என்னுடைய பேரன், பொழுது போக்கு பூங்காவில், ரோலர் கோஸ்டர் ராட்டின வரிசைக்கு வேகமாக ஓடி, அதில் ஓடுவதற்குப் போதிய அளவு உயரத்தைக் கொண்டிருக்கிறானா என்பதைக் குறிக்கும் அடையாளத்தினிடம் போய் நின்றான். அவனுடைய தலை அந்த அளவுக்கு மேலே இருந்ததால், மகிழ்ச்சியில் கத்தினான்.

நம்முடைய வாழ்விலும் போதிய அளவு என்பது அடிக்கடி தேவைப் படுகின்றதல்லவா?  ஓட்டுனர் தேர்வுக்குள் நுழைவதற்கு, வாக்களிப்பதற்கு, திருமணம் செய்துகொள்ள என அநேக காரியங்களுக்கு, என்னுடைய பேரனைப் போல, வளர வேண்டும் என்ற ஏக்கத்தோடு வாழ்கின்றோம்.

புதிய ஏற்பாடு எழுதப்பட்ட காலத்தில், குழந்தைகளை நேசித்தனர், ஆயினும், அவர்கள் வயதுவந்தோருக்கான சலுகையோடு, தங்கள் வீட்டிற்கும் உதவிசெய்யவும், தேவாலயத்திற்குள் செல்லவும்   “போதிய வயது வரும் வரை”, அவர்களைச் சமுதாயம் உயர்வாக மதிக்கவில்லை. அந்நாட்களில் இருந்த இந்த நிலையை, இயேசு முற்றிலும் மாற்றினார். வறியோரையும், பெலவீனரையும், குழந்தைகளையும் அவர் வரவேற்றார்.  பெற்றோர் தங்கள்       குழந்தைகள் மீது இயேசு தம் கரங்களை வைத்து ஜெபிக்கும் படி அவரிடம் கொண்டு வருகின்றனர் என்பதை மூன்று சுவிசேஷங்களிலும் (மத், மாற், லூக்) காண்கின்றோம் (மத்.19:13; மாற்.10:16).

சீஷர்கள் அவர்களை விரட்டியடிக்கின்றனர். அதனை ஓர் இடைஞ்சலாகக் கருதினர். இதனைக் கண்ட இயேசு அவர்களைக்  கடிந்து கொள்கின்றார் (மாற். 10:14), சிறு பிள்ளைகளுக்கு தன்னுடைய கரங்களை விரிக்கின்றார், அவர்களின் மதிப்பை பரலோகத்தில் உயர்த்துகின்றார், மற்றவர்களிடம் குழந்தைகளை ஒதுக்கித் தள்ளாமல், அவர்களைப் போல மாறி, இயேசுவையும்  அறிந்து ஏற்றுக் கொள்ளுமாறு கூறுகின்றார் (லூக்.18:17). நாம்     குழந்தையைப் போல மாறுகின்ற அளவு தான்,  நாம் தேவனுடைய  அன்பைப் பெற்றுக்கொள்ளத் தேவையான “போதிய அளவு” ஆகும்.