நாங்கள் வாகனம் ஓட்டுவதற்கு கற்றுக் கொண்ட போது, எங்களது ஓட்டுனர் பள்ளியின் அறிவுரையாளர், நாங்கள் சாலை முழுவதையும் பார்க்க வேண்டும், இடர்பாடுகளைக் கண்டறிய வேண்டும், அவை எப்படிப்பட்ட இடையூறை ஏற்படுத்தும் என்பதை முன்னறிய வேண்டும், அதனை நாம் எப்படி எதிர் நோக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும், தேவைபட்டால், நாம் அதனை செயல் படுத்த வேண்டும் என்று கற்பித்தார். இது, நம் மனம் அறிய நடக்கவிருக்கும் ஒரு விபத்தைத் தவிர்க்க, நாம் கையாள வேண்டிய தந்திரம் என்றார்.

இந்த கருத்து, எப்படி நம்முடைய ஆவிக்குரிய வாழ்விற்கும் பொருத்தமானது என்பதை நான் நினைத்துப் பார்த்தேன். பவுல் எபேசு சபை விசுவாசிகளுக்கு, “நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப் போலக் கவனமாய் நடங்கள்” (வ.15) என்கின்றார். அவர்களின் பழைய வாழ்க்கை முறையில், இயேசுவுக்குள் பெற்ற புதிய வாழ்வு, அவர்களுக்கு சில இடர்பாடுகளை ஏற்படுத்தி, அவர்களின் வாழ்வைத் தடம் புரளச் செய்யும் என்பதை அவர் அறிந்திருந்தார் (வ.8,10-11). எனவே அந்த வளரும் சபையினர் கவனமாயிருக்கும்படி அறிவுறுத்துகின்றார்.

மொழிபெயர்க்கப் பட்ட வார்த்தைகளான, “கவனமாய் இருங்கள், எப்படி வாழ்கின்றாய்” என்பன “நீ எவ்வாறு நடக்கின்றாய் என்பதைப் பார்” என்பதாக அர்த்தம் கொள்ளும். இன்னும் சரியாகக் கூறுவோமாயின், சுற்றிலும் பார், இடர்பாடுகளை கவனி, குழியில் விழுவதற்கு ஏதுவான மதுபான வெறி, துன்மார்க்க ஜீவியம் ஆகியவற்றை தவிர்த்து விடு (வ.18) என்று அர்த்தம். நம்முடைய வாழ்விற்கு தேவன் வைத்திருக்கும் சித்தம் என்ன என்பதை    உணர்ந்து கொள்ள வேண்டும் (வ.17) என்கின்றார். சக விசுவாசிகளோடு சேர்ந்து பாடி, தேவனுக்கு நன்றி செலுத்துமாறு கூறுகின்றார் (வ.19-20).

நாம் எத்தகைய இடர்களைச் சந்தித்தாலும் சரி, நாம் தடுமாறினாலும் சரி, அவருடைய அளவற்ற வல்லமையையும் கிருபையையும் சார்ந்து கொள்ளும் போது, கிறிஸ்துவுக்குள் நம்முடைய புதிய வாழ்வை அனுபவிப்போம்.