24 காரட் தங்கம் என்பது, ஒரு சில மாசுக்களைக் கொண்ட, 100%  சுத்தமான தங்கமாகும். ஆனால், இத்தகைய சுத்தத்தை அடைவது மிகக் கடினம். சாதாரணமாக, சுத்திகரிப்பாளர்கள் இரண்டு சுத்திகரிப்பு முறைகளைக் கையாளுகின்றனர். இவற்றுள், மில்லர் முறை, விரைவாகவும், குறைந்த செலவிலும் செய்யக் கூடியது. ஆனால், இதன் விளைவாகக் கிடைக்கக் கூடிய தங்கம் 99.95% தான் சுத்தமாக இருக்கும். வோல்ஹில் முறையில் சுத்திகரிப்பதற்கு அதிக நேரம் எடுக்கும், அதிக செலவாகும். ஆனால் இதில் கிடைக்கும் தங்கம் 99.99% சுத்தமானது.

வேதாகமம் எழுதப் பட்ட காலத்தில், தங்கத்தைச் சுத்திகரிக்க, நெருப்பை பயன் படுத்தினர். நெருப்பு, மாசுக்களை உருகிய தங்கத்தின் மேற்பரப்பிற்குக் கொண்டு வந்து விடும், அதனை எளிதில் நீக்கி விடலாம். ஆசியா மைனரிலுள்ள (வடக்கு துருக்கி) இயேசுவின் விசுவாசிகளுக்கு அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதிய முதல் கடிதத்தில், அக்கினியால் பொன் சுத்திகரிக்கப் படுவதுபோல,  விசுவாசியின் வாழ்வில், சோதனைகள் செயல்படும் என்று ஒப்பிடுகின்றார். அந்நாட்களில் அநேக கிறிஸ்தவர்கள், அவர்களின் விசுவாசத்தின் நிமித்தம், ரோமானியர்களால் துன்புறுத்தப்பட்டனர். பேதுரு அதனை நேரில் பார்த்தவர். துன்பங்கள் வழியாக “உண்மையான விசுவாசம்” வெளிப்படுத்தப்படும் என்று பேதுரு  விளக்குகின்றார் (1 பேதுரு 1:7).

ஒரு வேளை நீயும் சுத்திகரிக்கப் படும் நெருப்பில் இருப்பதைப் போன்று உணரலாம்.  புடமிடும் நெருப்பின் உஷ்ணமாகிய பின்னடைவு, வியாதி அல்லது மற்ற சவால்களை உணரலாம். நாம் இந்த வேதனையின் மத்தியில் தேவனை நோக்கி, இந்த சுத்திகரிப்பு முறையை சீக்கிரம் முடித்துவிடுமாறு கெஞ்சலாம். ஆனால், வாழ்வு வேதனைப் படுத்தினாலும், நமக்கு எது சிறந்தது என்பதை தேவன் அறிவார். இரட்சகரோடு தொடர்பில் இரு, அவர் தரும் ஆறுதலையும் சமாதானத்தையும் பெற்றுக்கொள்.