லீனாவுக்கு அவர் அளித்த வக்குறுதிகளால் ஈர்க்கப்பட்ட ஜான், தனது திருமண உறுதிமொழிகளை மீண்டும் மீண்டும் கூறும்போது தடுமாறினார். அவைகளை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை இல்லாமல் இந்த வாக்குறுதிகளை எப்படி கொடுக்கமுடியும் என்று நினைத்தார். விழாவின் மூலம் அதைச் செய்தார் ஆனால் அவருடைய கடமைகள் கனத்திருந்தது. வரவேற்புக்கு பிறகு, ஜான் தன் மனைவியை தேவாலயத்திற்கு அழைத்துச்சென்று – இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக – லீனாவை நேசிப்பதற்கும், பராமரிப்பதற்கும் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவன் உதவி செய்யவேண்டும் என்று ஜெபித்தார்.

ஜானின் திருமணநாளின் அச்சங்கள் அவரது மனித பலவீனங்களை அங்கீகரிப்பதின் அடிப்படையில் அமைந்தது. ஆனால், தேசங்களை ஆபிரகாமின் சந்ததியின் (கலா. 3:16) மூலம் ஆசீர்வதிப்பதாக வாக்குறுதி அளித்த தேவனுக்கு அத்தகைய வரம்புகள் இல்லை. 

யூத கிறிஸ்தவர்கள் விடாமுயற்சசியோடும், பொறுமையோடும் இயேசுவின் மேல் தாங்கள் வைத்திருக்கிற விசுவாசத்தைத் தொடர வேண்டுமென்றும் கூறி,  ஆபிரகாமுக்கு தேவன் அளித்த வாக்குறுதியையும் (எபி. 6:13-15), அவர்  பொறுமையாய் காத்திருந்து வாக்குதத்தம்பண்ணப்பட்டதை பெற்றுக்கொண்டதையும் நினைவுகூர்ந்தார். ஆபிரகாம் மற்றும் சாராள் மூத்த குடிமக்கள் என்ற நிலையில் இருந்தாலும்   தேவன் வாக்குபண்ணின “பெருகவே பெருகப்பண்ணுவேன்” (வ14) என்பதை நிறைவேற்ற ஒரு தடையாய் இருந்ததில்லை.

நீங்கள் சோர்ந்துபோய், பலவீனமான மனிதனாய் இருக்கும்போது தேவன் மேல் நம்பிக்கை வைக்க அழைக்கப்படுகிறீர்களா? உங்கள் கடமைகளை கடைபிடிக்க, உறுதிமொழிகளையும் சபதங்களையும் நிறைவேற்ற போராடிக்கொண்டிருக்கிறீர்களா? 2 கொரிந்தியர் 12:9ல் “என் கிருபை உனக்கு போதும். பலவீனத்தில் என் பலம்  பூரணமாய் விளங்கும்” என்று தேவன் நமக்கு உதவி செய்ய வாக்களித்திருக்கிறார். முப்பத்தாறு வருடங்களுக்கு மேலாக ஜான் லீனா தம்பதியருக்கு தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவன் உதவி செய்திருக்கிறார். உங்களுக்கும் உதவி செய்வார் என்று ஏன் நம்பக்கூடாது?