிரம்பிய ஜேம்ஸ் மெக்கொன்னெல், ஒரு பிரிட்டிஷ் அரச கடல் வீரர், மரித்தார். மெக்கொன்னெலுக்கு குடும்பம் இல்லை என்பதால் அவர் தங்கி இருந்த முதியோர் இல்லத்தின் ஊழியர்கள், அவருடைய இருதிச் சடங்கில் யாரும் பங்கேற்கமாட்டார்கள் என்று பயந்தனர். மெக்கொன்னெல்லின் நினைவு ஆராதனையை நடத்த அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட ஒரு மனிதர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் இவ்வாறு எழுதினார் : “இந்த நாளிலும், காலத்திலும். துக்கப்பட ஒருவரும் இல்லாமல் இறப்பது சோகமான சம்பவம், ஆனால் இந்த மனிதர் ஒரு குடும்பம்… இந்த முன்னாள் சகோதரருக்கு இறுதி மரியாதை செலுத்த கல்லரைக்கு வரமுடியுமானால் தயவுசெய்து அங்கு வர முயற்ச்சிக்கவும்.” இருநூறு அரச கடற்படையினர் கல்லரைக்கு வந்திருந்தனர்.

இந்த பிரிட்டிஷ் தோழர்கள் வேதாகமத்தின் ஒரு உண்மையை  வெளிப்படுத்தினர் : நாங்கள் ஒருவருக்கொருவர் பிணைக்கப்பட்டிருக்கிறோம். “சரீரம் ஒரே ஒரு அவயவத்தினால் ஆனதல்ல. அதில் அநேக அவயவங்கள் உண்டு” என்று பவுல் 1 கொரிந்தியர் 12:14ல் கூருகிறார். நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அல்ல மாறாக இயேசுவில் பிணைக்கப்பட்டிருக்கிறோம். நாம் சரீரத்தில் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டிருக்கிறோம். “ ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூட சேர்ந்து பாடுப்படும்.” (வச. 26).

இயேசுவில் விசுவாசிகளாய், தேவனின் புது குடும்பத்தில் உறுப்பினர்களாய், நாம் ஒருவருக்கொருவர் வலியை நோக்கி, துன்பத்தை நோக்கி, நாம் தனியாக போக பயப்படும் இருண்ட இடங்களுக்கும் செல்ல நகர்கிறோம். ஆனால் அதிர்ஷ்டவசமாக நாம் தனியாக செல்வதில்லை.

நாம் தனியாக இருளில் ழூழ்கிக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே நம் துன்பத்தின் மிக மோசமான பகுதி. ஆனால் நம்மோடு பாடுபட ஒரு புதிய சமூகத்தை தேவன் உருவாக்குகிறார். யாரும் இருளிலே விடப்பட்டு விடக்கூடாத ஒரு புதிய சமூகம்.