ஒரு பெண் என்னைத் தவறாக நடத்தியதோடு, என்னைக் குற்றப்படுத்தி, என்னைக் குறித்து தவறாகப் பிறரிடமும் கூறிய போது, என்னுடைய கோபம் அதிகரித்தது. நான், அவள் செய்த காரியத்தை அனைவருக்கும் தெரிவிக்க விரும்பினேன். அவள் நடந்து கொண்ட விதத்தால், நான் கஷ்டப்படுதைப் போன்று, அவளும் கஷ்டம் அநுபவிக்கட்டும் என்று எனக்குத் தலைவலி தோன்றும் வரை, என்னுடைய கோபத்தால் கொப்பளித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய தலைவலி நீங்குமாறு ஜெபித்த போது, பரிசுத்த ஆவியானவர் என்னுடைய குற்றத்தை உணர்த்தினார். நான் பழிவாங்க வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டு, எப்படி தேவனிடம் விடுதலை தரும்படி கெஞ்ச முடியும்? அவர் என்னைப் பாதுகாத்துக் கொள்வார் என்று நான் நம்பும் போது, இந்த சூழ்நிலையையும் அவர் பார்த்துக் கொள்வார் என்று நான் ஏன் நம்பக் கூடாது? காயப்படுத்துகின்ற மக்கள், பிறரை அடிக்கடி மற்றவரை காயப்படுத்திக் கொண்டேதான் இருப்பர் என்பதை அறிந்திருந்த நான் அந்த பெண்ணை மன்னிப்பதற்கு தேவனிடம் உதவி கேட்டதோடு, மனம் பொருந்தவும் முயற்சித்தேன்.
அநியாயமாக நாம் நடத்தப் படும் போது, தேவன் மீது நம்பிக்கையோடு இருப்பதின் கஷ்டத்தை சங்கீதக்காரனான தாவீது அறிந்திருந்தார். ஓர் அன்பான பணிவிடைக் காரனாக இருக்க தாவீது எவ்வளவோ முயற்சித்த போதும், பொறாமை கொண்ட சவுல் அரசன், தாவீதை கொல்ல விரும்பினான் (1 சாமு.24:1-2). தேவன் தன்னுடைய திட்டத்தை செயல் படுத்தி, அவனை அரசனாக்கும்படி தயாரித்துக் கொண்டிருந்த போது, அவன் கஷ்டங்களைச் சகித்தான். ஆனாலும் அவன், பழிவாங்குவதையல்ல, தேவனை மகிமைப் படுத்துவதையே தெரிந்து கொண்டான் (வ.3-7). அவன் சவுலோடு மனம் பொருந்தும்படி, காரியங்களைச் செய்தான், அதன் பலனை தேவனுடைய கரத்தில் கொடுத்து விட்டான் ( வ.8-22).
தவறு செய்கின்றவர்கள் தண்டிக்கப்படாமல் நன்றாக வாழ்ந்து கொண்டிருப்பதைக் காண்கின்றோம். அநியாயத்தின் நிமித்தம் நாம் கஷ்டங்களைச் சகிக்கின்றோம். தேவனுடைய இரக்கம் நம்முடைய இருதயங்களிலும், மற்றவர்களின் இருதயங்களிலும் கிரியை செய்யும் போது, அவர் நம்மை மன்னித்தது போல நாமும் பிறரை மன்னிக்க முடியும், அவர் நமக்கு ஆயத்தம் பண்ணிவைத்துள்ள ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்.
பாவம் உன்னை மேற்கொள்ளுவது போலத் தோன்றும் போது, தேவன் குறைவற்றவர், அன்புள்ளவர், நல்லவர், எல்லாவற்றையும் ஆளுகை செய்கின்றவர் என்ற நம்பிக்கை எவ்வாறு உனக்கு உதவியாக உள்ளது? யாரை நீ மன்னித்து, தேவனுடைய வல்லமையும் இரக்கமும் உள்ள கரங்களில் வைக்கப் போகின்றாய்?
இரக்கமுள்ள தேவனே, அநியாயங்கள் நடப்பதை நீர் கவனித்துக் கொள்வீர் என்பதில் நம்பிக்கையோடு இருக்க, தயவாய் எனக்கு உதவியருளும்.