கால்நடை பண்ணைக்கு அருகில் வசித்து வந்த மைக்கேல் என்ற நகைச்சுவை நடிகர், மேய்ச்சலின் போது, மாடுகள் தன்னைப் போலவே எப்படி அலைந்து திரிகிறது என்பதை கவனித்தார். மாடு பசுமையான மேய்ச்சல் நிலங்களைத் தேடி நகர்ந்துக் கொண்டே இருக்கும். பண்ணையின் ஓரத்தில் ஒரு நிழல் மரத்தின் கீழ் பசுமையான புற்களை கண்டுபிடிக்கும். உடைந்துப்போன வேலிக்கு அப்பால் சுவையான பசுமையான ஒரு கொத்து இருந்தது. பின்னர் மாடு வேலிக்கு அப்பால் சென்று பிறகு சாலையிலிருந்தே வெளியேறக்கூடும். பின்னர் அது மெதுவாக தன் வழியிலிருந்து காணாமல் போய்விடும்.

இந்த சுற்றித் திரிகிற பிரச்சனை மாடுகளுக்கு மட்டும் இல்லை, ஆடுகளும் சுற்றித் திரிகின்றன, ஆனால் மனிதர்களும் வழியை விட்டு விலகுகிப் போகிற போக்குள்ளவர்களாய் இருக்கிறார்கள்.

இதனால் தான் வேதாகமத்தில் தேவன் நம்மை ஆடுகளோடு ஒப்பிடுகிறார். பொறுப்பற்ற சமரசங்கள் மற்றும் முட்டாள்தனமான முடிவுகளை எளிதாக எடுத்து நாம் அலைந்து திரிந்தும், வழியைவிட்டு விலகியும் விடுகிறோம். ஆனால், சத்தியத்தை விட்டு எவ்வளவோ விலகி சென்று விட்டோம் என்பதை நாம் கவனிக்கிறதில்லை.

பரிசேயர்களுக்கு, இயேசு காணாமல் போன ஆட்டின் கதையை கூறினார். தன்னிடமிருந்த தொண்ணூற்று ஒன்பது ஆடுகளை விட்டுவிட்டு காணாமல் போன ஒரு ஆட்டை தேடிச் சென்ற மேய்ப்பனுக்கு அந்த ஒரு ஆடு மிகவும் மதிப்புள்ளதாய் இருந்தது. காணாமல் போன அதை அவன் கண்டுப்பிடித்த போது அவன் சந்தோஷப்பட்டான் (லூக். 15:6).

மனந்திரும்பி அவரிடம் வருபவர்களினிமித்தம் தேவனும் அப்படியே சந்தோஷப்படுவார். காணாமல் போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன். என்னோடேகூட சந்தோஷப்படுங்கள் (வ 6) என்று இயேசு கூறுகிறார். நம்மை பாவத்திலிருந்து மீட்கவும் பாரலோகம் சேர்க்கவும் தேவன் நமக்காக ஒரு இரட்சகரை அனுப்பினார்.