2013ம் ஆண்டு, எழுபது வயது நிரம்பிய ஜேம்ஸ் மெக்கொன்னெல், ஒரு பிரிட்டிஷ் அரச கடல் வீரர், மரித்தார். மெக்கொன்னெலுக்கு குடும்பம் இல்லை என்பதால் அவர் தங்கி இருந்த முதியோர் இல்லத்தின் ஊழியர்கள், அவருடைய இருதிச் சடங்கில் யாரும் பங்கேற்கமாட்டார்கள் என்று பயந்தனர். மெக்கொன்னெல்லின் நினைவு ஆராதனையை நடத்த அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட ஒரு மனிதர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் இவ்வாறு எழுதினார் : “இந்த நாளிலும், காலத்திலும். துக்கப்பட ஒருவரும் இல்லாமல் இறப்பது சோகமான சம்பவம், ஆனால் இந்த மனிதர் ஒரு குடும்பம்… இந்த முன்னாள் சகோதரருக்கு இறுதி மரியாதை செலுத்த கல்லரைக்கு வரமுடியுமானால் தயவுசெய்து அங்கு வர முயற்ச்சிக்கவும்.” இருநூறு அரச கடற்படையினர் கல்லரைக்கு வந்திருந்தனர்.

இந்த பிரிட்டிஷ் தோழர்கள் வேதாகமத்தின் ஒரு உண்மையை  வெளிப்படுத்தினர் : நாங்கள் ஒருவருக்கொருவர் பிணைக்கப்பட்டிருக்கிறோம். “சரீரம் ஒரே ஒரு அவயவத்தினால் ஆனதல்ல. அதில் அநேக அவயவங்கள் உண்டு” என்று பவுல் 1 கொரிந்தியர் 12:14ல் கூருகிறார். நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அல்ல மாறாக இயேசுவில் பிணைக்கப்பட்டிருக்கிறோம். நாம் சரீரத்தில் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டிருக்கிறோம். “ ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூட சேர்ந்து பாடுப்படும்.” (வச. 26).

இயேசுவில் விசுவாசிகளாய், தேவனின் புது குடும்பத்தில் உறுப்பினர்களாய், நாம் ஒருவருக்கொருவர் வலியை நோக்கி, துன்பத்தை நோக்கி, நாம் தனியாக போக பயப்படும் இருண்ட இடங்களுக்கும் செல்ல நகர்கிறோம். ஆனால் அதிர்ஷ்டவசமாக நாம் தனியாக செல்வதில்லை.

நாம் தனியாக இருளில் ழூழ்கிக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே நம் துன்பத்தின் மிக மோசமான பகுதி. ஆனால் நம்மோடு பாடுபட ஒரு புதிய சமூகத்தை தேவன் உருவாக்குகிறார். யாரும் இருளிலே விடப்பட்டு விடக்கூடாத ஒரு புதிய சமூகம்.