பெலவீனரை விடுவி
சுவிட்சர்லாந்தில் விடுமுறையை கழிப்பதையா? அல்லது ப்ராக் நகரில் ஆபத்தில் இருக்கும் குழந்தைகளை மீட்டுக் கொள்வதையா? எதை நீ தேர்ந்தெடுப்பாய்? நிக்கோலாஸ் வின்டன் என்ற சாதாரண மனிதன், இரண்டாவதை தெரிந்து கொண்டார். 1938 ஆம் ஆண்டு, செக்கோஸ்லோவேகியாவுக்கும், ஜெர்மனிக்கும் இடையே யுத்தம் ஆரம்பிப்பதைப் போல இருந்த போது, ப்ராக்கிலுள்ள அகதிகள் முகாமை நிக்கோலாஸ் பார்வையிட்ட போது, அநேக யூதக் குழந்தைகள் பரிதாபமான நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதைக் கவனித்தார். அவர்களுக்கு கட்டாயமாக உதவும்படி, ஒரு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டியதின் அவசியத்தை உணர்ந்தார். இரண்டாம் உலகப் போர் ஆரம்பிப்பதற்கு முன்பு, அங்குள்ள நூற்றுக்கணக்கான குழந்தைகளை, ப்ராக்கிலிருந்து பாதுகாப்பாக பிரிட்டன் தேசத்திற்கு கடத்தி, பிரிட்டனைச் சேர்ந்த குடும்பங்களால் பாதுகாக்கப் பட, தேவையான பணத்தைச் சேகரித்தார்.
அவருடைய செயல் சங்கீதம் 82 க்கு எடுத்துக் காட்டாக அமைந்தது. “ஏழைக்கும், திக்கற்ற பிள்ளைக்கும் நியாயம் செய்து” விடுவி (வ.3) என்கின்றார். இந்த சங்கீதத்தை எழுதிய ஆசாப், தன்னுடைய ஜனங்களைத் தேவையிலிருப்போரின் நலனுக்காக எழும்பும் படி தூண்டுகின்றார். “பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்” (வ.4) என்கின்றார். நிக்கோலாஸ் ஓய்வுயின்றி உழைத்து அந்த குழந்தைகளை மீட்டது போல, சங்கீதக்காரனும் தங்களின் நியாயத்துக்காக பேசமுடியாத ஏழைகளுக்கும், விதவைகளுக்கும் நீதியையும் பாதுகாப்பையும் தரும்படி அவர்கள் சார்பாக பேசும்படி கூறுகின்றார்.
தற்காலத்தில் எவ்விடமும் யுத்தத்தினாலும், புயலினாலும், மற்ற கஷ்டங்களினாலும் தேவையில் இருக்கும் மக்களைப் பார்க்கின்றோம். நம்மால் அவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாவிட்டாலும் நாம் ஜெபத்தில் அவர்களை நினைப்போம், இந்த சூழ் நிலையில், இருப்பவர்களுக்கு நாம் எந்த விதத்தில் உதவலாம் என்பதை தேவன் நம் வாழ்வில் காட்டுவார்.
ஆவிக்குரிய ஓட்டுனர்
நாங்கள் வாகனம் ஓட்டுவதற்கு கற்றுக் கொண்ட போது, எங்களது ஓட்டுனர் பள்ளியின் அறிவுரையாளர், நாங்கள் சாலை முழுவதையும் பார்க்க வேண்டும், இடர்பாடுகளைக் கண்டறிய வேண்டும், அவை எப்படிப்பட்ட இடையூறை ஏற்படுத்தும் என்பதை முன்னறிய வேண்டும், அதனை நாம் எப்படி எதிர் நோக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும், தேவைபட்டால், நாம் அதனை செயல் படுத்த வேண்டும் என்று கற்பித்தார். இது, நம் மனம் அறிய நடக்கவிருக்கும் ஒரு விபத்தைத் தவிர்க்க, நாம் கையாள வேண்டிய தந்திரம் என்றார்.
இந்த கருத்து, எப்படி நம்முடைய ஆவிக்குரிய வாழ்விற்கும் பொருத்தமானது என்பதை நான் நினைத்துப் பார்த்தேன். பவுல் எபேசு சபை விசுவாசிகளுக்கு, “நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப் போலக் கவனமாய் நடங்கள்” (வ.15) என்கின்றார். அவர்களின் பழைய வாழ்க்கை முறையில், இயேசுவுக்குள் பெற்ற புதிய வாழ்வு, அவர்களுக்கு சில இடர்பாடுகளை ஏற்படுத்தி, அவர்களின் வாழ்வைத் தடம் புரளச் செய்யும் என்பதை அவர் அறிந்திருந்தார் (வ.8,10-11). எனவே அந்த வளரும் சபையினர் கவனமாயிருக்கும்படி அறிவுறுத்துகின்றார்.
மொழிபெயர்க்கப் பட்ட வார்த்தைகளான, “கவனமாய் இருங்கள், எப்படி வாழ்கின்றாய்” என்பன “நீ எவ்வாறு நடக்கின்றாய் என்பதைப் பார்” என்பதாக அர்த்தம் கொள்ளும். இன்னும் சரியாகக் கூறுவோமாயின், சுற்றிலும் பார், இடர்பாடுகளை கவனி, குழியில் விழுவதற்கு ஏதுவான மதுபான வெறி, துன்மார்க்க ஜீவியம் ஆகியவற்றை தவிர்த்து விடு (வ.18) என்று அர்த்தம். நம்முடைய வாழ்விற்கு தேவன் வைத்திருக்கும் சித்தம் என்ன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் (வ.17) என்கின்றார். சக விசுவாசிகளோடு சேர்ந்து பாடி, தேவனுக்கு நன்றி செலுத்துமாறு கூறுகின்றார் (வ.19-20).
நாம் எத்தகைய இடர்களைச் சந்தித்தாலும் சரி, நாம் தடுமாறினாலும் சரி, அவருடைய அளவற்ற வல்லமையையும் கிருபையையும் சார்ந்து கொள்ளும் போது, கிறிஸ்துவுக்குள் நம்முடைய புதிய வாழ்வை அனுபவிப்போம்.
அதிசயமான வெகுமதி
அமெரிக்காவைச் சேர்ந்த டோன்லான் என்ற ஆசிரியர், மிகச் சிறந்த வாசகர். ஒரு நாள், அது அவளுக்கு எதிர்பாராத ஒரு பரிசைக் கொண்டு வந்தது. அவள் தன்னுடைய காப்பீட்டுப் பத்திரத்தில் இருந்த நீண்ட பக்கங்களை வாசித்துக் கொண்டிருந்தாள். அதன் ஏழாவது பக்கத்தில் ஓர் அற்புதமான வெகுமதியைக் கண்டுபிடித்தாள். “வாசிப்பதற்கு வருமானம்” என்ற போட்டியின் ஒரு பகுதியாக அவள் 10,000 டாலர்களை (ஏறத்தாள 72 லட்சம் ரூபாய்), அங்கு சிறியதாக எழுதப் பட்டிருந்த பகுதியை முதலாவது வாசித்த பெண் என்பதற்காகப் பெற்றுக் கொண்டாள். மேலும் அவர்கள் ஆயிரக்கணக்கான டாலர்களை அப்பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு வழங்கி, அப்பகுதியிலுள்ள குழந்தைகளின் படிப்புக்கு உதவினர். “நான் எப்பொழுதுமே சிறியதாக எழுதப்பட்டிருப்பதை வாசிப்பவள். நான் மிகவும் ஆச்சரியப்படத் தக்கவர்களில் ஒருத்தி!” என்றாள்.
தேவனைப் பற்றிய “அதிசயங்களைப் பார்க்கும்படி” அவனுடைய கண்களைத் திறக்குமாறு சங்கீதக்காரன் விரும்புகின்றான் (சங்.119:18). தேவன் தன்னை வெளிப்படுத்த விரும்புகின்றவர் என்பதை தாவீது அறிந்திருக்க வேண்டும், எனவே தான் அவன் தேவனோடு நெருங்கி வாழ ஏங்குகின்றான். தேவன் யார் என்பதை அறிந்து கொள்வதும், அவர் நமக்குத் தந்துள்ளவற்றையும், அவரை எப்படி நெருங்கி பின்பற்ற வேண்டும் என்பதும் அவனுடைய ஆசை (வ.24,98). “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுவதும் அது என் தியானம்” (வ.97) என்கின்றான்.
நாமும், தேவனைக் குறித்தும், அவருடைய குணாதிசயங்களைக் குறித்தும், அவர் தருகின்றவற்றைக் குறித்தும் ஆழ்ந்து சிந்தித்து, அவரைக் குறித்துக் கற்றுக் கொண்டு, இன்னும் அவரை நெருங்கி வருவோம். நமக்கு ஆலோசனை வழங்கவும், நம்மை வழி நடத்தவும் அவரை அறிந்து கொள்ள நம்முடைய இருதயத்தை திறக்கவும் தேவன் ஆவலாய் இருக்கின்றார். நாம் அவரைத் தேடினால், அவர் யார் என்பதை காட்டி, அவருடைய பிரசன்னத்தின் மகிழ்ச்சியினால் நம்மை நிரப்பி, நமக்கு அதிசயங்களைக் காண்பித்து வெகுமதியளிக்கின்றார்.
ஒருபோதும் அதிக பாவமில்லை
“நான் வேதாகமத்தை தொட்டால், என்னுடைய கரத்தில் அது தீப்பிடித்துக்கொள்ளும்” என்று என்னுடைய கல்லூரி பேராசிரியர் கூறினார். என்னுடைய இதயம் கனத்தது. அந்தக் காலை வேளையில் நாங்கள் படித்த ஒரு நாவலில் வேதத்திலுள்ள ஒரு வசனம் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் வாசிக்கும்படியாக நான் என் வேதத்தை எடுத்தப்போது அவர் கவனித்து இப்படியாக கருத்து தெரிவித்தார். என்னுடைய பேராசிரியர் தான் மன்னிக்கப்படுவதற்கு முடியாத ஒரு மகா பெரிய பாவியாயிருப்பதாக உணர்ந்தார். இருந்தாலும் தேவனின் அன்பையும் - நாம் எப்போதும் தேவனின் மன்னிப்பிற்காக அவரை நாடமுடியும் என்று வேதாகமம் கூறுகிறது என்றும் அவரிடம் சொல்வதற்கு எனக்கு தைரியமில்லை.
நெகேமியாவில் மனந்திரும்புதலைப்பற்றியும் மன்னிப்பைப்பற்றியும் உதாரணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரவேலர்கள் அவர்களுடைய பாவங்களினிமித்தம் நாடு கடத்தப்பட்டனர், ஆனால் இப்பொழுது அவர்கள் எருசலேமிற்கு திரும்பி வர அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அங்கு குடியேறியப் போது, வேதப்பாரகனாகிய எஸ்ரா நியாயப்பிரமாணத்தை வாசித்தார். (நெ. 7:73-8:3). அவர்கள் பாவிகளாயிருந்தாலும் தேவன் அவர்களை கைவிடவில்லை என்று நினைவுகூர்ந்து, தங்கள் பாவங்களை அறிக்கையிட்டனர் (9:17,19). அவர்கள் கூப்பிட்டப்போது அவர் கேட்டு, அவருடைய மிகுந்த இரக்கத்தின்படி அவர்களோடு பொறுமையாயிருந்தார் (வச. 27-31).
இதேப்போன்று, தேவன் நம்மிடத்திலும் பொறுமையாயிருக்கிறார். நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு அவரிடம் திரும்பினால் அவர் நம்மை கைவிடமாட்டார். என்னுடைய பேராசிரியரிடம் சென்று அவருடைய பழைய வாழ்க்கை எப்படியிருந்தாலும் இயேசு அவரை நேசிக்கிறார் என்றும், அவருடைய குடும்பத்தில் ஒருவராக இருக்க விரும்புகிறார் என்றும் சொல்ல ஆசைப்படுகிறேன். உங்களைக் குறித்தும் என்னைக் குறித்தும் இயேசு அப்படியே கருதுகிறார். நாம் அவரிடம் மன்னிப்பிற்காக நெருங்கினால் அவர் நம்மை மன்னிப்பார்.
இயேசு அவர்களை மன்னிக்க முடியாத பாவியாய் இருக்கிறதாக உணருகிற யாராவது உங்களுக்குத் தெரியுமா? இயேசு நீதிமான்களுக்காக அல்ல பாவிகளுக்காகவே வந்தார் என்ற சத்தியம் (மாற். 2:17) இப்படிப்பட்ட உணர்வுள்ளவர்களிடம் எப்படிப் பேசுகிறது?
எப்படி நான் இங்கே வந்தேன்?
கனடா ஜெட் விமானத்தில், கடுமையான இருளில், டாரா விழித்துக் கொண்டாள். அவள் இன்னமும் தன்னுடைய இருக்கை பட்டைகளை அணிந்திருந்தாள். மற்ற பயணிகள் எல்லாரும் வெளியேறிய பின்னர், அந்த விமானத்தை நிறுத்தும் இடத்திற்குக் கொண்டு வரும் வரை, அவள் தூங்கியிருக்கின்றாள். ஏன் அவளை மற்றவர்கள் எழுப்பவில்லை? அவள் எப்படி இங்கே வந்தாள்? அவள் தன்னுடைய மூளையைச் சுற்றியிருந்த நூலாம்படைப் பின்னலை உதறி நினைவுபடுத்த முயற்சித்தாள்.
எதிர் பாராத ஓர் இடத்தில் நீ இருந்திருக்கின்றாயா? உன் இளம்வயதிற்கு இத்தகைய வியாதிவரக் கூடாது, இந்த வியாதிக்கு மருத்துவமும் இல்லை. கடைசியாக நீ எடுத்துக் கொண்ட மருத்துவ சோதனைகள் சிறப்பானவையாக உள்ளன. ஏன் அந்த நிலை நீக்கப் பட்டது? நீ உன்னுடைய திருமண வாழ்வின் மிகச் சிறந்த வருடங்களை அனுபவித்துக் கொண்டிருந்தாய். இப்பொழுதோ தனிமையான ஒற்றைப் பெற்றோராக இருக்கின்றாய். பகுதி நேர வேலையே உனக்குண்டு.
நான் எப்படி இங்கு வந்தேன்? “சாம்பலில் உட்கார்ந்து” (யோபு.2:8) யோபுவும் இவ்வாறு ஆச்சரியத்தோடு சிந்தித்திருப்பான். அவன், நொடிப் பொழுதில் தன்னுடைய பிள்ளைகள், செல்வம் மற்றும் சரீர சுகத்தை முற்றிலுமாக இழந்தான். அவன் எப்படி இந்த நிலைக்கு வந்தான் என்பதை அவனால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஆனாலும், அவற்றை நினைவில் கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருந்தான்.
யோபு தன்னைப் படைத்தவரை நினைத்துப் பார்கின்றான், அவர் எத்தனை நல்லவராக இருந்திருக்கின்றார். அவனுடைய மனைவியிடம் “தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம், தீமையையும் பெற வேண்டாமோ?” (வ.10) என்கின்றான். இந்த நல்ல தேவன் உண்மையுள்ளவராய் இருந்ததை யோபு எண்ணிப் பார்க்கின்றான். அவன் புலம்புகின்றான், அவன் பரலோகத்தை நோக்கி கதறுகின்றான். அவன் தன் நம்பிக்கையிலே, “என் மீட்பர் உயிரோடிருக்கிறார்………..என்றும் நான் அறிந்திருக்கிறேன்”, “நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்” (19:25-26) என்கின்றார். யோபு நம்பிக்கையை உறுதியாகப் பற்றிக் கொண்டான், தன்னுடைய கதையின் ஆரம்பத்தையும் முடிவையும் நன்கு நினைவில் வைத்திருந்தான்.