தெற்கு அமெரிக்காவில் வாழ்ந்த ஜோனா என்ற பெண், சிறைச்சாலையில் வாழும் கைதிகளுக்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கொடுப்பதன் மூலம், அவர்களுக்கு நம்பிக்கையை வழங்குவதில் கருத்தாயிருந்தார். ஜோனா அனுதினமும், மன்னிப்பையும், மனம் பொருந்துதலையும் பற்றிய ஒரு சிறிய சுவிசேஷ செய்தியுடன் சிறைக்கைதிகளைச் சந்தித்து வந்தாள். அவள் அந்த கைதிகளின் நம்பிக்கையைச் சம்பாதித்தாள், அவர்களும் தங்களின் குழந்தைப் பருவத்தில் தங்களுக்கு இழைக்கப் பட்ட அநீதிகளைப் பகிர்ந்து கொண்டனர். அவளும், முரண்பாடுகளை எப்படி தீர்த்துக் கொள்வது என்பதைப் பற்றி அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தாள். அவள் அங்கு செல்வதற்கு முந்தின ஆண்டு, அந்த சிறைச் சாலையில், 279 வன்முறைச் செயல்கள், கைதிகளுக்கிடையேயும், காவலர் மீதும் நடத்தப்பட்டதாகவும், அடுத்த ஆண்டு, இரண்டு வன்முறைச் செயல்கள் மட்டுமே நடந்ததாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புதுச் சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின” (2 கொரி.5:17) என அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகின்றார். புதிதாக்கப்படுதலை ஃப்ளான்டர்- தாமஸ் கண்டது போல நாம் காணாவிட்டாலும், சுவிசேஷத்தின் வல்லமையே உலகிற்கு பெரும் நம்பிக்கையூட்டும் வல்லமை. புதிய படைப்புகள் என்பது எத்தனை ஆச்சரியமான சிந்தனை! இயேசு கிறிஸ்துவின் மரணம், நம்மை அவரைப் போல மாற்றும் ஒரு பயணத்திற்கு அழைத்துச் செல்கின்றது. நாம் அவரை முகமுகமாய் சந்திக்கும் போது, இந்த பயணம் முடிவடைகின்றது (1 யோவா. 3:1-3).
இயேசுவின் விசுவாசிகளாகிய நாம் புதிதாக்கப்பட்ட நம் வாழ்வைக் கொண்டாடுகின்றோம். ஆயினும் கிறிஸ்து அதற்காகச் செலுத்தின கிரயத்தை மறந்து விடக் கூடாது. அவருடைய மரணம் நமக்கு வாழ்வைக் கொடுக்கின்றது. “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்” (2 கொரி .5:21).
இயேசு, புதிதாக்குகின்ற வேலையை உன் வாழ்வில் செய்கிறார் என்பதை எவ்வாறு உணர்கின்றாய்? இன்னமும் எப்பகுதிகளில் “புதிதாக்குதல்” தேவையாயிருக்கின்றது?
அன்புள்ள தந்தையே, இயேசு கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றின காரியத்தின் மூலம், நான் புதிய படைப்பாக மாறுகின்றேன். நான் கழைந்து போட வேண்டிய, பழையவற்றிற்கு திரும்பிய நேரங்களை மன்னித்தருளும்.
