சுவிட்சர்லாந்தில் விடுமுறையை கழிப்பதையா? அல்லது ப்ராக்  நகரில் ஆபத்தில் இருக்கும் குழந்தைகளை மீட்டுக் கொள்வதையா? எதை நீ தேர்ந்தெடுப்பாய்? நிக்கோலாஸ் வின்டன் என்ற சாதாரண மனிதன், இரண்டாவதை தெரிந்து கொண்டார். 1938 ஆம் ஆண்டு, செக்கோஸ்லோவேகியாவுக்கும், ஜெர்மனிக்கும் இடையே யுத்தம் ஆரம்பிப்பதைப் போல இருந்த போது, ப்ராக்கிலுள்ள அகதிகள் முகாமை நிக்கோலாஸ் பார்வையிட்ட போது, அநேக யூதக்      குழந்தைகள் பரிதாபமான நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதைக் கவனித்தார். அவர்களுக்கு கட்டாயமாக உதவும்படி, ஒரு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டியதின் அவசியத்தை உணர்ந்தார்.  இரண்டாம் உலகப் போர் ஆரம்பிப்பதற்கு முன்பு, அங்குள்ள நூற்றுக்கணக்கான குழந்தைகளை, ப்ராக்கிலிருந்து பாதுகாப்பாக பிரிட்டன் தேசத்திற்கு கடத்தி, பிரிட்டனைச் சேர்ந்த குடும்பங்களால் பாதுகாக்கப் பட, தேவையான பணத்தைச் சேகரித்தார்.

அவருடைய செயல் சங்கீதம் 82 க்கு எடுத்துக் காட்டாக       அமைந்தது. “ஏழைக்கும், திக்கற்ற பிள்ளைக்கும்  நியாயம் செய்து” விடுவி (வ.3) என்கின்றார். இந்த சங்கீதத்தை எழுதிய ஆசாப், தன்னுடைய ஜனங்களைத் தேவையிலிருப்போரின் நலனுக்காக எழும்பும் படி தூண்டுகின்றார். “பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்” (வ.4) என்கின்றார். நிக்கோலாஸ் ஓய்வுயின்றி உழைத்து அந்த    குழந்தைகளை மீட்டது போல, சங்கீதக்காரனும் தங்களின் நியாயத்துக்காக பேசமுடியாத ஏழைகளுக்கும், விதவைகளுக்கும் நீதியையும் பாதுகாப்பையும் தரும்படி அவர்கள் சார்பாக பேசும்படி கூறுகின்றார்.

தற்காலத்தில் எவ்விடமும் யுத்தத்தினாலும், புயலினாலும், மற்ற கஷ்டங்களினாலும் தேவையில் இருக்கும் மக்களைப் பார்க்கின்றோம். நம்மால் அவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாவிட்டாலும் நாம் ஜெபத்தில் அவர்களை நினைப்போம், இந்த சூழ் நிலையில், இருப்பவர்களுக்கு நாம் எந்த விதத்தில் உதவலாம் என்பதை தேவன் நம் வாழ்வில் காட்டுவார்.